பொது செய்தி

தமிழ்நாடு

சைக்கிள் பயன்படுத்த காஷ்மீர் டூ கன்னியாகுமரிக்கு பயணம் பிரசாரம்

Updated : அக் 12, 2017 | Added : அக் 11, 2017 | கருத்துகள் (3)
Advertisement
சைக்கிள்,bicycle, காஷ்மீர் டூ கன்னியாகுமரி,Kashmir to Kanyakumari, விழிப்புணர்வு ,Awareness,  கிர்தா பாரதி , Girda Bharathi, டைகர் குரூப் ஆப் அட்வென்சர் ,Tiger Group of Adventures,பொறியாளர் ரவீந்திர தாரே, Engineer Ravindra Thare, அடுல் டபாசி, Adul Tabasi, சந்தீப் வைத்யா,Sandeep Vidya, சந்தோஷ் சர்வேசி, Santosh Sarvacey, பிரசாத் தேஷ்பாண்டே, Prasad Deshpande, சரத் சொன்டாக்கே, Sarath Sondakke, யாசுகு டிடாடே,Yasuku Dattade, துாய்மை பாரதம்,clean india,பசு பாதுகாப்பு ,Cow protection, பெண்குழந்தைகள், female child, நீர் சேமிப்பு, Water storage, மரம் வளர்ப்பு, Tree farming,விருதுநகர், Virudhunagar,மகாராஷ்ட்ரா,Maharashtra, இந்தியா,India,

விருதுநகர்: சைக்கிள் பயன்படுத்துவதை வலியுறுத்தி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை விழிப்புணர்வு பயணம் செய்யும் மகாராஷ்ட்ராவை சேர்ந்த ஏழுபேர் நேற்று விருதுநகர் வந்தனர். 'சைக்கிள் பயன்படுத்துவதில் இந்தியாவின் இரண்டாவது நகராக விருதுநகர் உள்ளதாக,' அவர்கள் தெரிவித்தனர்.

கிர்தா பாரதி மற்றும் டைகர் குரூப் ஆப் அட்வென்சர் என்ற அமைப்பின் சார்பில் மகாராஷ்டிரா நாக்பூர் கல்வித்துறை ஓய்வு பொறியாளர் ரவீந்திர தாரே தலைமையில் அடுல் டபாசி, சந்தீப் வைத்யா, சந்தோஷ் சர்வேசி, பிரசாத் தேஷ்பாண்டே, சரத் சொன்டாக்கே, யாசுகு டிடாடே ஆகியோர், செப்., 9 ல் ஜம்முவிலுள்ள கட்ரா வைஷ்ணவி கோயிலில் இருந்து சைக்கிள் விழிப்புணர்வு பயணத்தை துவக்கினர்.


ஆச்சரியம் :துாய்மை பாரதம், திறந்த வெளி கழிப்பிடத்தை ஒழித்தல், பெண்குழந்தைகள் பாதுகாத்தல், நீர் சேமிப்பு, மரம் வளர்ப்பு, பசு பாதுகாப்பு போன்றவற்றை வலியுறுத்தி கன்னியாகுமரி வரை விழிப்புணர்வு பிரசாரம் செய்கின்றனர். இவர்களது முக்கிய குறிக்கோள் 'சைக்கிள் ஓட்டு... நோய் மற்றும் டாக்டரை மற' என்பது தான். நேற்று காலை மதுரையில் இருந்து புறப்பட்ட இவர்கள் விருதுநகர் வந்தனர். நான்கு வழிச்சாலையில் சென்றபோது சைக்கிள் பழுதடைந்ததால் விருதுநகர் சர்வீஸ் ரோடுவழியாக தெப்பம் வந்தனர். இவர்களை நாட்டுப்பசு பாதுகாப்பு இயக்க தலைவர் சங்கர் மற்றும் நகர் மக்கள் வரவேற்றனர். விருதுநகர் பஜாரில் சிறுவர் முதல் 80 வயதுள்ளவர்கள் வரை சைக்கிள் ஓட்டிச் செல்வதை பார்த்து ஆச்சரியப்பட்டனர்.


சைக்கிள் சிட்டி :


ரவீந்திர தாரே கூறுகையில், ''ஜம்மு காஷ்மீரில் துவங்கி 3,562 கி.மீ., பயணம் செய்த நாங்கள் சில நாட்களில் கன்னியாகுமரியில் பயணத்தை முடிக்க உள்ளோம்.நாட்டில் நாக்பூரை அடுத்து விருதுநகரில் அதிகம் பேர் சைக்கிள் ஓட்டுகின்றனர். வயதானவர்கள் கூட சைக்கிளில் செல்வது ஆச்சரியமாக உள்ளது. சைக்கிள் ஓட்டுவது என்பது இப்பகுதி மக்களின் வாழ்க்கையில் ஒன்றாகி விட்டது. இதனால் தான் நோயில்லாமல் வாழ்கின்றனர். விருதுநகரை பார்க்கும்போது சைக்கிள் சிட்டி போல் உள்ளது,'' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
12-அக்-201712:30:18 IST Report Abuse
நாஞ்சில் நாடோடி சைக்கிள் ஓட்டுவது உடலுக்கும், மனதுக்கும், சுற்றுப்புறத் தூய்மைக்கும் நாட்டுக்கும் நல்லது. துபாயில் சைக்கிளில் செல்பவர்களுக்கு தனி சாலையே அமைக்கப் பட்டுள்ளது...
Rate this:
Share this comment
Cancel
rajasekar - later,யூ.எஸ்.ஏ
12-அக்-201710:01:16 IST Report Abuse
rajasekar Cycle lanes and tracks போடவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
12-அக்-201707:46:32 IST Report Abuse
முருகவேல் சண்முகம்.. சைக்கிள் ஓட்டுவது ரொம்ப நல்ல விஷயம், நான் சமீப காலம் வரை சைக்கிள் மட்டுமே ஓட்டி வந்தேன், இப்போது கூட பெரும்பாலும், சைக்கிள் தான் குறைவான தூரத்திற்கு பயன் படுத்து கிறேன், ஆனால் இங்கே சைக்கிள் ஓட்டுபவர்கள் கேலியாக பார்க்க படுகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X