education purachi | பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி - 14| Dinamalar

சிறப்பு பகுதிகள்

பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி

பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி - 14

Added : அக் 20, 2017
பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி - 14

கல்வித் தரம் உயர வேண்டுமானால் கல்விச் சுதந்திரம் தேவை. இந்த சுதந்திரம் ஆசிரியர் களுக்கும் கல்வி நிறுவன நிர்வாகிகளுக்கும் வழங்க பட வேண்டும். இதன் அடிப்படையில் தான் பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்த, தகுதியான பள்ளிகளுக்கு தன்னாட்சி தருவது அவசியமாகிறது.

இதை வலியுறுத்தும் வகையில் உருவாக்கி உள்ள கருத்துருவை, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன், பாடத்திட்ட கலைத் திட்டக் குழு தலைவரும், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தருமான அனந்தகிருஷ்ணன் ஆகியோரிடம் தினமலர் நாளிதழின் வெளியீட்டாளர் ஆர்.லட்சுமிபதி வழங்கியிருந்தார். இந்த கருத்துரு குறித்து, கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள், தங்கள் கருத்துக்களை, தினமலர் வெளியீட்டாளர், ஆர்.லட்சுமிபதியுடன் பகிர்ந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் தினமலர் வாசகர்கள் சில கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அந்த கருத்துக்களையும் அவை தொடர்பான தினமலர் விளக்கத்தையும் இங்கே அளித்திருக்கிறோம்.

19.D.AMUTHALINGAM, coimbatore.
raniamu3028@gmail.com

I am following your series on autonomous status for school education.
Everyone tends to find fault with the contemporar educational system and mostly the complaints are on teachers, teaching methods and corporal punishment. Degeneration of systems, not only in education but it politics, administration, societal discipline, family orientation , has started to set in long back. In our days (I am 56 Years Old) of schooling the teaching method was so different mainly due to fewer students in classes and teachers had better control over students. Teachers by virtue of their position as teachers had all the powers to punish us and corporal punishment was administered at ease and had the approval of parents. It was not one way that teachers would only punish but were equally involved in the well being of students and taught them with great fervor .

It was a Dharma then. Education was with the government and liquor was with private people. Today we see it was the opposite. Education is the fundamental right of a citizen which is enshrined in the Constitution of India. We had leaders like Shri.K.KamaRaj who had vision without limits of time and invested in education. Today we lack even leaders leave good leaders.

Albert Einstein said "Education is not the learning of facts but the training of the mind to think". But students today are only doing the first parts learning of facts and the training of mind is seen nowhere .Imagination must supersede knowledge because at times knowledge of something can hamper your learning. The whole system of education must be purged and a current and contemporary system should emerge for that would change everything , the way pupils learn, the way teachers teach and how it affects one's life. Most of the time we see education does not touch our life. I have seen so many young graduates unable to write a good letter, fill up a bank challan, create a resume, or write a composition. Education must follow the path of practical life and must be a life enabler rather than manufacturing parrots who recite what they have memorized. When the elementary things need paradigm change what is the use in autonomous status.

But one thing is sure that our government education officers could do nothing as they are only glorified clerks descended from British era and none have evolved with time and technology. This necessitates the need for a 24X7 autonomous body with real academicians of repute (Like what Supreme Court did for Cricket) who should have powers to redeem our education system.This could be brought in only by leaders with conviction and we have nothing more to do than to pray to God The Almighty.

