அரசியல் செய்தி

தமிழ்நாடு

தே.மு.தி.க., முக்கிய பிரமுகர் டில்லியில் முகாம்: காங்கிரசுடன் பேச்சுவார்த்தையா?

Updated : பிப் 15, 2011 | Added : பிப் 13, 2011 | கருத்துகள் (92)
Share
Advertisement
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் நெருங்கிய உறவினர் டில்லியில் முகாமிட்டுள்ளார். இதனால், அக்கட்சி காங்கிரசுடன் சேர்ந்து மூன்றாவது அணி அமைக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலை எதிர்க் கொள்ள ஆளும் தி.மு.க., தலைமையில் ஒரு அணியும், அ.தி.மு.க., தலைமையிலான மற்றொரு அணியும் தயாராகி வருகின்றன. இக்கூட்டணிகளில் இடம் பிடிப்பதில் சிறிய கட்சிகளிடையே

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் நெருங்கிய உறவினர் டில்லியில் முகாமிட்டுள்ளார். இதனால், அக்கட்சி காங்கிரசுடன் சேர்ந்து மூன்றாவது அணி அமைக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலை எதிர்க் கொள்ள ஆளும் தி.மு.க., தலைமையில் ஒரு அணியும், அ.தி.மு.க., தலைமையிலான மற்றொரு அணியும் தயாராகி வருகின்றன. இக்கூட்டணிகளில் இடம் பிடிப்பதில் சிறிய கட்சிகளிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அ.தி.மு.க., கூட்டணியில் இணையவே, சிறிய கட்சிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றன. ஆனால், பா.ம.க., எந்த அணியில் சேரும் என்பது இது வரை முடிவாகவில்லை.


அ.தி.மு.க., அணியில் தே.மு.தி.க., சேரும் என்று கூறப்பட்டாலும், இது குறித்த அதிகார பூர்வ அறிவிப்புகளை இது வரை இருகட்சிகளும் வெளியிடவில்லை. இது, இரு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே தி.மு.க., அணியில் காங்கிரஸ் தொடருமா என்ற சந்தேகம் அரசியல் மட்டத்தில் வலுத்து வருகிறது. அக்கட்சி சார்பில் தொகுதி பங்கீட்டு குழு அமைக்கப்பட்டு சில நாட்கள் ஆகியுள்ள நிலையில், இது வரை முதல் சுற்று பேச்சுவார்த்தையை கூட இன்னும் துவக்கவில்லை.


இந்நிலையில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் நெருங்கிய உறவினரான கட்சியின் முக்கிய பிரமுகர் நேற்று முன்தினம் இரவு முதல் டில்லியில் முகாமிட்டுள்ளார். ராகுல் நேரடி அழைப்பின் பேரில் அவர் அங்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவரை, டில்லி விமான நிலையத்திற்கே வந்து ராகுலுக்கு நெருக்கான பிரதிநிதிகள் அழைத்து சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனால், அ.தி.மு.க. - தி.மு.க., கூட்டணிகளுக்கு போட்டியாக தே.மு.தி.க.,வுடன் சேர்ந்து காங்கிரஸ் மூன்றாவது அணி அமைக்குமா என்ற பரபரப்பு, அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.


உளவுத் துறையினர் உஷார் : ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளையும் உளவுத்துறை மற்றும் நுண்ணறிவு பிரிவு போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். இதற்கென ஒரு இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., மற்றும் ஏட்டு அடங்கிய மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. மூவரும் கட்சி நடவடிக்கைகளை கண்காணித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கின்றனர். காங்கிரசுடன் இணைந்து தே.மு.தி.க., மூன்றாவது அணி அமைக்குமா என்ற பரபரப்பு எழுந்துள்ளதால் உளவுத் துறையினர் உஷார் அடைந்துள்ளனர்.இதனால், அக்கட்சியின் நடவடிக்கைகளை வழக்கத்தை விட தீவிரமாக கண்காணிக்க துவங்கியுள்ளனர். சென்னை, விருகம்பாக்கம் விஜயகாந்த் வீடு, கோயம்பேடு தே.மு.தி.க., அலுவலகம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் வீடுகளையும், தங்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் உளவுத் துறையினர் கொண்டு வந்துள்ளனர். இதற்கென ஒரு எஸ்.பி., தலைமையில் 32 பேர் அடங்கிய உளவுத்துறை குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


- நமது சிறப்பு நிருபர் -


Advertisement
வாசகர் கருத்து (92)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMASWAMY S - CHENNAI,இந்தியா
19-பிப்-201120:30:33 IST Report Abuse
RAMASWAMY S APART FROM POLITICS WILL VIJAYAKANTH CAN DO JUSTICE TO ALL CASTE PEOPLE IN TAMIL NADU. WILL HE SEE THE SO CALLED FORWARD COMMUNITY PEOPLES UPLIFTMENT IN TAMIL NADU. BY THE CASTE BASED RESERVATION THE POOR AMOUNG THE FORWARD COMMUNITY PEOPLE ARE SUFFERING AND SINKING IN TAMIL NADU
Rate this:
Cancel
Ram Krishna - chennai,இந்தியா
14-பிப்-201123:28:49 IST Report Abuse
Ram Krishna கேப்டன் தனியாக நிற்கப் போகிறார். அதற்கான கூலி வாங்கத் தான் டெல்லி பயணம்.
Rate this:
Cancel
krishnamurthy venkatesan - Chennai,இந்தியா
14-பிப்-201120:22:54 IST Report Abuse
krishnamurthy venkatesan எதுவோ ஒன்று தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டு கொண்டதாம். அதுபோல் இருக்கிறது விஜயகாந்த் காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்க நினைப்பது. அவ்வாறு கூட்டணி அமைத்தால், வரும் தேர்தலில் நிற்கும் அணைத்து தொகுதிகளிலும் டெபொசிட் இழப்பது நிச்சயம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X