எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தடுப்பது எப்படி?
உயிர் குடிக்கும் கொசு! தடுப்பது எப்படி?

தமிழகம் இதுவரை சந்தித்திராத மாபெரும் மருத்துவ நெருக்கடியை எதிர் கொண்டு இருக்கிறது. டெங்குவுக்குபலியாவோர் எண்ணிக்கை நாள் தோறும் அதிகரித்து, தமிழக மெங்கும் மரண ஓலம் கேட்கிறது. பெண்கள், குழந்தைகள் உட்பட நுாற்றுக்கும் மேற்பட் டோர் பலியானதாக அன்றாடம் செய்திகள் வெளியாகிவரும் நிலையில், 'அப்படியெல்லாம் இல்லை' என, முழுப் பூசணியை சோற்றில் புதைத்து மறைக்க முயற்சிக்கிறது தமிழக அரசு.

 உயிர்,குடிக்கும்,கொசு!,தடுப்பது, எப்படி?

டெங்குவின் தீவிரத்தை குறைக்க அரசின் தடுப்பு நடவடிக்கைகள் மட்டுமே போதாது; மக்களுக்கு விழிப்புணர்வும் வேண்டும் என்கின்றனர், மருத்துவர்கள்.

வைரஸ் 4 வகை


டெங்கு வைரஸில் டைப்- 1, டைப் -2, டைப்- 3 மற்றும் டைப்- 4 என, நான்கு வகைகள் உள்ளன. டைப் 1 மற்றும் டைப், 4 ஒரே மாதிரி யான அமைப்பு கொண்டவை. தமிழகத்தை இவ்விரு வகையான வைரஸ்கள் தான் ஆட்டிப் படைத்து, அப்பாவி மக்களின் உயிரைக் குடித்துக்கொண்டிருக்கின்றன. இவ்விரண்டுமே மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன.

கொசுவின் 'ஆக்டிவ் டைம்'


வெப்ப மண்டலம் மற்றும் வெப்ப மண்டலம் சார்ந்த நாடுகளில் காணப்படும் 'ஏடிஸ் ஏஜிப்டி' (Aedes aegypti) என்ற ஒரு வகை கொசுவால் தான், டெங்கு பரவுகிறது. இக்கொசுவை எளிதில் அடையாளம் காணமுடியும். கருமை நிறக்காலில் வெள்ளை வரிகள் காணப்படும். இக்கொசுக்கள் பொதுவாக காலை, 8:00 முதல் பிற்பகல், 3:00 மணி வரைஉலாவி மனிதர்களை கடித்து வந்தன. (இந்த இடைப்பட்ட நேரத்தில் அவை, 'ஆக்டிவ்'வாக இருக்கும்என்றும், சீதோஷண நிலையும் இதற்கு ஒரு காரணம் எனவும் கூறப்படுகிறது). தற்போது, இவ்வகை கொசுக்களின் வீரியத்தன்மை மாலை, 6:00 மணி வரைக்கும் அதிகரித்திருப்பதாக சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

டெங்கு மாதம்


டெங்கு காய்ச்சல் பாதிப்பு கடந்த காலங்களில், அக்., துவங்கி மார்ச் வரை இருந்தது. ஆனால் தற்போது , ஏப்ரல் மற்றும் மே தவிர்த்து, ஆண்டு முழுவதும் இதன் பாதிப்பு இருப்பதாக சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.இதன் விளைவாகவே, தமிழகம் முழுவதும் நடப்பாண்டில் பெண்கள், குழந்தைகள் என

, 116 பேர் உயிரிழந்திருப்பதாகவும், பல்லாயிரக் கணக்கானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

குட்டீஸ் ஜாக்கிரதை


பெண்கள், குழந்தைகளை டெங்கு கடுமையாக தாக்குகிறது. காரணம், நோய் எதிர்ப்பு சக்தி இவர்களுக்கு மிகவும் குறைவாக இருக்கும். நீரிழிவு, ஈழை நோய் போன்ற நீண்டகால நோய்கள் உள்ள வர்கள் உஷாராக இருக்க வேண்டும். தாக்கினால் உயிருக்கு ஆபத்தாக முடியும்.

செய்ய வேண்டியது என்ன?


தொடர் காய்ச்சல் பாதித்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை அணுக வேண்டும். டெங்கு அறிகுறியுடன் மருத்துவமனைக்கு வருவோருக்கு முதலில், ரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் (platelets) எண்ணிக்கையை அறியும் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

சராசரியாக ஒரு மனிதனின் ரத்தத்தில், அவரவர் வயதிற்கேற்ப, 1.5 லட்சம் முதல் 4 லட்சம் வரை, தட்டணுக்கள் இருக்க வேண்டும். இந்த எண்ணிக்கை, 60 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தால், அவர்களுக்கு டெங்கு இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. அதை உறுதி செய்யவதற்கான பரிசோத னைகள் செய்யப்பட்டு, கூடவே, தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான சிகிச்சையும் அளிக்கப்படும்.

நிலவேம்பு கஷாயம்


நிலவேம்புப் பொடி என்பது நில வேம்பு, வெட்டிவேர், விலாமிச்சை வேர், சந்தனம், பேய் புடல், பற் படாகம், சுக்கு, மிளகு,கோறைக் கிழக்கு போன்றவை சேர்ந்த பொடியாகும்.ஐந்து முதல், 10 கிராம் அளவு நிலவேம்பு பொடியை, 200 மி.லி., தண்ணீரில் கலந்து, 50 மி.லி., அளவுக்கு சுண்டும் வரை நன்றாக காய்ச்சி கொதிக்க வைக்க வேண்டும்.

