பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி : ஹிஸ்புல் தலைவன் மகன் கைது

Added : அக் 24, 2017
Share
Advertisement

புதுடில்லி: பயங்கரவாத அமைப்புகளுக்கு, ஹவாலா மூலம் நிதி வந்தது தொடர்பான வழக்கில், ஹிஸ்புல் முஜாஹிதின் பயங்கரவாத அமைப்பின் தலைவன், சையத் சலாஹுதினின் மகன், ஷாகி யூசுப்பை, தேசிய புலனாய்வு போலீசார், நேற்று கைது செய்தனர்.
ஜம்மு - காஷ்மீரில், முதல்வர், மெஹபூபா முப்தி தலைமையில், மக்கள் ஜனநாயக கட்சி - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில், பயங்கரவாத அமைப்புகளுக்கு, ஹவாலா மூலம், ௨௦௧௧ - ௧௪ வரை, வெளிநாடுகளிலிருந்து பணம் வந்துள்ளது பற்றி, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்கிறது. இது தொடர்பாக, என்.ஐ.ஏ., இதுவரை, ஆறு பேர் மீது, டில்லி நீதிமன்றத்தில், இரண்டு குற்றப்பத்திரிகைகளை, தாக்கல் செய்துள்ளது.
ஆறு பேரில், பிரிவினைவாத அமைப்பின் தலைவர், கிலானியின் நெருங்கிய உதவியாளர் குலாம் அகமது பட் உட்பட, நான்கு பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ளனர்.
ஹில்புல் பயங்கரவாதிகள், முகமது மக்பூல் பண்டிட், அஜாஸ் அகமது பட் ஆகியோர், தலைமறைவாக உள்ளனர். இந்நிலையில், கைதான நான்கு பேரிடமும் நடத்திய விசாரணையில், ஹிஸ்புல் பயங்கரவாத அமைப்பின் தலைவன், சலாஹுதினின் மகன், ஷாகி யூசுப்புக்கு, ஹவாலா பணம் வந்ததில் தொடர்பு உள்ளது தெரிந்தது.
சிரியாவில் உள்ள ஹிஸ்புல் பயங்கரவாதி, அஜாஸ் அகமது பட், சலாஹுதினின்உத்தரவுப்படி, யூசுப்பிடம் லட்சக்கணக்கில் பணம்வழங்கியுள்ளது தெரிந்தது.
விவசாயத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ள யூசுப், ஜம்மு - காஷ்மீர் விவசாயத் துறையில், ௨௦௧௩ முதல் பணியாற்றி வருகிறார். பயங்கரவாதியிடமிருந்து பணம் வந்தது குறித்து விசாரிக்க, டில்லியில் உள்ள தங்கள் அலுவலகத்தில் ஆஜராகும்படி, யுசுப்புக்கு, என்.ஐ.ஏ., 'நோட்டீஸ்' அனுப்பியது. இதையடுத்து, டில்லிக்கு வந்தயூசுப், என்.ஐ.ஏ., அலுவலகத் தில், நேற்று காலை ஆஜரானார். அவரிடம் நடத்திய விசாரணையில், அவருக்கு, பயங்கரவாதியிடமிருந்து பணம் வந்துள்ளது உறுதியானது. இதையடுத்து, யூசுப்பை, என்.ஐ.ஏ., போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X