சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தீபாவளி கொண்டாடிய மாணவர்களுக்கு தண்டனை

Added : அக் 24, 2017 | கருத்துகள் (220)
Share
Advertisement
தீபாவளி,Diwali, மாணவர்கள்,Students, தண்டனை, Punishment, பெற்றோர்கள்,Parents, திருச்சி, Trichy,சர்ச்சை,Controversy, தனியார் பள்ளி , Private School, பள்ளி தலைமையாசிரியர்,School Headmaster, உடற்கல்வியாசிரியர் ,physical education Teacher , மாசு கட்டுப்பாடு வாரியம் , Pollution Control Board,

திருச்சி: தீபாவளி கொண்டாடிய மாணவர்களுக்கு தண்டனை வழங்கிய பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் தீபாவளி கொண்டிய மாணவர்களுக்கு தண்டனையும், கொண்டாடாதவர்களுக்கு பாராட்டு சான்றிதழும் வழங்கிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி பாலக்கரை கீழப்புதூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளி தீபாவளி விடுமுறை முடிந்து சமீபத்தில் திறக்கப்பட்டது. விடுமுறை முடிந்து திரும்பிய மாணவர்களிடம் யார் பட்டாசு வெடித்து கொண்டாடினீர்கள் என்று கேட்கப்பட்டது.

தீபாவளிக்கு பட்டாசு வெடித்த மாணவ, மாணவிகளுக்கு திருச்சியில் உள்ள பள்ளி நிர்வாகம் தண்டனை தந்தது குறித்து அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்து முன்னணியினர் பாலக்கரை காவல் நிலைய ஆய்வாளரை முற்றுகையிட்டனர்.

இதில் ஆமாம் என பதில் சொல்லிய மாணவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டதுடன், அவர்கள் பாவம் இழைத்து விட்டதாக கூறி கடவுளிடம் மன்னிப்பும் கேட்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் மருதாணி வைத்திருந்த மாணவிக்கு அடியும் விழுந்துள்ளது.

அதே போல் தீபாவளி கொண்டாடவில்லை என கூறிய மாணவர்களுக்கு பாராட்டு கடிதமும் வழங்கப்பட்டுள்ளது. இத்தகவல் அறித்த பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர். மாணவர்களுக்கு தண்டனை வழங்கிய பள்ளி தலைமையாசிரியர், உடற்கல்வியாசிரியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.

இதுகுறித்து பள்ளி நிர்வாகம் விளக்கம் தெரிவிக்கையில் ஒலி மற்றும் மாசினை குறைக்கும் வகையில் மாசு கட்டுப்பாடு வாரியம் வழங்கிய அறிவுரைகளையே பின்பற்றியதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து பள்ளி தலைமையாசிரியர், உடற்கல்வியாசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (220)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
B.s. Pillai - MUMBAI,இந்தியா
25-அக்-201704:29:04 IST Report Abuse
B.s. Pillai The British introduced today's education tem to rule India and change our deep rooted culture.Today we are more westernised than Indians. Of course, there are no two opinions that Christians are more involved in Education and doing great service. There may be some fanatics who adopt to this type of methods. Me and my wife were students of Christian school and followed their rules by studying bible and scored highest marks in Bible lessons also. That did not change our basic religious feelings and as a grown up person, I am a devotee of Hindu Gods. So let them try but we are basically very strong rooted in our customs and religion and it can go on and on, but never can they succeed.
Rate this:
Cancel
rajarajan - bangalore,இந்தியா
24-அக்-201721:23:01 IST Report Abuse
rajarajan இதுகுறித்து தமிழிசையோ ஹரிஹர ராஜா சர்மாவோ இதுவரை எந்த கருத்தும் கூறாதது ஏன். பள்ளிக்கல்வித்துறை தூங்குகிறதா? இதுபோன்று மனநிலை சரியில்லாதோர் நடத்தும் பள்ளிகளை உடனடியாக இழுத்து மூடவேண்டும்
Rate this:
Cancel
Indian - Bangalore,இந்தியா
24-அக்-201719:29:52 IST Report Abuse
Indian இங்கு கோபத்துடன் பதிவு செய்யும் வாசகர்களில் யாரவது இதற்கு மேல் முயற்சி செய்து ஹிந்துக்களுக்கு மட்டும் தடை, கட்டுப்பாடு விதிக்கும் RTE , 93rd amendment , article 25 ,30 போன்ற சட்டங்கள், சரத்துக்களை புரிந்துகொள்ள வேண்டும். யூடியூபில் indic movement பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X