சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நெல்லையில் கந்துவட்டி கொடுமை: 4 பேர் தீக்குளிப்பு; 3 பேர் பலி

Updated : அக் 23, 2017 | Added : அக் 23, 2017 | கருத்துகள் (101)
Advertisement
நெல்லை,Nellai, கலெக்டர் அலுவலகம், Collector office,கந்துவட்டி, Usury interest, கொடுமை,Horrible,  தீக்குளிப்பு, Fire,இசக்கிமுத்து, Isakimuthu, சுப்புலட்சுமி , Subbulakshmi,மதுசரண்யா, Madurasranya,அட்சய பரணிகா,Achya Baraniga,  கலெக்டர் சந்தீப் நந்தூரி,  Collector Sandeep Nanduri,

திருநெல்வேலி: நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு தீக்குளித்தனர். இதில் காயமுற்ற தாயும் 2 மகள்ளும் சிகிச்சை பலன் அளிக்காமல் பலியாயினர். இந்த சம்பவத்தால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள , காசிதர்மம் பகுதியை சேர்ந்தவர் இசக்கிமுத்து 27. இவரது மனைவி சுப்புலட்சுமி மற்றும் . மதுசரண்யா4 , அட்சய பரணிகா 1 ஆகிய இரண்டு குழந்தைகள், நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று தீக்குளித்தனர். இதில் தீக்காய சிகிச்சை பலன் அளிக்காமல் தாயும் மகள்கள் அட்சய பரணிகா, மதுசரண்யாவும் பலியாயினர்.

கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட தம்பதியர் இரண்டு பெண் குழந்தைகளுடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்தனர்.

@
இதே பகுதியை சேர்ந்த ஒருவரிடம் கடன் வாங்கியதாகவும், அவர் இந்த கடனை திரும்ப கேட்டு மிரட்டி அதிக வட்டி கேட்டு வருவதாகவும் போலீசாரிடம் சென்றுள்ளனர். போலீசாரும் கடன் கொடுத்தவருக்கே ஆதரவாக செயல்பட்டனராம். கந்துவட்டி கொடுமை குறித்து கலெக்டர் அலுவலகத்தில், 6 முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என இசக்கிமுத்து புகார் கூறியுள்ளார்.

படுகாயம் அடைந்த நான்கு பேரும் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து விசாரிக்கப்படும் என கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.3 பேர் கைது


இதனை தொடர்ந்து இவ்விவகாரத்தில் கந்துவட்டி வசூலித்த முத்துலெட்சுமி, அவரது கணவர் தளவாய்ராஜ் மற்றும் மாமனார் காளிராஜ் ஆகிய மூன்று பேரை அச்சன்புதுார் போலீசார் கைது செய்தனர்.


திருப்பூர்- கடலூரிலும் தீக்குளிப்பு

திருப்பூர் - கடலூரில் உள்ள கலெக்டர் அலுவலகத்திலும் 2 விவசாயிகள் தற்கொலை முயற்சி செய்தனர். திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி சச்சம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி பழனிச்சாமி. இவர் வண்டல் மண் எடுப்பது தொடர்பாக கண்டனம் தெரிவித்து தீக்குளித்தார். கலெக்டர் ஆபீசில் தீக்குளிக்க முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (101)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gnanasekaran Vedachalam - chennai,இந்தியா
30-அக்-201714:09:35 IST Report Abuse
Gnanasekaran Vedachalam கந்து வட்டியில் ஈடுபடுபவர் சமூக விரோத சக்தியின் ஒரு பிரிவான கொடிய பொருளாதார குற்ற பின்னணி உள்ளவராக உள்ளதால் அரசு எப்பொழுது வேண்டுமானாலும் நடவடிக்கை எடுக்க தயங்காது. ஆகியல் கிராமங்களில் மக்கள் அவரது குடும்பத்தியும் வாரிசுகளையும் புறக்கணிப்பு செய்வது நன்மை பயக்கும் ஏனென்றால் அவனுடைய ஒழுக்கம் அவன் சந்ததிக்கு போகும் அதனால் அவனை எல்லா சுப அசுப காரியங்களில் அவனை தள்ளி வைத்தால் அவன் திருந்தி விடுவான்
Rate this:
Share this comment
Cancel
Gnanasekaran Vedachalam - chennai,இந்தியா
27-அக்-201714:46:30 IST Report Abuse
Gnanasekaran Vedachalam கந்து வட்டி காரனிடம் கடன் வாங்குமுன் தன் வலிமை மன வலிமை ஆன்ம பலம் மதி பலம் கதி பலம் விதி பலம் நண்பர்களின் பலம் உறவினர்களின் தெரியவர்களின்பலம் பரீட்சையையமான அதிகாரவர்க்கத்தின் பலன் மற்றும் எதிரியின் பலம் ஆகியவற்றை சீர்த்தூக்கி பார்த்து கடன் வாங்கினால் இந்த நிலையை தவிர்க்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா
24-அக்-201700:17:42 IST Report Abuse
மஸ்தான் கனி நெஞ்சை உருகவைக்கும் சம்பவத்தை காணும் மனிதர்கள் ரோபோக்களாக மாறிவிட்டார்கள்., இருவரு மட்டும் தீயை அணைக்கிறார் மற்றவர்கள் படம்பிடித்து மீடியாவில் போட தங்களது மனதை கல்லாக மாற்றிக்கொண்டார் எதிர்காலத்தில் நிகழாதவாறு இருக்க தங்களது பிராத்தனையில் வேண்டிக்கொள்ளுங்கள்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X