எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
முறைகேடு?
அரசு போக்குவரத்து பணிமனையில் டீசல் நிரப்புவதில் முறைகேடு?

அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில், டீசல் நிரப்புவதில் முறைகேடுகள் நடப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அரசு,போக்குவரத்து,பணிமனையில்,டீசல்,நிரப்புவதில்,முறைகேடு?

அரசு போக்குவரத்து கழகத்தில், 22 ஆயிரத்துக் கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. அவற்றுக்கு தினமும், 17 லட்சம் லி., வீதம், மாதத்திற்கு, 510 லட்சம் லி., டீசல் நிரப்பப்படுகிறது.

அவ்வாறு பணிமனை களில், டீசல் நிரப்பும் போது, அதிகளவில் முறைகேடுகள் நடப்பதாக, புகார்கள் எழுந்துள்ளன. ஏற்கனவே, சென்னையில் உள்ள, வடபழனி, வேலுாரில்

உள்ள கொணவட்டம் - 2 உள்ளிட்ட பல பணிமனை களில், இது குறித்த புகார்கள் எழுந்துள்ளன.இது குறித்து, ஓட்டுனர்கள் கூறியதாவது:தமிழக அரசு பஸ்களில், 70 சதவீதம் காலாவதி ஆனவை. அந்த பஸ்களை இயக்குவதே சிரமம்.

ஆனால்,அந்த பஸ்களை, ஒரு லிட்டர் டீசலுக்கு, 5.5 முதல், 6 கி.மீ., துாரம் வரை இயக்கும்படி, ஓட்டுனர் களை, மேலாளர்கள் கட்டாயப்படுத்து கின்றனர். அவ்வாறு இயக்காத ஓட்டுனர்களிடம், கேள்விகள் கேட்டு, மன உளைச்சலை ஏற்படுத்துகின்றனர். ஆனால், பஸ்களுக்கு வழங்க வேண்டிய டீசலை குறைக்கும்படி, பணிமனை ஊழியர்களுக்கு, வாய்மொழி உத்தரவிட்டு உள்ளனர்.

அதாவது, பஸ்சின் டீசல் டேங்க், 250 லி., கொள்ளளவு கொண்டது. அதில் தினமும், 130 லி., டீசல் பிடிக்க வேண்டும். ஆனால், 125 லி., டீசல் மட்டுமே பிடிக்கப்படுகிறது.

இதனால், ஒவ்வொரு நாளும், பல லட்சம் லி., டீசல் திருடப்படுகிறது. அவ்வாறு திருடப்படும் டீசலை, அதிகாரிகளின் கார்கள், ஜீப் உள்ளிட்ட வாகனங் களுக்கு பயன்படுத்தி, விடுமுறை நாட்களில்,

Advertisement

குடும்பத்துடன் வெளியூர் செல்கின்றனர். அதே போல், பணிமனைகளில் உள்ள உதிரி பாகங் களையும், தங்களின் சொந்த வாகனங்களுக்கு பயன்படுத்தும்படி, ஊழியர்களை கட்டாயப் படுத்துகின்றனர்.இது போன்ற செயல்களால், சரியான, 'மைலேஜ்' கொடுக்க முடிவதில்லை. இதனால், எங்களுக்கு, 'மெமோ' கொடுக்கப் படுகிறது. இதை, போக்குவரத்து செயலர் கண்காணித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Niranjan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
12-அக்-201714:45:42 IST Report Abuse

Niranjanபஸ் பராமரிப்பு மற்றும் உதிரி பாகங்கள் தனியார் மயம் ஆக்கிவிடலாம். இதனால் தேவை இல்லாத மற்றும் வேலை செய்யாத அதிகாரிகள் மற்றும் பராமரிப்பு பணியாள்கள் சம்பளம் மற்றும் ஊழல் பணம் மிச்சம்

Rate this:
Raghavan - chennai,இந்தியா
12-அக்-201714:00:56 IST Report Abuse

RaghavanThey have strong and powerful unions to def their rights and privileges. Use them and expose the corrupt offixials

Rate this:
Karthi Keyan Palanisamy - erode,இந்தியா
12-அக்-201710:26:42 IST Report Abuse

Karthi Keyan Palanisamyநடிகர். கமல் சொன்னது சரிதானே இந்த ஆட்சில் ஊழல் எல்லா துறைகளிலும் நடக்கின்றது என்று.

Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X