கந்துவட்டி கொடுமையை வேரறுக்க போலீசார் செய்ய வேண்டியது என்ன

Updated : அக் 26, 2017 | Added : அக் 26, 2017 | கருத்துகள் (2) | |
Advertisement
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது கொண்டு வந்த, கந்துவட்டி தடுப்புச் சட்டத்தை, போலீசார் கடுமையாக அமல்படுத்தினால் மட்டுமே, கந்துவட்டி கொடுமை தற்கொலைகளை தடுக்க முடியும.நெல்லை கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு வந்த கூலித்தொழிலாளி இசக்கி முத்து, அவரது மனைவி, இரண்டு பச்சிளங்குழந்தைகள் என நான்குபேர், தீக்குளித்து இறந்த சம்பவம் தமிழகத்தில் இதுவரை
கந்துவட்டி கொடுமை, Usury interest Horrible,ஜெயலலிதா, Jayalalithaa, கந்துவட்டி தடுப்புச் சட்டம், Usury interest Prevention Act,தற்கொலை,Suicide, நெல்லை கலெக்டர் அலுவலகம்,Nellai Collector Office,  இசக்கி முத்து,isaki muthu, வர்த்தகர்கள், Businessmen, தொழிலதிபர்கள், Entrepreneurs,விவசாயிகள், Farmers,திரைப்பட தயாரிப்பாளர் , Film Producers,  உளவுத்துறை ஐ.ஜி கண்ணப்பன், Intelligence IG Kannappan,ஆஸ்ரா கார்க், Asra Cork,

ஜெயலலிதா முதல்வராக இருந்த போது கொண்டு வந்த, கந்துவட்டி தடுப்புச் சட்டத்தை, போலீசார் கடுமையாக அமல்படுத்தினால் மட்டுமே, கந்துவட்டி கொடுமை தற்கொலைகளை தடுக்க முடியும.

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு வந்த கூலித்தொழிலாளி இசக்கி முத்து, அவரது மனைவி, இரண்டு பச்சிளங்குழந்தைகள் என நான்குபேர், தீக்குளித்து இறந்த சம்பவம் தமிழகத்தில் இதுவரை நடக்காதது. கந்துவட்டி கேட்டு கொடுமைப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு, நான்கு முறை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் இந்த தற்கொலை நடந்துள்ளது. இதனைத் தொடந்து கந்துவட்டிக்கு எங்கும் எதிர்ப்புக்குரல் கிளம்பியுள்ளது.

கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்ததால், அதுவும் பச்சிளங்குழந்தைகள் இறந்ததால், இது நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி மக்களின் கவனத்தை திருப்பியுள்ளது. ஆனால் கந்துவட்டிக் கொடுமையால், வெளியில் தெரியாமல் பல தற்கொலைகள் நடந்துள்ளன. இதில் ஏழைகள் மட்டுமல்ல, வர்த்தகர்கள், தொழிலதிபர்கள், விவசாயிகள், திரைப்பட தயாரிப்பாளர் என பட்டியல் நீள்கிறது. கடந்த ஏழு ஆண்டுகளில், 800 பேர் வரை தற்கொலை செய்துள்ளனர்.

ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, கந்துவட்டி கொடுமையை வேரறுக்க, 2003 ம் ஆண்டு, 'கந்துவட்டி கொடுமை தடுப்புச் சட்டத்தை' கொண்டு வந்தார். கடும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அதிகாரம் வழங்கினார். மணி நேர வட்டி, தினவட்டி, மீட்டர் வட்டி, ரன் வட்டி, கந்துவட்டி என வரைமுறை இல்லாமல் வட்டி வாங்கினால், தமிழ்நாடு வரம்பு மிகுந்த வட்டி தடுப்புச்சட்டம் பிரிவு 4 படி, தண்டனை, அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் கந்துவட்டி, கட்டுப்பாட்டிற்குள் வந்தது. ஜெயலலிதாவிற்கும் மக்களிடைய நல்ல பெயர் கிடைத்தது. பிறகு தி.மு.க., ஆட்சியிலும், அதற்கடுத்த ஜெ., ஆட்சியிலும் கந்துவட்டி கொடுமைகள் அவ்வளவாக கண்டுகொள்ளப்படவில்லை. வட்டிகேட்டு மிரட்டல், தற்கொலைகள், கொலைகள் என அரங்கேறின.

