வெளிநாடு செல்ல கார்த்திக்கு அனுமதி? சுப்ரீம் கோர்ட் இன்று விசாரணை

Added : அக் 11, 2017 | கருத்துகள் (34)
Advertisement
வெளிநாடு,Overseas,  கார்த்திக்,Karthik, சுப்ரீம் கோர்ட்,Supreme Court, விசாரணை,Investigation, முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம், former Central Finance Minister Chidambaram,சி.பி.ஐ., CPI,  கேம்பிரிட்ஜ் பல்கலை, Cambridge University, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, Solicitor General Tushar Mehta,உச்ச நீதிமன்றம்,

'வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும்' என்ற, காங்கிரஸ் மூத்த தலைவர், சிதம்பரத்தின் மகன், கார்த்தி தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம், இன்று(அக்.,11) விசாரிக்க உள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான, சிதம்பரத்தின் மகன், கார்த்தி மீது, சி.பி.ஐ., மோசடி வழக்கை தொடர்ந்துள்ளது.இந்த வழக்கில் தேடப்படும் நபராக, அவர் அறிவிக்கப்பட்டார். அதனால், வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், 'ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலையில் மகளை சேர்ப்பதற்காக, செல்வதற்கு அனுமதிக்க வேண்டும்' என, கார்த்தி சார்பில் மனு கொடுக்கப்பட்டிருந்தது. இந்த மனு, நேற்று விசாரணைக்கு வந்தபோது, சி.பி.ஐ., சார்பில் ஆஜரான, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், துஷார் மேத்தா, கார்த்திக்கு அனுமதி அளிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இது தொடர்பாக, எழுத்துப் பூர்வமாக பதிலை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்ற அமர்வு, கார்த்தியின் மனு மீது, இன்று முடிவெடுப்பதாக கூறியுள்ளது.
- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
11-அக்-201716:56:21 IST Report Abuse
Endrum Indian ப.சிதம்பரம் டெலிபோனில் "மல்லையா, பையன் வர்றான் நல்லா கவனிச்சுக்கோ அவனை"
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
11-அக்-201714:53:40 IST Report Abuse
மலரின் மகள் மகளின் அட்மிசன் என்று கோரி பார்ப்பார்கள். கிடைக்க வில்லை என்றால், மருத்துவம் சிகிச்சை என்று அதற்கான டாகுமெண்ட்ஸை தயார் செய்து அதை வைத்து முயல்வார்கள்,. எப்படியாவது அடித்த பணத்தை பாதுகாக்க வேண்டும். தப்பித்து விடவேண்டும் என்று முயன்று பார்ப்பார்கள். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்பது எல்லாருக்கும் தெரியும் அதையே இவர்கள் செய்கிறார்கள். தப்பித்து விடுவான் எப்படியாவது.
Rate this:
Share this comment
Rahim - Riyadh,சவுதி அரேபியா
11-அக்-201716:38:23 IST Report Abuse
Rahimசீ வாய மூடு உன் கருத்துக்கள் காவி வாசம் வீசும் போதே தெரிகிறது சொந்த பெயரில் எழுத துப்பில்லாமல் அதுவும் பெண்ணின் பெயரில் ஒளிந்து கருத்து எழுதும் சங்கி என்று, உன் நடுநிலை கருத்துக்களால் ஒரு சமயம் உன் மீது இருந்த அந்த மரியாதை கீழிறங்கி விட்டது கடைசியில் நீயும் சராசரி சங்கி தான் என்று ஏமாற்றி விட்டாய்....
Rate this:
Share this comment
Cancel
11-அக்-201713:11:53 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இந்தநாட்டில் கல்லூரிகள் இல்லையா? அடித்த பணத்தில் பெரிய கல்லூரியை நீங்களே கட்டி படிக்கவைக்கலாமே? ஓ வெளிநாட்டில் படித்தவர் என்று பீத்திக் கொள்ளவேண்டும், உல்லாசமாக வெளிநாடுகளை சுற்றியும் பார்க்கவேண்டும், ஆனால் ஏழைகளுக்கு தரமான கல்வி கிடைக்கக்கூடாது, நவோதய பள்ளிகள் கூடாது , மத்திய அரசு பாடத்திட்டமும் கூடாது , நுழைவுத்தேர்வும் கூடாது, நல்ல கட்சிகள், நல்ல கொள்கை. திமுக மட்டைகளும் இப்படித்தான்.
Rate this:
Share this comment
Rahim - Riyadh,சவுதி அரேபியா
11-அக்-201716:35:34 IST Report Abuse
Rahimஉன் சொம்பு கட்சி நபர்களின் பிள்ளைகளின் பயோடேட்டாவை கொஞ்சம் அலசி பார்ப்போமா எங்கு படித்தார்கள் என்று என்ன ரெடியா நீ ?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X