பதிவு செய்த நாள் :
ஒப்புதல்!
83,000 கி.மீ., நெடுஞ்சாலை அமைக்க...
ரூ.7 லட்சம் கோடியில் மத்திய அரசு மெகா திட்டம்

புதுடில்லி:உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்கும் வகையிலும், வேலைவாய்ப்பு களை உருவாக்கும் வகையிலும், நாடு முழுவதும், 83 ஆயிரம் கி.மீ.,க்கு நெடுஞ்சாலை கள் அமைக்கப்பட உள்ளன. அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஏழு லட்சம் கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட உள்ள நெடுஞ் சாலை திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

 நெடுஞ்சாலை, Highways, உள்கட்டமைப்பு வசதி,Infrastructure facility, வேலைவாய்ப்பு,Employment, மத்திய அமைச்சரவை,Union Cabinet, பிரதமர் நரேந்திர மோடி, Prime Minister Narendra Modi, நெடுஞ்சாலை துறை, Highway Department, பாரத்மாலா,Bharatmalah, மும்பை - கொச்சி - கன்னியா குமரி,Mumbai - Kochi - Kanniya Kumari, பெங்களூரு - மங்களூரு, Bengaluru - Mangalore, ஐதராபாத் - பனாஜி,Hyderabad - Panaji, சம்பல்புர் - ராஞ்சி ,Sampalpur - Ranchi, மத்திய அரசு, Central Government, இமயமலை ,Himalayan, தங்க நாற்கர சாலை திட்டம்,Golden Fourway road Project, தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டம் ,National Highway Development Project, ஜம்மு - காஷ்மீர்,Jammu - Kashmir, ஹிமாச்சலப் பிரதேசம், Himachal Pradesh, உத்தரகண்ட் ,Uttarakhand, புதுடில்லி,New Delhi,Infrastructure, மோடி,modi

பிரதமர், நரேந்திர மோடி தலைமையில், மத்திய அமைச்சரவை கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. இதில், நாடு முழுவதும், 83 ஆயிரம் கி.மீ., நீள நெடுஞ்சாலை அமைக்கும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக, அடுத்த ஐந்து ஆண்டுகளில், 7 லட்சம்
கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது.

40 ஆயிரம் கி.மீ.,


இது குறித்து மத்திய அரசின், நெடுஞ்சாலை துறை உயரதிகாரிகள் கூறியதாவது:நாட்டின்

மிகப் பெரிய உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்ட ஒப்புதலாக இது அமைந்துள்ளது. 'பாரத்மாலா' எனப்படும், நாட்டின் எல்லையோரப் பகுதிகளை இணைக்கும் திட்டத்தின் முதல் கட்டமான, 3.5 லட்சம் கோடி ரூபாய் செலவில்,40 ஆயிரம் கி.மீ., சாலைகள் அமைக்கும் திட்டமும், இதில் அடங்கும்.வாகனப் போக்குவரத்து நெரிசல் குறைந்தால், பொருட்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்து செல்வது சுலபமாகும்.

தற்போதைய மோசமான சாலைகள், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களால், ஒரு லாரி சராசரியாக ஒரு நாளில் 250 முதல், 300 கி.மீ., பயணத்தையே மேற்கொள்ள முடிகிறது. வளர்ந்த நாடுகளில், சராசரியாக ஒரு நாளில், 800 கி.மீ.,யை ஒரு லாரி கடக்கிறது.

உருவாக்கவில்லை


மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நெடுஞ்சாலை திட்டத்தில், பல பொருளாதார பாதைகள் அமைக்கும் திட்டமும் அடங்கும். மும்பை - கொச்சி - கன்னியா குமரி, பெங்களூரு - மங்களூரு, ஐதராபாத் - பனாஜி, சம்பல்புர் - ராஞ்சி உள்ளிட்டவை இதில் அடங்கும். பாரத் மாலா திட்டத்தில், 44 பொருளாதார பாதைகள் திட்டத்தை செயல்படுத்த முடியும் என, கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹிமாச்சலப் பிரதேசம், குஜராத் மாநில சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்த அறிவிப்பு

Advertisement

வெளியாகி உள்ளது. மத்திய அரசு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவில்லை என, காங்கிரஸ் உள்ளிட்டஎதிர்க்கட்சிகள், விமர்சனம் செய்து வருகின்றன. இந்நிலையில், இந்த நெடுஞ்சாலை திட்டங்கள் மூலம், புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்.

