328அடி உயர ராமர் சிலை அயோத்தியில் நிறுவ திட்டம்

Added : அக் 10, 2017 | கருத்துகள் (44)
Advertisement
 328 அடி ராமர் சிலை,328 feet Rama statue, அயோத்தி, Ayodhya, லக்னோ, Lucknow, உ.பி.,UP,யோகி ஆதித்யநாத்,Yogi Adityanath,  சரயு நதி, Sarayu River,ஆன்மிக சுற்றுலா,Spiritual Tourism, ராமஜென்ம பூமி , Ramjenma Bhoomi,பாபர் மசூதி , Babur Masjid,தாஜ்மஹால் , Taj Mahal,  தீபாவளி, Diwali,

லக்னோ: உ.பி.,யில், ஆன்மிக சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில், அயோத்தியில், 328 அடி உயர, பிரமாண்ட ராமர் சிலையை நிறுவ, அம்மாநில அரசு திட்டமிட்டு உள்ளது.
உ.பி.,யில், பா.ஜ.,வைச் சேர்ந்த, யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். அயோத்தியில், சரயு நதிக்கரையில், ராமருக்கு, 328 அடி உயர, பிரமாண்ட சிலையை நிறுவி, ஆன்மிக சுற்றுலாவை மேம்படுத்த, முதல்வர் ஆதித்யநாத் திட்டமிட்டு உள்ளார். இந்த சிலை, சர்ச்சைக்குரிய, ராமஜென்ம பூமி - பாபர் மசூதி இடத்துக்கு அருகில் நிறுவப்பட உள்ளது.
உ.பி., மாநில, சுற்றுலா தலங்கள் பட்டியலில், உலக புகழ்பெற்ற, தாஜ்மஹால் நீக்கப்பட்டு உள்ளதால் எழுந்த சர்ச்சை அடங்கும் முன், சர்ச்சைக்குரிய இடம் அருகே, ராமர் சிலையை நிறுவ, உ.பி., அரசு திட்டமிட்டு உள்ளது. ராமர் சிலை நிறுவும் திட்டம், மாநில கவர்னர், ராம் நாயக்கின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது; இருப்பினும், பசுமை தீர்ப்பாயத்திடம், தடையில்லா சான்றிதழ் இன்னும் பெறப்படவில்லை.

அயோத்தியில் பிரமாண்ட ராமர் சிலை

இதற்கிடையே, தீபாவளியை ஒட்டி, சரயு நதிக்கரையில், ஆயிரக்கணக்கான தீபங்கள் ஏற்றும் நிகழ்ச்சி நடக்க உள்ளது; முதல்வர் ஆதித்யநாத், அயோத்தி நகர வீதிகளில், பிரமாண்ட ஊர்வலம் செல்லவும் திட்டமிட்டு உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jysen - Madurai,இந்தியா
11-அக்-201714:30:08 IST Report Abuse
jysen Leave alone Ram but erect a statute in honour of Jaitley , the father of Indian economy.
Rate this:
Share this comment
Cancel
S.M.Noohu - Jeddah,சவுதி அரேபியா
11-அக்-201710:44:26 IST Report Abuse
S.M.Noohu எதற்கோ கையில் பூமாலை கிடைத்தது போலாகிவிட்டது மத்தியில் மோடியின் ஆட்சியும், மாநிலத்தில் யோகி ஆட்சியும்..மக்கள் விழி பிதுங்கி நிற்கிறார்கள்.. மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை,மக்கள் இன்னமும் திறந்த வெளியில் மலம், சிறுநீர் கழிக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் இதுவெல்லாம் தேவைதானா?
Rate this:
Share this comment
Cancel
Prabaharan - nagercoil,இந்தியா
11-அக்-201710:12:27 IST Report Abuse
Prabaharan பி ஜெ பி யில் சிலை பைத்தியங்க்ள். இனி இந்தியாவில் விவசாயத்தால் வருமானம் வராது. சிலைகளால் தான் வருமானம் வரும்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X