ஷாப்பிங் செய்ய சுகேசுக்கு உதவி; டில்லி போலீசார் 2 பேர் கைது| Dinamalar

ஷாப்பிங் செய்ய சுகேசுக்கு உதவி; டில்லி போலீசார் 2 பேர் கைது

Updated : அக் 24, 2017 | Added : அக் 24, 2017 | கருத்துகள் (12)
Advertisement
ஷாப்பிங், சுகேஷ்,Sukesh, டில்லி போலீஸ் ,Delhi Police, கைது, Arrested,இரட்டைஇலை,irattai ilai, தினகரன்,Dinakaran,  சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்,Chennai RK Nagar By-Election,  அதிமுக, AIADMK, ஓ.பி.எஸ்.,OPS, தேர்தல் கமிஷன், Election Commission,

புதுடில்லி: இரட்டை இலை சின்னத்தை பெற்று தருவதற்கு லஞ்சம் கொடுக்க புரோக்கராக செயல்பட்ட சுகேசுக்கு உதவியதாக டில்லி போலீசார் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடந்தபோது அதிமுகவில் இருந்து பிரிந்த ஓ.பி.எஸ்., அணியினரின் கோரிக்கையை ஏற்று தேர்தல் கமிஷன் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்தது. இதனையடுத்து தினகரன் தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு பல கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டது. இதில் புரோக்கராக செயல்பட்டவர் சுகேஷ். இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தினகரன் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் உள்ளார்.


சுகேசுக்கு உதவி போலீசார் இருவர் கைது

ஒரு விசாரணைக்காக சுகேஷ் பெங்களூரு அழைத்து செல்லப்பட்டார். இந்நேரத்தில் சுகேஷ் சுதந்திரமாக ஷாப்பிங் செய்யவும், சில இடங்களுக்கு சென்று வரவும் சில போலீசார் உதவி செய்துள்ளதாக தெரிகிறது.
இதனை விசாரித்த மேல் அதிகாரிகள் 2 போலீசாரை கைது செய்ய இன்று உத்தரவிட்டனர். மேலும் 5 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் மேலும் அதிரடி நடவடிக்கைகள் தொடரலாம் என டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sanny - sydney,ஆஸ்திரேலியா
24-அக்-201720:05:41 IST Report Abuse
Sanny இவர்களுக்கு தண்டனை, பெங்களூர் சிறையில் சசிக்கு செய்த சலுகைகளுக்கு உதவியவர்களுக்கு என்னங்க தண்டனை.
Rate this:
Share this comment
Cancel
Varun Ramesh - Chennai,இந்தியா
24-அக்-201716:10:36 IST Report Abuse
Varun Ramesh தண்டனை கைதிகளுக்கு செல் போன், லாஹிரி வஸ்த்துகள், தொலைக்காட்சி வசதி, விரும்பிய உணவு, உள்ளே இருந்து கொண்டே வெளியே இருக்கும் போது செய்து வந்த அதே சட்ட விரோத செயல்களை தடையின்றி தொடர்ந்து செய்ய சுதந்திரம் இதெல்லாம் செய்து கொடுப்பதை தட்டிக்கேட்கும் அதிகாரமில்லை நீதி துறை, இவ்வளவும் இருந்தால் ஷாப்பிங் என்ன சிங்கப்பூர் டூர் கூட சகேசுக்கு சாத்தியமே
Rate this:
Share this comment
Cancel
rajan. - kerala,இந்தியா
24-அக்-201713:19:30 IST Report Abuse
rajan.  பெரும் புள்ளிகள், அரசியல்வாதிகள் தண்டனை கைதியாக எந்த சிறைச்சாலைக்கு வந்தாலும் அந்த சிறைச்சாலை வளம் கொழிக்கும் இடமாக மாறி விடும் இந்தியாவில். ஆகவே இனி நெதர்லாந்து சிறைச்சாலையை வாடகைக்கு எடுத்து இவனுகளை அங்கு கொண்டு காய போடுங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X