'பாரத் மாலா' திட்டம் என்ன?


வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, தங்க நாற்கர சாலை திட்டம் உள்ளிட்டவை அடங்கிய, தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டம் நிறைவேற்றபட்டது. அந்த திட்டத்துடன், நாட்டின் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங் கள் உள்ளிட்ட பகுதி களிலும், சர்வதேச எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளையும் இணைக்கும் வகையில் சாலைகள் அமைக்க உருவாக்கப்பட்டது, 'பாரத் மாலா' திட்டம். இதற்கு, 10 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், குஜராத்,ராஜஸ்தான் மாநிலங்களில் துவங்கி, பஞ்சாப் வழியாக, இமயமலை பிராந்தியத்தில் உள்ள, ஜம்மு - காஷ்மீர், ஹிமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்கள் வரை நெடுஞ்சாலை அமைக்கப் படும். உத்தர பிரதேசம், பீஹார் மாநிலங்களில் எல்லைப் பகுதி வழியாக, மேற்கு வங்கம், சிக்கிம், அசாம், அருணாசலப் பிரதேசம் மற்றும் மியான்மர் நாட்டின் எல்லையில் உள்ள மணிப்பூர், மிசோரம் வரை நெடுஞ்சாலை அமைக்கும் பணி நீட்டிக்கபடுகிறது. 51 ஆயிரம் கி.மீ., சாலைகள் இந்த திட்டத்தின் கீழ் அமைக்கப்படும்.


Advertisement

வாசகர் கருத்து (24)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
JAYABALAN R - MIYAPUR, HYDERABAD.,இந்தியா
25-அக்-201722:36:09 IST Report Abuse

JAYABALAN Rஇதனால் பயன் பெருபவர்கள் யார் ? சிமெண்ட் கம்பெனிகள், ஜல்லி கற்கள் சப்ளையர்கள், ரோடு காண்ட்ராக்ட் ரன்கள் - எல்லோரும் பெரும் முதலைகள். நதிகளை இணைத்தால் வெரும் விவசாயிகள் மட்டுமே பயன்பெறுவர். இதனால் ஆளுபவர்களுக்கு என்ன லாபம் ???? எனவே ரோடு தான் சிறந்தது.

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
25-அக்-201716:34:03 IST Report Abuse

Endrum Indian83,000 கி.மீ., நெடுஞ்சாலை அமைக்க... ரூ.7 லட்சம் கோடியில் மத்திய அரசு மெகா திட்டம்? ஆமடியோ 1 கி.மீ. ரூ. 8.4 கோடியா?????? ரொம்ப ரொம்ப அதிகமாக இருக்கின்றது இது 55 % கமிஷன் சேர்த்ததினால் இருக்கும் இவ்வளவு????

Rate this:
V Gopalan - Bangalore ,இந்தியா
25-அக்-201715:35:20 IST Report Abuse

V GopalanInstead of giving importance for linking National Rivers, spending money on road of no use obviously rather may be useful for collecting toll even after the target reached. Thought, PM will give some importance for the linking National Rivers, the moment he took the mantle but he has proved like aya ram gaya ram. By linking rivers, a lot of agricultural rands will be getting water, lot of employment opportunities besides Inland transport in the rivers et all but the Prime Minister did not give importance for such an important issue. When Shri AB Vajpayee was a Prime Minister, he took some interest but thereafter this issue has gone to cold storage. Any way, this might be the golden opportunity but could not utilise.

Rate this:
மேலும் 21 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X