மாணவியரிடம், 'சில்மிஷம்' : சி.ஆர்.பி.எப்., வீரர்கள் கைது

Added : அக் 24, 2017
Advertisement

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில், பழங்குடியின மாணவியரிடம், 'சில்மிஷ'த்தில் ஈடுபட்ட, சி.ஆர்.பி.எப்., வீரர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். சத்தீஸ்கரில், ரமண் சிங் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள தண்டேவாடா என்ற இடத்தில், அரசு சார்பில், பழங்குடியினத்தைச் சேர்ந்த மாணவியருக்கான, உண்டு உறைவிடப் பள்ளி நடத்தப்படுகிறது.
'ரக் ஷா பந்தன்' விழாவை முன்னிட்டு, தண்டேவாடாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், பள்ளி மாணவியர் பங்கேற்றனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த, சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த வீரர்களுக்கு, மாணவியர், ராக்கி கட்டினர்.
விழா முடிந்த பின், ௧௧ம் வகுப்பு மாணவியர் சிலரை, சி.ஆர்.பி.எப்., வீரர்கள் இருவர், கழிப்பறைக்கு இழுத்து சென்று, சில்மிஷம் செய்துள்ளனர். இது பற்றி பள்ளி நிர்வாகத்திடம், மாணவியர் புகார் செய்தனர். போலீசிலும், மாவட்ட கலெக்டரிடமும், பள்ளி நிர்வாகம் புகார் செய்தது. இதையடுத்து, விசாரணை நடத்த, மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். சி.ஆர்.பி.எப்., சார்பிலும், உள் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.
ஆனால், வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையே, இது பற்றி, தேசிய மனித உரிமை கமிஷனிடம், சமூக சேவகர், மம்தா சர்மா என்பவர் புகார் செய்தார். மனித உரிமை கமிஷனை சேர்ந்த மூன்று பேர், பள்ளிக்கு வந்து, விசாரணை நடத்தினர்.
பாதிக்கப்பட்ட மாணவியரிடம் நடத்திய விசாரணையில், சில்மிஷத்தில் ஈடுபட்ட, இரண்டு, சி.ஆர்.பி.எப்., வீரர்கள் யார் என, தெரிந்தது. அவர்களை கைது செய்ய, மனித உரிமை கமிஷன் உத்தரவிட்டது.
இதையடுத்து, இரு வீரர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களை, 'சஸ்பெண்ட்' செய்து, சி.ஆர்.பி.எப்., உத்தரவிட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X