சித்ரா மித்ரா

Added : அக் 24, 2017
Advertisement
""தீபாவளி டிரஸ். சூப்பரா இருந்ததுன்னு எல்லாரும் சொன்னாங்க,'' என்று மித்ரா வீட்டுக்கு வந்த சித்ரா, தீபாவளி பண்டிகை குறித்து ஆரம்பித்தாள்.""உனக்குப் பரவாயில்லை. ஆனால், அவிநாசி யூனியன் ஆபீசில்தான் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விட்டது,'' என்று பொடி வைத்து பேசினாள் மித்ரா.""ஏன் தீபாவளி வசூல் போதுமானதாக இல்லையா?'' என்றாள் சித்ரா.""எல்லா துறையிலயும்
சித்ரா மித்ரா

""தீபாவளி டிரஸ். சூப்பரா இருந்ததுன்னு எல்லாரும் சொன்னாங்க,'' என்று மித்ரா வீட்டுக்கு வந்த

சித்ரா, தீபாவளி பண்டிகை குறித்து ஆரம்பித்தாள்.""உனக்குப் பரவாயில்லை. ஆனால், அவிநாசி யூனியன் ஆபீசில்தான் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விட்டது,'' என்று பொடி வைத்து பேசினாள் மித்ரா.""ஏன் தீபாவளி வசூல் போதுமானதாக இல்லையா?'' என்றாள் சித்ரா.""எல்லா துறையிலயும் அவங்கவங்க லெவலுக்கு கலெக்ஷன் பார்த்துட்டாங்க. இது வேற. தீபாவளியின் போது, உள்ளாட்சி அமைப்புகளில் வேலை பார்க்குற கடைநிலை ஊழியர்களான குடிநீர் வினியோகம், துப்புரவு பணியில் உள்ளவங்களுக்கு சீருடை கொடுப்பாங்க. இது சம்பந்தமா உள்ளாட்சி துறை அலுவலகங்களுக்கு காதி வாரியத்திலிருந்து கடிதம் அனுப்பியிருக்காங்க. ஆனால், யூனியன் ஆபீசுல தபால் பிரிவு பார்க்கற ஊழியர் கடிதத்தை மிஸ் பண்ணிட்டாரு. இந்த தகவல் யாருக்கும் போகலை,''""ஊழியர்கள் எல்லோரும் ஆவலா எதிர்பார்த்தும் அவங்களுக்கு கிடைக்கலை. கடிதம் கிடைக்காததால், தீபாவளிக்கு முன்தினம் மறுபடி ஒரு ஆர்டர் வாங்கினாங்களாம். பண்டிகைக்கு முந்தைய நாள் இந்த ஆர்டரை வாங்கி யாருக்கு என்ன பிரயோஜனமுன்னு, புலம்புறாங்களாம்,'' என்றாள் மித்ரா.""தபால் வேலை பார்க்கற ஊழியரை தான் யாரும், எதுவும் பேசக்கூடாதுன்னு "அதிகாரி' உத்தரவு போட்டுட்டாரே. அதனால் ஊழியர்களும், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலைன்னு பேசாம தலையில் அடிச்சுட்டு போயிருப்பாங்க,'' என்றாள் சித்ரா.""நம்ம மாவட்டத்துல உள்ள யூனியன் ஆபீஸ்களில், அதிகாரிங்க அவங்களாகவே, புதுசா ஒரு உத்தரவை போட்டு செயல்படுத்தறாங்களாமே,'' என்றாள் மித்ரா.""மக்களுக்கு நல்லது செய்யற உத்தரவுன்னா பின்பற்ற வேண்டியது தானே,'' என்றாள் சித்ரா.""யாருக்கு இதுல நல்லதுன்னு அவங்க தான் சொல்லணும். திருமண உதவி விண்ணப்பங்கள் ஆன்லைனில் பதிவு செஞ்சா போதும். ஆனால், சில ஆபீசருங்க இதுல கல்லா கட்டணும்னு, ஆன்லைன்ல பதிவு செஞ்சாலும் நேரடியாக அதிகாரியிடம் விண்ணப்பத்தை கொடுத்து கையொப்பம் வாங்கினாத்தான், "சாங்ஷன்' ஆகுமுன்னு சொல்லி, அப்பாவிகிட்ட ஒரு அமவுண்ட் போட்டு தாக்கிடறாங்களாம்,'' என்று உண்மையை உடைத்தாள் மித்ரா.""ஆளுங்கட்சி ஆண்டு விழாவால, மொத்தம் எத்தனை அணி இருக்குன்னு, தெளிவா தெரிஞ்சிடுச்சு,'' என்றவாறே, சித்ரா வீட்டு வரவேற்பறையில் அமர்ந்தாள் சித்ரா.""