அமைச்சரின் அடக்கம்; அதிகாரிகளின் ஆடம்பரம்

Added : அக் 21, 2017 | கருத்துகள் (47)
Advertisement
சுற்றுலாத்துறை அமைச்சர் அல்போன்ஸ்,Tourism Minister Alpones, விமானம்,Aircraft,  எகானமிக்,Economics, பிசினஸ் வகுப்பு,Business Class,  எளிமை,Simplicity, புதுடில்லி,  New Delhi,சுற்றுலாத்துறை ,Tourism, அல்போன்ஸ், Alpones,ஏர் இந்தியா,  Air India,

புதுடில்லி: மத்திய சுற்றுலாத்துறை இணையமைச்சர் அல்போன்ஸ் ஏர் இந்தியா விமானத்தில் ‛எகானமிக்‛ வகுப்பில் பயணிக்க, அதே விமானத்தில் அதிகாரிகள் ‛பிசினஸ் ‛ வகுப்பில் பயணம் செய்தனர்.


புவனேஸ்வர் பயணம்


எகானமி வகுப்பில் பயணம் செய்த அமைச்சர்

இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய சுற்றுலாத்துறை இணையமைச்சர் கே ஜே அல்போன்ஸ் தலைமையில் சுற்றுலாத்துறை அதிகாரிகள் குழு டில்லியிலிருந்து ஒடிசா தலைநகர் புவனேஸ்வர் சென்றது. ஏர் இந்தியாவில் பயணம் செய்த இந்த குழுவில் சுற்றுலாத்துறை கூடுதல் செயலாளர், இயக்குநர் ஜெனரல், மற்றும் கூடுதல் இயக்குநர் ஜெனரல் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் இடம்பெற்றருந்தனர்.

விமானத்தில், அமைச்சர் ‛ எகானாமிக் ' பிரிவுக்கு சென்று அமர்ந்து கொண்டார். அதிகாரிகள் ‛ பிசினஸ்' பிரிவில் தங்களது வசதிக்கேற்ப அமர்ந்து கொண்டனர். அமைச்சர் தங்களுடன் அமரவில்லை என்பதை அறியாத அதிகாரிகள், விமானம் புவனேஸ்வரில் தரையிறங்கிய பின்னர் பின்னர் தான், அவர் தங்களுடன் அமரவில்லை என்பது தெரியவந்தது. தொடர்ந்து விமான ஊழியர்களிடம் விசாரித்ததில் அமைச்சர் ‛ எகானமிக்' பிரிவில் அமர்ந்திருந்தது தெரியவந்தது.


எளிமை


இந்த விவகாரம் பற்றி அமைச்சர் அல்போன்ஸ் கூறுகையில், அதிகாரிகள் ‛பிசினஸ்' வகுப்பில் பயணம் செய்ய உரிமை உண்டு. நான் யாரையும் சங்கடபடுத்த விரும்பவில்லை. நான் தனியாக பயணம் செய்யும் போதும் ‛ எகானமி' வகுப்பில் தான் பயணம் செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பயணத்தை தொடர்ந்து அதிகாரிகள், அமைச்சரும் உடன் வருவார் என தெரிந்தால், அவர் பயணம் செய்யும் விமானம் மற்றும் எந்த வகுப்பில் பயணம் செய்வார் என்பதை தெரிந்து கொண்டு, அதற்கேற்றவாறு தங்களது பயணத்தை அமைத்து கொள்கின்றனர்.
விமான நிலையங்களுக்கு செல்லும் அமைச்சர் அல்போன்ஸ், மற்ற அமைச்சர்கள் போல் அல்லாமல் தனக்கு அளிக்கப்பட்ட சலுகைகளை பயன்படுத்தாமல், பயணிகளுடன் சேர்ந்து, பஸ்சில் சென்று விமானத்தில் பயணம் செய்வார்.

Advertisement
வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RDS -  ( Posted via: Dinamalar Android App )
21-அக்-201723:47:24 IST Report Abuse
RDS Kamaraj
Rate this:
Share this comment
Cancel
மு. செந்தமிழன் - மதுரை ,இந்தியா
21-அக்-201721:40:24 IST Report Abuse
மு. செந்தமிழன் காங்கிரசில் இருந்த கக்கன் அவர்கள் அமைச்சர் பதவியில் இருந்து வெளியேறியவுடன். தனக்கு கொடுத்த காரை தானே முறைப்படி அரசாங்கத்திடம் ஒப்படைத்து அதற்கான ரசீதையும் பெற்று வெளியே வரும்பொழுது அவரது கார் டிரைவர் அவரை பார்த்தார். அவரிடம் கக்கனுக்கு என்னசொல்வ்து என்று தெரியவில்லை. அவரது கையை பிடித்து குலுக்கி இவ்வளவு நாள் எனக்காக பாதுகாப்பாக வண்டி ஓட்டுனதுக்கு நன்றி என்று தெரிவித்து அரசு பஸ்சில் பயணித்தார் கடைசி காலத்தில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் அனாதையாக நோயாளியாக கிடந்தார். அவரது நிலை பற்றி கேள்விப்பட்ட MGR அவருக்கு உதவிகள் செய்ய ஏற்பாடு செய்தார். நேர்மையாக இருந்தால் அரசு ஆஸ்பத்திரியில்தான் அனாதையாக கிடக்கணும் போல.
Rate this:
Share this comment
Cancel
Subbiah.N - karaikudi,இந்தியா
21-அக்-201720:46:14 IST Report Abuse
Subbiah.N முதலில் அதிகாரிகளைத் திருத்த வேண்டும். அப்போதுதான் அரசியல்வாதிகள் திருந்துவார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X