Air Force Planes Land On Highway Near Lucknow In 2-Hour Drill | நெடுஞ்சாலையில் இறங்கி பயிற்சியில் ஈடுபட்ட விமானங்கள்| Dinamalar

நெடுஞ்சாலையில் இறங்கி பயிற்சியில் ஈடுபட்ட விமானங்கள்

Updated : அக் 25, 2017 | Added : அக் 24, 2017 | கருத்துகள் (6)
Advertisement
போர் விமானங்கள், War planes,எக்ஸ்பிரஸ்வே, Expressway,  ஆக்ரா - லக்னோ எக்ஸ்பிரஸ்வே, Agra - Lucknow Expressway, சி-130 ஜே சூப்பர் ஹெர்குலஸ்,  C-130 J Super Hercules,சுகோய்,  Sukai,மிரேஜ் 2000எஸ், Mirage 2000 S, விமானப்படை,Air Force,  சாலை,Road,  புதுடில்லி,New Delhi,

புதுடில்லி: உ.பி.,யில், ஆக்ரா - லக்னோ எக்ஸ்பிரஸ்வே, நெடுஞ்சாலையில் தரை இறங்கி, போர் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டன. உத்தர பிரதேசத்தில், முதல்வர், யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. 2016 நவம்பரில், ஆக்ரா - லக்னோ எக்ஸ்பிரஸ்வே, போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது. இதன் துவக்க விழாவில், எக்ஸ்பிரஸ்வேயில், எட்டு போர் விமானங்கள் தரையிறங்கின. அவசர காலங்களில், போர் விமானங்களை தரையிறக்கவும், புறப்படவும், இந்த, 'எக்ஸ்பிரஸ்வே'யை பயன்படுத்த விமானப் படை திட்டமிட்டுள்ளது.அதன்படி, நேற்று, இந்திய விமானப்படையின், 20 ஜெட் போர் விமானங்கள் மற்றும் போக்குவரத்து விமானங்கள், இந்த நெடுஞ்சாலையில் பயிற்சியில் ஈடுபட்டன.நெடுஞ்சாலையில், போர் விமானங்கள் பயிற்சி துவங்குவதற்கு முன், விமானப் படை துணைத் தலைவர், எஸ்.பி.தேவ் கூறியதாவது:இந்த பயிற்சியில், 20 போர் விமானங்கள் பங்கேற்றன. முதல் முறையாக, ராணுவ போக்குவரத்து விமானமும் பயிற்சியில் ஈடுபட்டது. போர் காலங்களில், விமானங்கள் தரையிறங்க, விமான ஓடுதளம் கிடைக்காவிட்டால், நெடுஞ்சாலைகள் சிறந்த மாற்றாக இருக்கும்.மத்திய, மாநில அரசுகள், இதை கருத்தில் வைத்து, போர் விமானஙகள் இறங்கும் வகையில், புதிய நெடுஞ்சாலைகளை அமைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.





உத்தர பிரசேதத்தில் ஆக்ரா-லக்னோ எக்ஸ்பிரஸ் வே நெடுஞ்சாலையில் போர் விமானங்களை இறக்கி சோதனை நடத்தப்பட்டது.





வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SHANMUGA NATHAN ARUMUGAM - hidd,பஹ்ரைன்
24-அக்-201719:28:12 IST Report Abuse
SHANMUGA NATHAN ARUMUGAM நல்ல முயற்சி, இதுபோன்று இன்னும் பல இடங்கள் ரகசியமாக சோதனை செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
24-அக்-201717:43:03 IST Report Abuse
மலரின் மகள் பாதுகாப்பிற்கு கடந்த சில காலங்களாக அதிக முக்கியத்துவம் தரப்படுவது மகிழ்ச்சி. இது போன்ற சாலைகளின் முக்கியத்துவத்தை அனைத்து மக்களும் உணர வைக்கவேண்டும் குறிப்பாக அந்த வழித்தடத்தை பயன்படுத்துவோர். அந்த நெடுஞ்சாலைகளை பராமரிப்போருக்கு சிறப்பு பயிற்சி மற்றும்தவறினால் கடுமையான தண்டனை ராணுவ தண்டனைக்கு ஈடாக தருவதாக சட்டத்தில் வழிமுனை செய்யவேண்டும். நமது பிரச்சினையே அந்த சாலைகளில் மாட்டுவண்டிகளை இயங்குவார்கள், ஆட்டோக்களும் சிறு வானங்களும் சகட்டு மேனிக்கு போகும் ஆங்காங்கே குறுக்கும் நெடுக்குமாக சிறுசாலகில் வந்துவிடும். கட்சிக்காரர்கள் நேரம் காலம் தெரியாது அங்கங்கே பள்ளம் தோண்டி கட்டவுட் கொடிகள் என்று தூள் கிளம்புவார்கள். எப்போது அந்த சாலைகளில் பொதுமக்கள் போர்வையில் யார் சாலை மறியல் செய்வார்கள் என்று யாருக்கும் தெரியாது. நமது அரசு என்ன செய்யும் ஒரு போர்டை எள்துஹி அங்கே வைத்து விடும் இந்த பகுதியில் அவசரகாலத்தில் போர் விமானங்கள் தரை இறங்கும் என்று. கொஞ்ச நாள் கழித்து அந்த போர்டில் யாரவது ஒரு சூப்பர் ஸ்டாரின் போட்டோவோ அல்லது ஒருஅரசியல் வாதியின் போட்டோ அல்லது உள்ளூரில் யாரவது ஒருவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டரை கூட ஒட்டி விடுவார்கள் நம்மவர்கள். யாரவது புகார் கூறினால் அங்கு பேருக்கு ஒரு ட்ராபிக் போலீசை கொஞ்ச நாளைக்கு நிறுத்தி விடுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
raman - Madurai,இந்தியா
24-அக்-201717:18:24 IST Report Abuse
raman நாட்டிற்கு மிகவும் தேவையான ஒன்று. போர்க்காலங்களில் மிகவும் உதவியாக இருக்கும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X