பிரதமருடன் இருபது இனிய நிமிடங்கள், சிலிர்க்கிறார் எஸ்.சுகுமார்.| Dinamalar

பிரதமருடன் இருபது இனிய நிமிடங்கள், சிலிர்க்கிறார் எஸ்.சுகுமார்.

Updated : அக் 14, 2017 | Added : அக் 14, 2017 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

பிரதமருடன் இருபது இனிய நிமிடங்கள், சிலிர்க்கிறார் எஸ்.சுகுமார்.


பிரதமர் மோடியை சந்தித்து பேசிய அந்த இருபது நிமிடங்கள் வாழ்க்கையில் மிக இனிய நிமிடங்களாகும் என்கிறார் ஸ்போர்ட்ஸ் போட்டோகிராபர் எஸ்.சுகுமார்.
சென்னையைச் சேர்ந்த சுகுமார் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக புகைப்படங்கள் எடுத்துவருகிறார். திருமணம், தொழிற்சாலைகள், பத்திரிகை துறை என்று புகைப்படம் தொடர்பான பல துறைகளில் பயணம் செய்தாலும் அவருக்கு விளையாட்டு துறை சம்பந்தமாக படங்கள் எடுப்பது என்றால் மிகவும் விருப்பம்.

ஒலிம்பிக் மற்றும் ஆசியா விளையாட்டுப் போட்டிகளின் போது நடைபெறும் துவக்கவிழா மற்றும் நிறைவு விழாவினைக் காண கண் கோடி வேண்டும். பல கோடி ரூபாய் செலவில் நடைபெறும் வண்ணமயமான அந்த தருணங்களை படமெடுக்கும் வாய்ப்பு கிடைக்காத, என பல போட்டோகிராபர்கள் தவமாய் காத்துகிடக்கும் நிலையில், லண்டன் மற்றும் பீஜிங் என ஒன்றுக்கு இரண்டு ஒலிம்பிக் போட்டிகளை படம் எடுத்த பாக்கியவான் இவர்.

கிரிக்கெட் போட்டிகள் எங்கு நடந்தாலும் இவரை அங்கு காணலாம்.கிரிக்கெட் சாதனையாளர் சச்சின் தனது சுயசரிதை புத்தகத்தில் இவரது படத்தைத்தான் அட்டைப்படமாக உபயோகித்துள்ளார்.

இவரது கேமிராவில் சிக்காத விளையாட்டு வீரர்களே அநேகமாக இல்லை எனலாம். தனது படைப்புகள் மக்களிடம் போய்ச்சேர வேண்டும், விளையாட்டு துறையில் இளவயதினருக்கு ஊக்கம் ஏற்படவேண்டும் என்பதற்காக இரண்டு முறை தனது புகைப்படங்களைக் கொண்டு கண்காட்சி நடத்தியுள்ளார். சென்னையிலும் டில்லியிலும் நடந்த இவரது புகைப்பட கண்காட்சி பலரது பாராட்டையும் கவனத்தையும் ஈர்த்தது.
இதுவரை ஆறு புத்தகங்கள் வெளியிட்டுள்ளார் இந்த புத்தகங்களை எல்லாம் பிரதமர் மோடியிடம் கொண்டு சேர்க்கவேண்டும் என்ற இவரது கனவு இப்போது நனவாகியுள்ளது.கடந்த 11ந்தேதி டில்லி தெற்கு போக் சாலையில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இவருக்காக இருபது நிமிடங்கள் பிரதமர் மோடி ஒதுக்கியிருந்தார்.

உள்ளே நுழைந்தத சுகுமாரை பெயரைச் சொல்லி எழுந்து நின்று வரவேற்ற பிரதமர் மிக எளிமையாக சகஜமாக பேச ஆரம்பித்திருக்கிறார்.கையோடு கொண்டு போயிருந்த புத்தகங்களையும்,உலக விளையாட்டு வீரர் உசேன் போல்ட்டிடம் கையெழுத்திட்டு வாங்கியிருந்த ஒரு பெரிய புகைப்படத்தையும் பிரதமருக்கு வழங்கினார், கூடுதலாக திருப்பதி லட்டு மற்றும் உலர் திராட்சைகளையும் கொடுத்தார்.

அனைத்தையும் பெற்றுக்கொண்டு சந்தோஷப்பட்ட பிரதமர் பிரசாதத்தை அப்போதே சாப்பிட்டு தனது நன்றியை தெரிவித்தார்.பின் குடும்ப விஷயங்களை அக்கறையோடு கேட்டறிந்தவர் இன்னும் பல சாதனை படைக்க வாழ்த்தி வழியனுப்பிவைத்தார்.அந்த இருபது நிமிடங்களும் வாழ்க்கையில் மறக்கமுடியாத இனிய நிமிடங்கள் என்று சொல்லி மகிழும் சுகுமார் சந்தேகம் இல்லாமல் தமிழக புகைப்படக்கலைஞர்களுக்கு மிகவும் பெருமை சேர்த்திருக்கிறார்.

அவரை மனதார வாழ்த்துவதற்கான எண்:98402 08888.
-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
03-நவ-201703:46:25 IST Report Abuse
J.V. Iyer வாழ்க வளமுடன் நல்லவர்களுக்கும் வல்லவர்களுக்கும் என்றுமே திரு மோடிஜி ஒரு தெய்வம். எப்போதும் தரிசனம் கொடுப்பார். தினமும் 15-மணி உழைப்பவருக்கு ஒரு சில நிமிஷம் break-கொடுத்தீர்கள். நல்லாயிருக்கவேண்டும் ஐயா.
Rate this:
Share this comment
Cancel
Viswanathan - Hyderabad,இந்தியா
01-நவ-201701:28:41 IST Report Abuse
Viswanathan நம்முடைய பிரதமர் மனிதர்களை மடிக்க தெரிந்தவர் என்பதற்கு இது ஒரு அத்தாட்சி.
Rate this:
Share this comment
Cancel
Ravichandran - dar salam ,தான்சானியா
25-அக்-201711:59:52 IST Report Abuse
Ravichandran மிக மகிழ்ச்சி அய்யா, அபாரமான ஆற்றல் படைத்தவர் நீங்கள் புகைப்படம் எடுப்பது நுணுக்கமான வேலை, அதிலும் விளையாட்டு போட்டி சமயத்தில் ஓடிக்கொண்டு ஆடிக்கொண்டு இருக்கும் வீரர்களை படம் எடுப்பது உண்மையில் மிக கடினம்தான், மோடி ஜி போன்ற மஹான் பாராட்டியது தெய்வமே பாராட்டியது போல.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X