எக்ஸ்குளுசிவ் செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
முடி சூட்டு விழா!
இந்திரா பிறந்த நாளில் முடிசூட்டு விழா
ராகுலை தலைவராக்க காங்., தீவிரம்

அடுத்த மாதம் நடக்க உள்ள, அகில இந்திய, காங்., மாநாட்டில், கட்சியின் தலைமை பொறுப்பை, ராகுல் கைகளில், அதிகாரபூர்வ மாக ஒப்படைக்க, அனைத்து ஏற்பாடுகளும் கச்சிதமாக நடக்கின்றன.

இந்திரா,பிறந்த நாள், முடிசூட்டு விழா, ராகுல், தலைவர், காங்., தீவிரம்

சீதாராம் கேசரியிடம் இருந்து, 19 ஆண்டுகளுக்கு முன், காங்., தலைவர் பொறுப்பை, அதிரடியாக பெற்ற சோனியா, உடல்நலக் குறைவால், சமீபகாலமாக, தீவிர கட்சி பணிகளில் ஈடுபடுவதை குறைத்து விட்டார்; இதை சரிசெய்ய, ராகுலுக்கு, துணைத் தலைவர் பதவி தரப்பட்டது.துணைத் தலைவர் என்ற போதிலும், கட்சியின் அன்றாடப் பணிகள் அனைத்தையும், ராகுல் தான் கவனிக்கிறார். அதிகாரபூர்வமாக இல்லையே தவிர, ராகுல் தான், காங்கிரசின் தலைவருக்கான பணிகளை செய்கிறார்.

ஆனாலும், சோனியாவின் இடத்தில், ராகுலை அமர்த்துவதற்கு, மூத்த, காங்., தலைவர்கள் முட்டுக்கட்டை போட்டபடி இருந்தனர். தங்கள் அதிகாரங்கள் பறிபோகும் என்பதே, இதற்கு காரணம்.இந்நிலையில் தான், கட்சியின் அமைப்பு தேர்தல்கள், முறையாக நடத்தப் பட்டு, இறுதி முடிவுக்கு வந்துள்ளன.

வழக்கம் போல இல்லாமல், ராகுலுக்காகவே,

மிகுந்த கவனத்துடன், இந்த தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. அமைப்பு தேர்தல்கள் மூலம், மாநில கமிட்டிகள் அமைக்கப்பட்டு, அதன் மூலம், மாநில தலைவர்கள் தேர்ந்தெடுக்கப் படுவர்.கட்சியின் தலைவர் யார் என்பதை முன்மொழிவதில், இந்த மாநில கமிட்டிகள் தான், அதிகாரம் படைத்தவை யாக இருக்கும். மாநில கமிட்டிகள் அனைத்தும் தயாராகி விட்டதால், தலைவருக்கான தேர்தல் நடக்க உள்ளது.

இதற்கான, வேட்புமனு தாக்கல், நேற்று துவங்கியது. தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும், அக்., 25க்குள், முடிவுக்கு வரவுள்ளன.'தலைவர் பதவிக்கு, ராகுல் மட்டுமே, மனு தாக்கல் செய்ய வேண்டும்; வேறு யாரும், மனு தாக்கல் செய்து, போட்டி உருவாகி, சிக்கல் ஏற்படக் கூடாது' என்பதில், காங்., மேலிடம் கவனமாக உள்ளது.

பீஹார், காங்., தலைவராக இருந்த, அசோக் சவுத்ரி நீக்கப்பட்டு, கவ்காப் காத்ரி என்பவர், சமீபத்தில் நியமிக்கப்பட்டார். ராகுல் பெயரை, சவுத்ரி தலைமையிலான, பீஹார், காங்., கமிட்டி எதிர்க்க லாம் என்ற அச்சமே, இந்த நீக்கத்துக்கு காரணம். இவ்வாறு, ஒவ்வொரு மாநிலமாக பார்த்து பார்த்து, மாநில கமிட்டிகள் அமைக்கப்பட்டு, தற்போது, ராகுலின் தலைமைக்கு எதிராக, சிறு தும்மல் கூட ஏற்படாத வகையில், கச்சிதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு விட்டன.

மூத்த தலைவர்களோ, மாநில கமிட்டிகளோ, எந்த எதிர்ப்பும் காட்ட வாய்ப்பே இல்லாதசூழ்நிலை வந்துவிட்டது. இதனால், ராகுலை, தலைவர் பதவியில் அமர்த்த வேண்டிய வேலை மட்டுமே, இப்போது பாக்கி. ஒருமனதாக, ராகுல் தேர்ந்தெடுக் கப்படுவது உறுதியாகி உள்ளது.இதையடுத்து, ராகுலின் தேர்வுக்கு, அங்கீகாரம் வழங்கும் விதமாக, அகில இந்திய, காங்., மாநாடும் நடக்க உள்ளது.

ராகுலின் முடிசூட்டு விழா என்பதால், அவரது

Advertisement

பாட்டியும், முன்னாள் பிரதமருமான, இந்திராவின் பிறந்த நாளை, காங்., மேலிடம், இதற்காக தேர்வு செய்துள்ளது.அதன்படி, நவ., 19ல், அகில இந்திய, காங்., மாநாடு நடக்கிறது. இதில், அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த, அகில இந்திய, காங்., பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.

இவர்கள் அனைவரும் சேர்ந்து, கட்சி விதிகளின்படி, தலைவர் பதவிக்கான ராகுலின் தேர்வுக்கு, தங்களது ஒப்புதலை தெரிவித்து, அங்கீகாரம் வழங்குவர்.

நீடிப்பார் சோனியா


ராகுல் தலைவரானாலும், கட்சியின் உயர் அமைப்பான, காங்., காரிய கமிட்டி உறுப்பினர் மற்றும் பார்லிமென்ட் கட்சித் தலைவர் போன்ற முக்கிய பதவிகளில், சோனியாவே நீடிப்பார். அதே போல, தற்போதைக்கு, பிரியங்காவுக்கு எந்த பதவியும் தரப்படாது; லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுவதன் மூலம், அரசியலுக்குள், பிரியங்கா வரலாமென, தெரிகிறது.

- நமது டில்லி நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
12-அக்-201702:10:40 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>அன்று காந்தி காங்கிரஸி கலைச்சுடுங்க என்று இப்போ இந்த அபஸ்மாரம் தலைமைக்கு வந்தால் எல்லோருமே துண்டைக்காணும் துணியை காணும்னு பிச்சுண்டு அரசியலே வேண்டாம் சாமின்னு ஓடியே போயிருவா

Rate this:
Balaji - Bangalore,இந்தியா
11-அக்-201715:46:05 IST Report Abuse

Balaji இளவரசர் மன்னர் ஆக போகிறார். புலிகேசி கதைதான்?

Rate this:
Pattu Maami - Mambalam, Chennai,இந்தியா
11-அக்-201711:24:24 IST Report Abuse

Pattu MaamiRahul need still more experience to handle our big country and highly populated with multi community publics. Manmohan can give further five years training to Rahul as PM when bjp going to rule another 4 years after 2018.

Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X