பொது செய்தி

தமிழ்நாடு

டெங்கு பரவல்; தனியார் நிறுவனம், மருத்துவமனைக்கு அபராதம்

Updated : அக் 22, 2017 | Added : அக் 22, 2017 | கருத்துகள் (7)
Advertisement
டெங்கு, மருத்துவமனை, அபராதம்

சென்னை: டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதை அடுத்து தமிழகம் முழுவதும் சுகாதார துறை அதிகாரிகள், கலெக்டர்கள், மாநகராட்சி கமிஷனர்கள் கடும் நடவடிக்கை எடுக்கும் பணியில் இறங்கியுள்ளனர். நீண்ட நாட்களாக அப்புறப்படுத்தாமல் போடப்பட்டிருக்கும் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
சேலம் மாநகராட்சி கமிஷனர் டெங்கு ஒழிப்பு குறித்து ஆய்வு நடத்தினார். அப்போது தனியார் மருத்துவமனையில் ஆய்வு செய்த போது, டெங்கு புழு உருவாக காரணமாக இருந்ததால் ரூ.5 லட்சமும், அபாயகரமான மருத்துவ கழிவுகளை அகற்றாததால் ரூ.5 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டது.


சேலத்தில் டெங்கு புழு உருவாக காரணமாக 2 மருத்துவமனைகள், 2 நூற்பாலைகள் மற்றும் ஒரு தேனீர் கடைக்கு ரூ.24.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

கலெக்டர் நோட்டீஸ்


டெங்கு கொசு உருவாக காரணமாக இருந்த பெரம்பலூர் ஆவின் நிர்வாகத்திற்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. போக்குவரத்து பணிமனைக்கு கலெக்டர் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.


பள்ளியை மூட உத்தரவு


சென்னை நந்தம்பாக்கம் பகுதியில் தனியார் பள்ளியில் பொது சுகாதாரத்துறை இயக்குநர் ஆய்வு நடத்தினார். டெங்குவுக்கு காரணமான ஏடிஎஸ் கொசுக்கள் உள்ளதாக பெற்றோர்கள் புகார் கூறியதை தொடர்ந்து சோதனை நடந்தது. இதில் கொசுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பள்ளியை சுத்தப்படுத்தவும், அதுவரை பள்ளியை திறக்கக்கூடாது எனவம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
22-அக்-201720:49:11 IST Report Abuse
Kuppuswamykesavan அவரவர் வீடுகளில் கொசுகள் உற்பத்தியாகாமல் மக்கள் கவனிசிக்கனும், அதே போல அரசு துறைகள் பொது இடங்களை கவனிசிக்கனும். இதனால் கொசுக்கள் உற்பத்தியை கட்டுபடுத்த முடியும்தானே?.
Rate this:
Share this comment
Cancel
SSTHUGLAK - DELTA,இந்தியா
22-அக்-201718:48:41 IST Report Abuse
SSTHUGLAK டெங்கு நோய் டெங்கு ஆட்சி டெங்கு ஊழல் ஆகா அற்புதம் அபாரம்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
22-அக்-201718:15:55 IST Report Abuse
Srinivasan Kannaiya அறுபது ஆண்டுகளாக அமைச்சர் வந்தால் மட்டும் சுண்ணாம்பு தடவும் அரசை என்ன செய்வது... இவ்வளவு சுகாதார கேட்டுக்கும் யார் காரணம்...?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X