கந்துவட்டி தொழில் நடத்துபவர்கள் அரசியல்வாதிகள் அல்லது ஜாதி அமைப்பை சேர்ந்தவர்கள் அல்லது போலீஸ் தொடர்புடையவர்களாக உள்ளனர். எனவே, எத்தனை தான் சட்டம் இருந்தாலும், இந்த கொடுமையை ஒடுக்க முடியவில்லை. ஏழை மக்களும் போதிய விழிப்புணர்வு இல்லாமல், வங்கிகளை நாடாமல், தனியாரிடம் எத்தனை வட்டி என்றாலும் பரவாயில்லை என அறிந்தே கடன் வாங்குகின்றனர். தீக்குளிப்பு கொடுமை நடந்த நெல்லை, கந்து வட்டி 'தொழில்' கோலோச்சும் மாவட்டம். பல ஆண்டுகளுக்கு முன்பு இங்கு தான் அதிகபட்ச தற்கொலைகள் நடந்துள்ளன.
ஆனால், ஓய்வு பெற்ற உளவுத்துறை ஐ.ஜி., கண்ணப்பன், நெல்லை டி.ஐ.ஜி.,யாகவும், தற்போது சி.பி.ஐ.,யில் பணிபுரியும் ஆஸ்ரா கார்க், நெல்லை எஸ்.பி.,யாகவும் இருந்த போது, இந்த கூட்டணியின் கடுமையான நடவடிக்கையால் கந்துவட்டி தொழில் நடத்தியவர்கள் காணாமல் போனார்கள். பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது போன்ற அர்ப்பணிப்பு உணர்வு உடைய நேர்மையான அதிகாரிகள் நினைத்தால், கந்துவட்டி தொழிலை வேரறுக்க முடியும். அதற்கு இருதரப்பிலும் கட்டப்பஞ்சாயத்து செய்யாமல், போலீசார் நேர்மையாக பணியாற்ற வேண்டும்.

கந்துவட்டி கொடுமையை ஒழிக்க போலீசார் மட்டத்தில், எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கலாம் என சில 'நேர்மையான' அதிகாரிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியது:
1.கந்துவட்டி கிரிமினல்களை உளவுத்துறை மூலம் முதலில் அடையாளம் காணவேண்டும். அவர்கள் எங்கெங்கு தொழில் செய்கிறார்கள் என கண்டுபிடிக்க வேண்டும்.
2.உங்களை பற்றி வெளியில் சொல்லமாட்டோம் என்று பாதிக்கப்பட்டவரிடம் உறுதி கூறி, புகார் வாங்க வேண்டும். அவர்களுக்கு பாதுகாப்பும், ஆதரவும் தருவதாக போலீசார் உறுதி தரவேண்டும்.
3. பொதுமக்கள் தாங்களாகவே புகார் தந்தால், அதற்கு முக்கியத்துவம் தந்து, உடனடியாக விசாரிக்க வேண்டும். அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
4. கந்துவட்டி கேட்டு மிரட்டுபவர்களை ஆதாரத்தோடு கைது செய்ய வேண்டும்.
5. ஒருவர் பிடிப்பட்டால் அவர் மீது புகார் செய்தவர்களிடம் இருந்தும், புகார் செய்ய தயங்குபவர்களிடம் இருந்தும் ஆதாரங்களை திரட்ட வேண்டும்.
6. கைதானவர்கள் விபரங்களை பத்திரிகை வாயிலாக தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் பிற கந்துவட்டிக்காரர்கள் அடங்குவார்கள். போலீசில் புகார் செய்தால் நடவடிக்கை உண்டு என்ற நம்பிக்கை பொதுமக்களுக்கும் ஏற்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

