பதிவு செய்த நாள் :
பேசக்கூடிய பிரதமர் மோடி:
அமேதியில் அமித் ஷா பெருமிதம்

அமேதி:''பொருளாதார வளர்ச்சியில் அக்கறை உள்ள, பேசக்கூடிய பிரதமரை, நாட்டுக்கு, பா.ஜ., தந்துள்ளது,'' என, பா.ஜ., தேசிய தலைவர், அமித் ஷாகூறியுள்ளார்.

 பேசக்கூடிய,பிரதமர்,மோடி: அமேதியில்,அமித் ஷா,பெருமிதம்

காங்., துணைத் தலைவர், ராகுல், 'பா.ஜ., ஆளும், குஜராத்தில், உண்மையான வளர்ச்சி எதுவும் ஏற்படவில்லை' என, சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். 'மூன்றாண்டு ஆட்சியில், பா.ஜ., என்ன சாதித்தது' என்றும், அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.இதற்கு பதில் அளிக்கும் வகையில், காங்., துணைத் தலைவர் ராகுலின் தொகுதியான, உ.பி., மாநிலம், அமேதியில், நேற்று நடந்த, பா.ஜ., பொது

கூட்டத்தில் பங்கேற்ற, அக்கட்சியின் தேசிய தலைவர், அமித் ஷா பேசியதாவது:

பா.ஜ.,வின் மூன்றாண்டு ஆட்சியின் செயல்பாடுகள் பற்றி, ராகுல் குறை கூறுகிறார். பொருளாதார வளர்ச்சியில் அக்கறையுள்ள, பேசக் கூடிய பிரதமரை, நாட்டு மக்களுக்காக, பா.ஜ., அளித்துள்ளது.குஜராத்தில், பா.ஜ., என்ன சாதித்தது என கேள்வி எழுப்பும் ராகுல், அமேதியில், மூன்று தலைமுறைகளாக,எம்.பி., பதவியை அனுபவித்து வரும், அவரது குடும்பத்தினர், தங்கள் தொகுதிக்கு என்ன செய்தனர் என்பதை கூற வேண்டும்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தலைவர்களை, 60 ஆண்டுகளாக, மக்கள், நம்பி ஓட்டு போட்டனர். மாறாக, நரேந்திர மோடி, மக்களை ஏமாற்ற மாட்டார். அமேதி தொகுதியில் வெற்றி பெற்ற, காங்., வேட்பாளர், மக்களை சந்திக்க வருவதில்லை. மாறாக, தோல்வி யடைந்த, பா.ஜ., வேட்பாளர், ஸ்மிருதி இரானி,மக்களை சந்திக்க, இங்கு வந்து உள்ளார்.இவ்வாறு அவர்பேசினார்.

நிகழ்ச்சியில் பேசிய, மத்திய ஜவுளித்துறை

Advertisement

அமைச்சர், ஸ்மிருதி இரானி, ''அமேதியில், சைக்கிள் தொழிற்சாலை துவங்க, விவசாயி களிடம் பறித்த, 60 ஏக்கர் நிலத்தை, ராஜிவ் அறக்கட்டளை திருப்பி அளிக்க வில்லை. 'அமேதியை, காங்., ஓட்டு வங்கியாக மட்டுமே பார்க்கிறது. இங்கு, கலெக்டர் அலுவலகம் கூட அமைக்கப்படவில்லை, ''என்றார்.

இதற்கிடையே, 'டுவிட்டர்' சமூக வலை தளத்தில், காங்., துணைத் தலைவர், ராகுல் வெளியிட்ட பதிவில், 'மகளை காப்பாற்றுங்கள் எனக் கூறி பிரசாரம் செய்து, வந்த மத்திய அரசு, தற்போது, மகனை காப்பாற்றுங்கள் எனச் சொல்லும் நிலைக்கு வந்து விட்டது' என கூறிஉள்ளார்.

பா.ஜ., தேசியத் தலைவர், அமித் ஷாவின் மகன்,ஜெய் அமித்ஷா,குறுகிய காலத்தில், 80 கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியதாக, சமீபத்தில் செய்தி வெளியானது.

அதை மறுத்து, பா.ஜ., மூத்த தலைவர்கள் தொடர்ச்சியாக கருத்துக்களை தெரிவித்து வரு கின்றனர். அதை கிண்டலடிக்கும் வகையில், ராகுல்,'டுவிட்டரில்' இந்த பதிவை வெளியிட்டு உள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (95)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkatesh - coimbatore,இந்தியா
11-அக்-201720:39:17 IST Report Abuse

venkateshபேசாமல் இருந்த மன்மோகன் சிங் காலத்தில் நாட்டில் பொருளாதார வளர்ச்சி இருந்தது ஏழைகளை பாதிக்க வைக்காமல் விலைவாசி இருந்தது அனால் பேசும் பிரதமர் ஏழைகளின் ரத்தத்தை உறுஞ்சி பெரும் முதலாளிகளை சந்தோசப்படுத்துகிறார் ஊழலை ஒழிப்பேன் என்று மார் தட்டி பேசியவர் இன்று ஊழல்வாதிகளை கட்டி பிடித்து உறவாடி அவர்களை வளர்க்கிறார்(உதாரணம் தமிழ்நாடு) இதை பார்க்கையில் பேசாமல் இருந்தவரே தேவலை என்று தோன்றுகிறது.

Rate this:
ராமசாமி - விருத்தாச்சலம்,பிரிட்டிஷ் கன்னித் தீவுகள்
11-அக்-201720:28:10 IST Report Abuse

ராமசாமிவட்டி என்ன சொல்லவருதுன்னா "எதை பற்றியும்" பேசாதேன்னு , எதிர்மறைல சொல்லி மிரட்டவேண்டியவரை மிரட்டுது

Rate this:
mindum vasantham - madurai,இந்தியா
11-அக்-201720:24:57 IST Report Abuse

mindum vasanthamManmohan was a benami of a Italian lady

Rate this:
மேலும் 92 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X