அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கருணாநிதியின் திடீர் வருகைக்கு
ஜோதிட பரிகாரம் காரணமா?

நிறைந்த அமாவாசை அன்று, தி.மு.க., தலைவர், கருணாநிதி, 'முரசொலி' அலுவலகம் வந்து சென்றார். ஜோதிடர் கூறிய பரிகாரத்திற் காகவே, அவர் அழைத்து வரப்பட்டதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருணாநிதியின்,திடீர் வருகைக்கு,ஜோதிட, பரிகாரம்,காரணமா?

இது குறித்து, அந்த வட்டாரங்கள் கூறியதாவது:



உடல் நலக்குறைவு காரணமாக, ஓராண்டாக, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல், சென்னை, கோபாலபுரம் வீட்டில், கருணாநிதி தொடர் சிகிச்சை எடுத்து வருகிறார். அவரை சந்திக்கவும், கட்சியினருக்கு தடை போடப் பட்டது. குடும்பத்தினர் சந்திக்கும் போது, எடுக்கப்படும் படங்கள் மட்டும் வெளியிடப் பட்டன.

பவள விழா:

இந்நிலையில், நீண்ட

இடைவெளிக்கு பின், அக்., 19ல், நிறைந்த அமாவாசை அன்று, கோடம்பாக்கத்தில் உள்ள, 'முரசொலி' பத்திரிகை அலுவலகத்திற்கு, கருணாநிதி அழைத்து வரப் பட்டார். அங்கு, பவள விழா கண்காட்சி அரங்கத்தை பார்வையிட்டதாக கூறப்பட்டது. அவரது திடீர் வருகையையும், ஜோதிட பரிகாரத்தையும் தொடர்புபடுத்தி, சில தகவல்கள்கூறப்படுகின்றன்.

கருணாநிதியின் உடல் நலம் சீரடைந்து வருகிறது. அவரால் நன்றாக கை, கால்களை அசைக்க முடிகிறது. மற்றவர்களை உற்று பார்க்கவும், சிரிக்கவும் செய்கிறார் என, டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். டாக்டர்களின் எதிர்ப் பை மீறி, கருணாநிதியை வெளியில் அழைத்து வந்து விட்டதாக, அவரது குடும்பத்தில் புகார் கிளம்பி உள்ளது. வழக்கமாக, இரவு, 9:00 மணிக்கு, கோபாலபுரம் வீட்டிற்கு, டாக்டர்கள் வருவர்; கருணாநிதியின் உடல் நிலையை பரிசோதித்து செல்வர்.

முரசொலி அலுவலகம் செல்வதற்காக, அன்றைய தினம், முன்கூட்டியே டாக்டர்கள் வரவழைக்கப் பட்டு உள்ளனர். குடும்ப டாக்டர், கோபால் மட்டும், கருணாநிதியுடன் சென்றுள்ளார். தினமும் மாலையில், கோபாலபுரம் வீட்டிற்கு வந்து, கருணா நிதியை கவனித்துக் கொள்ளும் ராஜாத்தி, மகள் கனிமொழிக்கு, இந்த தகவலை தெரிவிக்கவில்லை. இப்படி திடீரென, கருணாநிதியை வெளியில்

Advertisement

கூறிய யோசனை தான் காரணம் என, தெரிகிறது.

பதவி யோகம்: ஸ்டாலினுக்கு, முதல்வர் பதவி யோகம் அமைய வேண்டுமானால், அவரது தந்தை யான, கருணாநிதியின் எண்ண அலைகளின் ஓட்டம், ஸ்டாலினுக்கு ஆதரவாக செயல்பட வேண்டுமாம்.அதற்கு, கருணாநிதிக்கு பிடித்தமான, அவர் விரும்பும் செயல்களை எல்லாம் நிறைவேற்றி தரும் போது, அவர் பெறும் மகிழ்ச்சி, ஸ்டாலினுக்கு நன்மையை தேடி தரும் என, ஜோதிடர் ஒருவர் கூறியதாக தெரிகிறது. அதனால் தான், கருணா நிதிக்கு பிடித்த இடமான, முரசொலி அலுவல கத்திற்கு, அவரை அழைத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.இவ்வாறு கட்சி வட்டாரங்கள் கூறின. - நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (68)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malimar Nagore - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
06-நவ-201709:52:29 IST Report Abuse

Malimar Nagoreஒரு மாபெரும் தலைவனைப் பற்றி கூறும் இந்த சோமாரிகளுக்கு தவறிப் பிறந்தவன் என்று சொல்ல முடியும்.

Rate this:
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
31-அக்-201718:01:31 IST Report Abuse

தமிழர்நீதி கருணா , ஜெயா , ஸ்டாலின் ஆகியோருக்கு ஜோசியம் உள்ளுக்குள்ளும் , உலகில் பேச , பிழைக்க சுயமரியாதையும் தேவையாக இருக்கலாம் . ஆனால் மனிதனுக்கு தமிழனுக்கு , பெரியாரும் அவரின் சுயமரியாதை கொள்கையும்தான் தலைநிமிர வைத்தது. ஆதலால் தமிழனுக்கு சுயமரியாதை மிக மிக அவசியம் .

Rate this:

ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) கண், காது, மூக்கு வைத்து பேசுவதில்லை நம்மை மிஞ்ச யாருமில்லை...

Rate this:
மேலும் 65 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X