பொது செய்தி

இந்தியா

பண்டிகை காலத்தில் சீன பொருட்கள் விற்பனை சரியும்

Added : அக் 10, 2017 | கருத்துகள் (24)
Advertisement
சீன பொருட்கள்,Chinese products, தீபாவளி பண்டிகை , Deepavali festival, இந்தியா, India, அசோசெம் ,Azosem, சென்னை,Chennai, ஆமதாபாத், Ahmedabad, பெங்களூரு, Bangalore, டேராடூன்,Dehradun, டில்லி,
Delhi, ஐதராபாத்,Hyderabad, ஜெய்ப்பூர், Jaipur, லக்னோ,Lucknow, மும்பை ,Mumbai,மொபைல் போன், mobile phone,எல்சிடி டிவி, LCD TV, பொம்மைகள்,toys, அலங்கார மின்விளக்கு, decorative lighting, புதுடில்லி,New delhi

புதுடில்லி: தீபாவளி பண்டிகை காலத்தில், இந்தியாவில் சீன பொருட்களின் விற்பனை 40 - 45 சதவீதம் சரியும் என அசோசெம் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.


ஆய்வு


சீன பொருட்கள் விற்பனை சரிகிறது

டோக்லாம் விவகாரத்தில் இந்திய சீனா இடையே பதற்றம் நிலவியது. இதனால், அந்நாடு மீது அதிருப்தியடைந்த இந்திய மக்கள் சீன பொருட்கள் வாங்குவதை குறைத்து கொண்டனர்.இது தொடர்பாக அசோசெம் அமைப்பு சென்னை, ஆமதாபாத், பெங்களூரு, டேராடூன், டில்லி, ஐ தராபாத், ஜெய்ப்பூர், லக்னோ, மும்பை ஆகிய நகரங்களில் ஆய்வு நடத்தியது.


இருப்பு

அதில், சீனாவில் தயாரான விளக்குகள், பரிசு பொருட்கள், விநாயகர் மற்றும் லட்சுமி சாமி சிலைகள், பட்டாசுகள், மொபைல் உள்ளிட்ட மின்னணு பொருட்கள், பட்டாசுகள், பொம்மைகள் ஆகியவற்றை வாங்குவதை மக்கள் குறைத்து கொண்டுள்ளனனர். இந்தியாவில் தயாரான பொருட்களை வாங்குவதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், இந்திய பொருட்கள் கடைக்காரர்கள் இருப்பு வைத்துள்ளனர். கடந்த வருடம் பண்டிகை காலத்தின் போது ரூ.6,500 கோடிக்கு சீன பொருட்கள் விற்பனையாகின. இவற்றில் பொம்மைகள், அலங்கார மின்விளக்கு, பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவை மட்டும் ரூ.4 ஆயிரம் கோடிக்கு விற்பனையானது. இந்த வருடம் சீன பொருட்களின் விற்பனையானது 40 முதல் 45 சதவீதம் வரை குறையும் என கடைக்காரர்கள் தெரிவித்துள்ளனர். மொபைல் போன், எல்சிடி டிவி உள்ளிட்ட சீன பொருட்களின் தேவையானது 15 முதல் 20 சதவீதம் குறைந்துள்ளது. இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (24)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
11-அக்-201704:45:38 IST Report Abuse
Panneerselvam Chinnasamy சீன பொருட்கள் மட்டுமல்ல எந்த அந்நிய நாட்டு பொருட்களையும் அவசியம் இன்றி வாங்க கூடாது... அதனால் நாட்டின் உற்பத்தி, மற்றும் வேலை வாய்ப்பு , பொருளாதார தன்னிறைவு ஏற்படும்...வெளி நாட்டு பொருட்களை தவறான முறையில் வரி வாய்ப்பு செய்து இறக்குமதி செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்...சீன பொருட்கள் இறக்குமதி மீது "anti dupimg duty " விதித்து இந்திய தொழில்துறை காப்பாற்ற பட வேண்டும்... மக்களின் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும்... மக்களால் தேர்ந்தெடுக்க பட்ட மக்களுக்கான அரசு மக்களை காக்க "pro active " ஆக செயல் படவேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
10-அக்-201719:46:49 IST Report Abuse
g.s,rajan We Indians should hate china products more over everyone should go for Japanese products which would.be of good Quality , durability and worthy even through they are costly. g.s.rajan. Chennai.
Rate this:
Share this comment
Cancel
10-அக்-201718:28:56 IST Report Abuse
அப்பாவி எந்த ஒரு நவீன தொழில் நுட்பப் பொருளும் இங்கே செய்யப் படுவதில்லை... எல்லாத்தையும் வாங்கி இங்கே மேக் இன் இந்தியான்னு சொல்லி உதார் வுட்டுக் கிட்டு இருக்கோம்.... பொருள் விற்பனை சரியக் காரணம் பொருளாதாரம்.... மக்கள் கிட்டே காசு இல்லாம பாத்துக் கிறதில மோடி கில்லாடியா இருக்காரு. சீனப் பொருள் விற்பனை 40% குறைஞ்சா இந்தியப் பொருள் விற்பனை 60% குறையும். அத்த வெளில சொல்லமாட்டாங்க இந்த சொம்புகள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X