நமது சிறப்பு நிருபர்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gnanasekaran Vedachalam - chennai,இந்தியா
26-அக்-201716:43:05 IST Report Abuse
Gnanasekaran Vedachalam கந்து வட்டிக்கு பணம் வாங்கியவனிடம் ஆதாரம் ஏது அவனிடம் கந்து வட்டிக்காரன் என்ன அபகரிப்பு செய்தான்நிலம் வீடு வாகனம் மற்ற பொருட்கள் வீடு சூறையாடுதல் ரவுடித்தனம் செய்தல் இந்த மாதிரி உள்ள விவரங்கள் தான் ஆதாரம் காவல் துறையை நம்ப வேண்டும் அங்கே பல பேர் நவரத்தின மணிகளாக பணியில் திகழ்கிறார்கள் .பொதுவாக நிரபராதிகள் காவலரை கண்டு அஞ்சவேண்டியது இல்லை .ஜனநாயகத்தில் மக்கள் தான் நாயகர்கள் .அரசு ஊழியர்களும் காவலர்களும் மக்கள் கட்டுகின்ற வரிப்பணத்தில் சம்பளம் பெறுவதால் நாயகர்களின் நலனை மேம்படுத்துவது அவர்களின் முதன்மையான பணியாகும்.
Rate this:
Cancel
Meenu - Chennai,இந்தியா
26-அக்-201710:06:27 IST Report Abuse
Meenu வட்டிக்கும், கைமாத்தாவும் பணம் கேட்பவரையும், வட்டிக்கு பணம் கொடுப்பவரையும் ஆகிய இருவரையும் கைது செய்து தண்டிக்க வேண்டும். அமெரிக்கா போன்ற நாடுகளில், ஒரு தனி மனிதன் இன்னொருவரிடம் வட்டிக்கோ, கைமாத்தாவோ பணம் கேட்பது சட்டப்படி குற்றம் அதனால் அங்கு எல்லோரும் வங்கியில் மட்டும் தான் வட்டிக்கு பணம் லோன் என்கிற பெயரில் வாங்கணும். சட்டத்தில் உள்ள ஓட்டை இதுதான், அதாவது பணத்தை ஒருவரிடம் இருந்து வாங்கிக்கொண்டு, அவர் திருப்பி கேட்கும்போது அவர் மீது கந்துவட்டிக்கு என்னிடம் பணம் கேட்கிறார் என்று புகார் கொடுத்தால் பணம் பெற்றுக்கொண்டவருக்கு சட்டம் பாதுகாப்பு அளிக்கிறது, ஆனால் பணம் கொடுத்தவர் பணத்தையும் இழந்து, சட்ட சிக்கலுக்கும் ஆளாகிறார். இது ஒருதலைப்பட்சமா இருக்கு. இது தான் சட்டத்தில் உள்ள ஓட்டை. இனி எவரும் துணிந்து இனொருவரிடம் வட்டிக்கோ, கைமாத்தாவோ பணம் வாங்குவர், இந்த சட்டத்தை தவறா பயன்படுத்துவர். என்னிடமே ஒரு சிலர் கைமாத்தா பணம் கேட்டார்கள், குறிப்பிட்ட நாளில் திருப்பி கொடுத்து விடுவதாகவும், வேண்டுமென்றால் வட்டிபோட்டு கொடுத்து விடுவதாகவும், ரொம்ப பவ்வியமா, பல வாய்மொழி உறுதிமொழிகளை சொல்லி வாங்கி சென்றனர். ஆனால் சொன்ன தேதியில் திருப்பி கொடுத்ததில்லை. மாறாக என்ன சொன்னார்கள் என்றால், நான் எனக்கு இன்னொரு இடத்திலிருந்து வரவேண்டியது இருக்கு அது வந்ததும் கொடுத்துவிடுகிறேன், நான் என்ன ஊரை விட்டு ஓடிய போய்ட்டேன், பெரிய பொல்லாத பணம் என்று திமிரா, வெறுப்படைய பேசுகின்றனர். நம் அவசரத்துக்கு நம் பணம் நம்மக்கு கிடைப்பதில்லை. நம்ம பணத்தை கொடுத்துட்டு நாம் தான் பயந்து பயந்து அவர்களிடம் பேசவேண்டியதாகி இருக்கிறது. சும்மாவே போலீசில், கந்து வட்டி என்று அவர் புகார் கொடுத்தால் நாம கொடுத்த பணம் போய்டுமே என்று பயம் வேறு. அசல் வந்தாலே போதும் என்று நினைத்து, பல மாதங்கள் பொறுத்து, கஷ்டப்பட்டு வாங்கவேண்டியதாகி விட்டது. ஆகவே, யாரும் பணம் கேட்டால் தயவு செய்து கடனாவோ, கைமாத்தாவோ கொடுக்க கூடாது என்கிற பாடம் கத்துக்கொண்டேன். அவர் என்னதான் நமக்கு நெருங்கிய சொந்தமா இருந்தாலும், நண்பரா இருந்தாலும், இந்த பணம் கொடுக்கல் வாங்கலில் தான் எப்படியும் பிரச்னை வந்துவிடும். அதே போல் தயவு செய்து, உழைத்து சம்பாதித்து உங்கள் பணத்தை செலவு செய்யுங்கள், அடுத்தவர் உழைத்து சம்பாதித்த பணத்தை ஏமாற்றி வாங்கி அதில் வாழ வேண்டாம், அதைவிட பாவம் வேறு ஏதுமில்லை. எந்த கோவிலுக்கு போய் தெய்வத்தை வணங்கினாலும் நல்லது செய்யாது. எப்படி பணம் வந்ததோ அப்படியே உன்னை விட்டு போய்விடும்.இந்த காலத்தில் நம்பிக்கை, நாணயம் எல்லாம் மலைஏறிப்போச்சு. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்கிறது பழமொழி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X