ஆண்டு விழா எப்ப கொண்டாடினாங்க?'' என்று, ஆச்சரியப்பட்டாள் மித்ரா.""கட்சி தொண்டர்களுக்கு கூட தெரியாம, விழாவை சிம்பிளா முடிச்சுட்டாங்க. திருப்பூரை சுத்தியிருக்கிற நிர்வாகிங்க, முன்னாள், இன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் வந்து கலந்துகிட்டாங்களாம். ஆனா, "மாஜி' அமைச்சர் கலந்துக்கலையாம். "குரூப் பாலிடிக்ஸ்' வெட்டவெளிச்சமா தெரிஞ்சதை, கட்சிக்காரங்களே பேசிக்கிட்டாங்களாம்,'' என்றாள் சித்ரா.""எல்லோருக்கும் பயம் விட்டுப்போச்சு. சின்னம் வந்த பிறகு, ஒருவேளை நெருக்கமாயிடுவாங்களோ என்னவோ,'' என்று இழுத்தாள் மித்ரா.""வீரபாண்டி "மாஜி' கவுன்சிலர், சத்தமில்லாம, தி.மு.க., பக்கம் போயிட்டாரு,'' என்றாள் சித்ரா.""செப்., 21ல், தொட்டி கட்டறதுக்கு பூமி பூஜை நடக்கறதா இருந்துச்சாம். "மாஜி' கவுன்சிலர் அம்மா இறந்துட்டாங்க. துக்கம் விசாரிக்க போன எம்.எல்.ஏ., "இப்ப தொட்டிக்கு பூமி பூஜை போடறதில் என்ன அவசரம்?'ன்னு கேட்டு, "மாஜி'யை டென்ஷன் ஆக்கிட்டாரு. இதனால, கோபப்பட்ட, மாஜி தீபாவளிக்கு மொத நாள், தி.மு.க.,வில் ஐக்கியமாயிட்டாரு,'' என்றாள் மித்ரா.""ஓ, அப்படியா சங்கதி? அதுதான் "வாட்ஸ்அப்'பில் வலம் வருதா?'' என்றாள் சித்ரா.""வாட்ஸ்- ஆப்'னு சொன்னதும் ஞாபகம் வருது. தேர்தல் கமிஷன்ல இருந்த தகவல் வந்தா, அதை தாலுகா வாரியா அனுப்ப "லேட்' ஆகுதாம். அதனால, தேர்தல் பிரிவுல "வாட்ஸ் ஆப்' குரூப் ஆரம்பிச்சுட்டாங்களாம்,'' என்றாள் மித்ரா.""இப்பெல்லாம், அந்த சங்கத்துல, ஆளாளுக்கு "ராஜா' மாதிரி செயல்பட ஆரம்பிச்சுட்டாங்க,'' என்றவாறே, பின்னலாடை துறை பற்றிய பேச்சை ஆரம்பித்தாள் சித்ரா.""எந்த சங்கம்? என்ன விவகாரம்?,'' என்று ஆர்வமானாள் மித்ரா.""நம்மூர்ல "தேநீர்' பேர்ல இருக்கற சங்கம் தான். முன்பு தலைவரா இருந்த, "வேல்' ஆனவரிடம் "சக்தி' இருந்துச்சு; எல்லோரும் கட்டுப்பட்டு இருந்தாங்க. செய்தி தொடர்பு துறையும் சுறுசுறுப்பா இயங்கிச்சு,'' என்று சித்ரா கூறி முடிப்பதற்குள், "" இப்ப என்ன, தலைகீழா மாறிடுச்சா,'' என்று மித்ரா கேட்டாள்.""ஆமா. ஏதாவது பங்ஷன் நடந்தா கூட, உடனுக்குடன் சொல்றதில்லை. இப்ப இருக்கிற தலைவரோடு மென்மையான போக்கால, எல்லா அலுவலர்களுமே, "நானே ராஜா.. நானே மந்திரி' மாதிரி செயல்பட ஆரம்பிச்சுட்டாங்களாம். மாலை, 6:00 மணிக்கு, மேல மொபைல்போனை ஸ்விட்ச் ஆப் செஞ்சுட்டு "சைலன்ட்' டா இருக்காங்களாம். யாராவது ஏதாவது சந்தேகம் வந்தா, யார் கிட்ட கேட்குறதுன்னு முழிக்கிறாங்களாம். இந்த போக்கு மாறினா, சங்க வளர்ச்சிக்கு ரொம்ப நல்லதுன்னு, அவங்க உறுப்பினர்களே பேசிக்கிறாங்க,'' என்று சித்ரா கூறியதும், ஆவி பறக்க "டீ' கொண்டு வந்தாள் மித்ரா.""தனியா கவனிச்சா உடனே அப்ரூவல் கொடுக்கறது, இல்லைன்னா ரிஜெக்ட் பண்றது என, விவசாயிங்களை வச்சு தனி அரசாங்கமே நடத்திட்டு இருக்காங்களாம்,'' என்று சித்ரா புதிர்போட்டாள்.""கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்க,'' என்று மித்ரா சலித்து கொண்டாள்.""பல்லடம் விவசாயிங்க, மானிய திட்டங்கள வாங்கணும்னா, பட்டா, சிட்டா, ரேஷன் கார்டு அது, இதுன்னு எல்லாத்தை எடுத்துட்டு, "வி.ஏ.ஓ., ஆர்.ஐ., அங்க இங்கன்னு அலைய வேண்டியிருக்கு. இது எல்லாத்தையும் கொண்டு போனாலும், கீழ் மட்ட ஆபீசர்களை தனியா "கவனிச்சா' மட்டும்தான் வேலை நடக்குது,'' என்று புலம்பினாள் சித்ரா.""நமக்கு சோறு போடுற விவசாயிங்ககிட்ட "மாமூல்' வாங்குறது "டூ மச்,'' என்று ஆதங்கப்பட்டாள் மித்ரா.""வேலை நடந்தா சரின்னு, வைட்டமின் "ப' இருக்கறவங்க, காரியத்தை முடிச்சிடறாங்க. ஆனா, நேர்மையாக இருக்கிற விவசாயிங்க, நமக்கு மானியம், கிடைக்கலன்னு கவலையோட இருக்காங்க,'' என்று விளக்கினாள் சித்ரா.""திருப்பூர் ரூரல் போலீஸ், ராக்கியாபாளையம் பிரிவில், செவந்தாம்பாளையம் ரோட்டில், வீடுகள் நிறைய இருக்குற இடத்துல, "அந்த மேட்டர்' கொடி கட்டி பறக்குதாம். அங்கு வருபவர்களின் வண்டியை வாங்கிட்டு போயிட்டு, திருப்பி கொடுக்கறதேயில்லையாம். கேட்டால், "நீ, இங்க வந்ததை, உங்க வீட்டுல சொல்வோம்னு, மிரட்டி, பணத்தை கறக்கறாங்களாம்,'' என்று, மித்ரா போலீஸ் மேட்டருக்கு தாவினாள்.""இரண்டு நாளைக்கு முன்னாடி, அமராவதிபாளையத்தில் ஒரு தோட்டத்தில், போலீஸ்காரங்க "கெடா' வெட்டி விருந்து வெச்சாங்களாம். என்ன விஷயமுன்னு கேட்டதற்கு, "சூசைட்' "ஏக்ஸிடென்ட்' நிறைய நடக்குதாம். அதற்காக, ஜோஷியர் ஒருத்தரோட ஆலோசனையின் பேரில், கெடா வெட்டினாங்களாம்,'' என்று சித்ரா தன் பங்குக்கு கூறினாள்.""அது, வேற விஷயம்பா. ஸ்டேஷன் இன்ஸ்பெக்டருக்கு ஏகப்பட்ட பிரச்னையாம். அதனால, ஒழுங்கு நடவடிக்கை ஏதும் வராம இருக்குறதுக்கு, "கெடா' வெட்டுனதாக பேச்சு அடிபடுது,'' என்று மித்ரா விளக்கினாள்.""பாண்டியன் நகர் அருகே சேவல் வைச்சு ஜோரா சூதாட்டம் நடக்குது. இது தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுத்தாலும், சும்மா பேருக்கு, ரெய்டு போறாங்களாம். வெறுத்து போன மக்களும் நமக்கு எதுக்கு வம்புன்னு, "கப்சிப்'ன்னு இருக்காங்களாம்,'' என்றாள் சித்ரா.""அடடே, முக்கியமான மேட்டரை மறந்துட்டேன். சிட்டியில் உள்ள போலீஸ்காரங்க பயத்துடன் இருக்காங்க. போன வாரம், திருடனுங்ககிட்ட, லஞ்சம் வாங்குன எஸ்.ஐ., பத்தி பேசுனோம், ஞாபகமிருக்கா. அந்த எஸ்.ஐ.யை சஸ்பென்ட், "பெட்ரோல்' மேட்டர் விவகாரத்தில, கான்ஸ்டபிள் ஒருவர் டிரான்ஸ்பர் என, அதிரடி சரவெடி வெடிச்சு, கமிஷனர் தீபாவளி கொண்டாடினாராம்,''""இதைக்கண்டு, ஸ்டேஷன்களில், வைட்டமின் "ப' வை, கட்டுக்கட்டாக சேர்த்துட்டு, குறுநில மன்னர்களாக இருந்த போலீசார், தங்களது ஆட்டத்தை குறைச்சுட்டு, அடக்கி வசிக்க ஆரம்பிச்சிட்டாங்க,'' என்று மித்ரா கூறி முடித்ததும், ""எப்படியோ திருந்தினா சரிதான்,'' என்ற சித்ரா, வண்டியை ஸ்டார்ட் செய்து கிளம்பினாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X