அப்போதுதான் காய்ச்சலை குணப்படுத்துவதற்கான வேதிப்பொருட்கள் தண்ணீரில் கலந்து மருந்தாக மாறும். அதன்பின் கஷாயத்தை வடிகட்டி குடிக்க வேண்டும்.காய்ச்சல் உள்ளவர்கள் காலை, மதியம், இரவு என, மூன்று வேளையும் குடிக்க வேண்டும். தயாரித்த கஷாயத்தை மூன்று மணி நேரத்துக்குள் குடித்துவிட வேண்டும். அதற்கு மேல் அதில் வீரியம் இருக்காது. அதன்பின் குடித்தால் எந்த பலனும் இருக்காது. எனவே ஒவ்வொரு வேளைக்கும் கஷாயத்தை புதிதாக தயாரித்து குடிப்பதே நல்லது.

பருகலாம் பப்பாளி இலை சாறு


புதிதாக பறித்த பப்பாளி இலைகளில் உள்ள காம்புகளை அகற்றிவிட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து அல்லது இடித்து வடிகட்டி, 10 மில்லி வீதம் நாளொன்றுக்கு 4 முறை அருந்த வேண்டும். பப்பாளி இலையில் 'ஆன்டி-மலேரியல்' மற்றும் நோய் எதிர்ப்பு தன்மை அதிகம் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே இந்த இலையின் சாற்றை மலேரியா மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அருந்தி வந்தால் உடலில் உள்ள நோயை தடுக்கவும் முடிகிறது. பப்பாளி இலையில் வைட்டமின்

Advertisement

ஏ, பி, ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து உள்ளதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

பாதிப்பு அறிகுறிகள்


* தொடர் காய்ச்சல்; திடீரென அதிகரிப்பது.
* தலையின் பின்புறம் திடீர் வலி
*விழியின் உட்புறமாக வலித்தல்
* உடல்வலி(தசை, எலும்பு வலி)
* களைப்பு, வாந்தி,குமட்டல்
* தொண்டையில் புண்; எச்சில் விழுங்க முடியா நிலை
* உணவுச் சுவையில் மாற்றம் (டேஸ்ட் தெரியாமை)
* தோல் தடித்து சிவந்த நிறமடைதல்
* 2 நாட்களுக்கு மேலாக முட்டி, முழங்கால் வலி
* தீவிர உடல் வலியுடன் குளிர்காய்ச்சல்.

அபாய நிலை:

கடந்த 3 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், 2017ம் ஆண்டு டெங்கு பாதிப்பு கடுமையாக இருந்து வருகிறது. தமிழகத்தில் இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை, ஏறத்தாழ 50 ஆயிரம் பேர் டெங்குவால் பாதித்துள்ளனர். ஆனால், அரசு தரப்பில், 6,919 பேர் மட்டுமே என கூறப்படுகிறது.

இப்படிச் செய்யாதீர்கள்


தொடர் காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். சுயமாக கடைகளில் மருந்து மாத்திரை வாங்கி உட்கொள்ளக்கூடாது. பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள் குழந்தைகளாக இருப்பின் தாமதிக்காமல் மருத்துவரை நாட வேண்டும்; கை வைத்தியம் கூடவே, கூடாது.

தமிழகத்தில் அதிகம்டெங்கு பாதிப்பில் கேரளா, தமிழகம்,கர்நாடகா மாநிலங்கள் முதல் மூன்றுஇடங்களை பிடித்து உள்ளன. தமிழகத்தில், கோவை, திருப்பூர், திருச்சி, நாகர்கோவில்,தர்மபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு தீவிரமாக உள்ளது.

2.65 லட்சம் பேர்:


நாடு முழுவதும் கடந்த மூன்றாண்டுகளில், (2017, ஆக., 20 வரை) 2.65 லட்சம் பேர் டெங்கு பாதிப்புக்கு உள்ளாகினர். அவர்களில், 523 பேர் உயிரிழந்தனர்.


Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raghavan - Srirangam, Trichy,இந்தியா
09-அக்-201715:20:41 IST Report Abuse

raghavanவசதியில்லா குடும்பத்தினருக்கு வாரம் இருமுறை நிலவேம்பு பப்பாளி சாறுடன் ஒரு முறை இரண்டு கொசுவலைகள், கொசு அடிக்கும் பேட்டுகள், கொசுவர்த்தி சுருள் பாக்கெட்டு, மேற்பூச்சும் களிம்புகள் ஆகியவற்றை அரசு இலவசமாக வழங்கலாம்.

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
09-அக்-201714:18:23 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்இந்த ஹீலர் பாஸ்கர், மருத்துவர்ன்னுட்டு ஒரு கோமாளி கொசுக்களினால் எந்த நோயும் வாறதில்லைன்னு வாட்சப்பில் உளறி அதை நம்பும் முட்டாள்களுக்கு அனுப்பி வைக்கிறான். அந்த முட்டாள்களோ அதை டெங்கு கொசுக்களை போல மற்றவர்களுக்கும் பரப்புகின்றனர். neengaL sameepaththil சட்டத்தை வைத்து பொய்ப்பிரச்சாரம் செய்கிறான், டெங்குவை பரப்புகிறான், போலி மருத்துவன் என்று பல பிரிவுகளில் அந்த முட்டாளை கையை காலை உடைத்து வையுங்கள் மை லார்டு..

Rate this:
Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா
09-அக்-201711:28:43 IST Report Abuse

Tamizhan kanchiவிரிவான நோய் தடுப்பு. மற்றும் டெங்கு கொசுக்களின் விவரங்களை மக்களுக்கு தெரிவித்தமைக்கு தினமலருக்கு. நன்றி நன்றி .

Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X