தினமலர் விளக்கம்:
கல்வித் துறையில் மட்டுமின்றி, அரசியல், ஆட்சி, சமூக ஒழுங்கு, குடும்பத்தின் அமைப்பு போன்ற அத்துனை விஷயங்களிலும் ஒழுங்கீனம் ஆழமாகப் பரவி விட்டது என்று தாங்கள் குறிப்பிடும்பொழுது, தங்களுடைய நேர்மையான வேதனையை உணர முடிகிறது. தங்களைப் போல் இன்னும் சிலர் இந்த கருத்தைத் தெரிவித்திருக்கிறார்கள். அன்றைய ஆசிரியர்களைப் பற்றியும் மாணவர் நலனில் அவர்கள் காட்டிய உண்மையான அக்கறையையும் எடுத்துக் காட்டியுள்ளீர்கள். ஆசிரியர்களின் நல்லெண்ணத்தைப் பெற்றோர்கள் சரியாகப் புரிந்து கொண்டதால், மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தந்த தண்டனையையும் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. மிகவும் அழகாக ஒன்று சொல்லியிருக்கிறீர்கள், கல்வி கற்பது அன்று ஒரு மேலான தர்மமாக இருந்தது என்பது மிகப் பெரிய உண்மை. ஆனால், கடந்துவிட்ட அந்தச் சூழலைத் திரும்பப் பெற முடியாதவாறு இன்று ஒட்டுமொத்த சமூக இயக்கம் அமைந்துள்ளது. தவிர, இன்றும் மிகச் சிறந்த ஆசிரியர்கள், மாணவர் நலனில் அக்கறை கொண்டவர்கள் இருக்கத்தான் இருக்கிறார்கள். இது பேச்சுக்காக, வாதத்திற்காகச் சொல்லவில்லை. அரசு ஏற்பாடு செய்திருந்த 'கருத்து கேள்' கூட்டங்களில் பல ஆசிரியர்கள் இந்தப் பண்பை, மாணவர் நலன் போற்றப்பட வேண்டும் என்ற கருத்தை பாடத்திட்ட மாற்றம் மூலமாக நன்கு வெளிப்படுத்தினார்கள்.

கல்வியானது வாழ்க்கையோடு ஒட்டிச் சொல்லித்தரப்பட வேண்டும் என்ற தங்கள் கருத்தை அத்தனை ஆசிரியர்களும், அதிகாரிகளும் கூட ஒரு மனதாக ஏற்றும் கொண்டார்கள்.
இதெல்லாம் நாம் ஏன் எடுத்துக் கூறுகிறோம் என்றால், கல்வித் துறையில் இன்னும் நம்பிக்கை வைப்பதற்குக் காரணங்கள் உண்டு என்ற மகிழ்ச்சியான செய்தியைத் தங்களுக்கு உணர்த்தலாம் என்ற நம்முடைய நம்பிக்கையும்தான். இறுதியாக, எந்தவொரு குறுக்கீடும் இன்றி, தன்னிச்சையாக இயங்க முடிகின்ற ஒரு அமைப்பு வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறீர்கள். நாமும் அந்த கருத்தைத்தான் வேறொரு கோணத்தில் சொல்லிக் கொண்டு வருகிறோம். பள்ளிகளில் தன்னாட்சி என்ற கருத்து அடிப்படையில் தங்களுடைய விருப்பத்தைத்தான் அடிக்கோடிட்டு காட்டுகிறது.

ஏற்கனவே, பல ஆண்டுகளாக கல்லூரிகளில் தன்னாட்சி முறை செயல்பட்டு வருகிறது. ஒரு கல்லூரிக்குத் தன்னாட்சி வழங்க, 'க்எஇ ' பல கடுமையான விதிகளை பின்பற்றுகிறது. அதே வழியில்தான் பள்ளிகளில் தன்னாட்சி முறை கொண்டு வரப்பட வேண்டும் என்று நாம் கூறுகிறோம். சுருக்கமாக, தன்னாட்சி வழங்க, அரசு கையாளும் நிபந்தனைகள் எல்லாம் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் மட்டும்தான் தொடர்புடையவை. ஆகையால் தன்னாட்சியும் தரமும் சேர்ந்தே இணைந்திருக்கின்றன. தவிர, பாடத்திட்ட மாற்றம் என்ற அடிப்படைச் செய்தியுடன் 'தன்னாட்சி' முறையும் சேர்ந்தால், உறுதியாக மாணவர் நலன் காக்கப்படுவது சிறந்த முறையில் தொடங்கிவிடுகிறது. பிறகு, தொடர்ச்சி ஒரு பிரச்னையாக இருக்காது.

கடைசியாக, நல்லவர்கள், நல்ல ஆசிரியர்கள் இருக்கின்றனர் என்பது உண்மை. எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். இந்த எண்ணிக்கையை உயர்த்த, உயர சரியான சூழல் அமைந்துள்ளது. இந்த வாய்ப்பைத் தவற விடுதல், சமூகப்பொறுப்புணர்வு, விவேகமன்று. இத்தனையும் கருத்தில் கொண்டு தான், நாம் பள்ளிகளில் தன்னாட்சி என்ற மிகப் பெரிய சமூகப் பொறுப்புணர்வை வலியுறுத்துகிறோம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X