பதிவு செய்த நாள் :
தாஜ்மஹாலை பார்வையிட்ட யோகி
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

ஆக்ரா: பா.ஜ.,வைச் சேர்ந்தவர்கள், பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுள்ள நிலையில், உ.பி., மாநிலம், ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை, முதல்வர் யோகி ஆதித்யநாத், நேற்று பார்வையிட்டார்.

உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மஹால், காதலின் சின்னமாக கருதப்படுகிறது. இந் நிலையில், உ.பி., யின் சுற்றுலா துறையின் கையேட்டில், தாஜ்மஹால் குறித்த விபரங்கள் நீக்கப்பட்டிருந்தது, சர்ச்சையை ஏற்படுத்தியது. 'துரோகிகளால் கட்டப்பட்டது, தாஜ்மஹால்' என, பா.ஜ., - எம்.எல்.ஏ., சங்கீத் சோம் கருத்து தெரிவித்திருந்தார்.

அதை தொடர்ந்து, பா.ஜ., தலைவர்கள் பலரும், தாஜ்மஹாலுக்கு எதிரான கருத்தை வெளி இட்டு இருந்தனர். இது, கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில், ஆக்ராவுக்கு நேற்று சென்ற, முதல்வர் யோகி ஆதித்யநாத், தாஜ்மஹாலுக்கு வெளியே உள்ள பூங்காவில்,

துாய்மை பணியில் ஈடுபட்டார். தாஜ்மஹாலுக்கு செல்லும், பா.ஜ.,வின் முதல்,உ.பி., முதல்வரான, யோகி ஆதித்யநாத், அதன் மேற்கு வாயில் வழியாக சென்று, சுற்றிப் பார்த்தார்.

பா.ஜ.,வினரின் சர்ச்சை கருத்துக்களால் ஏற்பட்ட விமர்சனங்களைத் தொடர்ந்து, பா.ஜ., அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை தவிர்க்கும் வகையில், யோகியின் இந்த பயணம் அமைந்துள்ளதாக கூறப் படுகிறது. அவரது பயணத்தையொட்டி, ஆக்ராவில், 14 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

தத்தெடுப்பார் யாருமில்லை


நாடு முழுவதும் உள்ள, பாரம்பரிய சின்னங்களை தத்தெடுத்து, பராமரிக்க, தனியார் நிறுவனங்களுக்கு மத்திய சுற்றுலா துறை அமைச்சகம் அழைப்பு விடுத்தது. தத்தெடுக்கப்பட்ட பாரம்பரிய சின்னங்களின் பட்டியலை, மத்திய சுற்றுலா துறை அமைச்சகம் வெளியிட்டது.அதில், டில்லியில் உள்ள, குதுப் மினார், ஜந்தர் மந்தர், ஒடிசாவில் உள்ள, கொனார்க் சூரிய கோவில் உள்ளிட்ட, 14 நினைவுச் சின்னங்களை, 7தனியார் நிறுவனங்கள்

Advertisement

தாஜ்மஹால்,பார்வையிட்ட,யோகி,சர்ச்சை,முற்றுப்புள்ளி

தத்தெடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், உலக அதிசயங்களில் ஒன்றான, தாஜ்மஹாலை தத்தெடுக்க, எந்த தனியார் நிறுவனமும் முன்வரவில்லை.

அகிலேஷ் கிண்டல்


உ.பி., முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி தலைவருமான, அகிலேஷ் யாதவ் கூறிய தாவது:தாஜ்மஹால் குறித்து, பா.ஜ.,வினர் பல சர்ச்சைக்குஉரிய கருத்துக்களை கூறினர். ஆனால், தற்போது நிலைமை மாறிவிட்டது. அதை ஒரு பாரம்பரிய சின்னமாக, பா.ஜ., கருதுகிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத் தாஜ்மஹாலுக்கு சென்றது, அவர்கள் வழிபடும் கடவுள் ராமரின் மகிமையே.இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SSTHUGLAK - DELTA,இந்தியா
28-அக்-201700:38:04 IST Report Abuse

SSTHUGLAKTaj may be the CAMP OFFICE OF ADHIITHYA NATH YOGI

Rate this:
Marshal Thampi - Nagercoil,இந்தியா
27-அக்-201718:35:57 IST Report Abuse

Marshal Thampi பிஜேபி, தன் 3 ஆம் தாரா தலைவர்களை விட்டு ஒரு பிரச்சனையை கிளப்புவது ....மக்களிடம், பிரச்சனை சாதகம் இல்லை என்றால், உடனே 1 ஆம் தர தலைவர்கள் மக்கள் நாடி துடிப்பிற்கு யேற்றவாறு நடிக துடங்குகிறார்கள்அதுதான் உண்மை. தனியார் பராமரிக்க வரதத்தின் கரணம் இந்த 3 ஆம் தர தலைவர்களின் விமர்சனங்களும் அதனால் தங்களுக்கு மத ரீதியான பிரச்சனை வரும் என்ற பயமுமே தான்.

Rate this:
Appavi Tamilan - Chennai,இந்தியா
27-அக்-201717:08:50 IST Report Abuse

Appavi Tamilanஅதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு ஆணவ ஆட்டம் ஆடிவிட்டு, மக்கள் ஆதரவை இழப்பது தெரிந்தவுடன் இப்படி தொடை நடுங்கியாக பூனை போல பதுங்குவது தான் அந்த கும்பலின் பழக்கம். என்னென்ன வசனம் பேசினார்கள். இடித்து தள்ளுவோம் என்றெல்லாம் கூச்சலிட்டார்களே. இன்று ஏன் துடைப்பத்தை எடுத்துவந்து பெருக்குவது போல நடிக்க வேண்டும்??? ஏற்கனவே தூய்மையாக இருந்த இடத்தை துடைப்பத்தை வைத்து பெருக்குவதில், மஸ்தானின் அமைச்சர்கள் தான் கில்லாடிகளாக இருந்தார்கள். அந்த வியாதி அவர்கள் கட்சிக்கும் பரவிவிட்டது. இந்தியாவை அடிமைப்படுத்திய முகலாயர்கள் கட்டியது, அவமான சின்னம் என்றெல்லாம் இந்த குள்ளக்கோமாளியின் சகாக்கள் சகட்டுமேனிக்கு பேசினார்களே. இப்போது அந்த கூட்டத்தின் தலைவனே வந்து துடைப்பதோடு போஸ் குடுப்பது நல்ல நகைச்சுவை. இந்த கோமாளி பல ஆண்டுகளாக வெற்றி பெற்ற கோரக்ப்பூர் தொகுதி நாற்றமடித்து கிடக்கிறது. இந்த லட்சணத்தில் இவரிடம் ஒரு பெரிய மாநிலத்தின் நிர்வாகத்தை கொடுத்தால் அது மேலும் மேலும் சீரழியும். இருந்தாலும் கமலக்கட்சியின் தாய் அமைப்பின் அழுத்தத்தால் வேறு வழியின்றி முதல்வர் பதவியில் அமர வைத்தார்கள். விளைவு. இன்றுவரை அந்த மாநிலத்தில் நடக்கும் கொடுமைகள் மற்றும் காரி உமிழும் வகையிலான கூத்துகள். தாஜ்மகாலை இடிப்பது என்றால், அதேபோல காரணங்களை வைத்து குடியரசு தலைவர் மாளிகை முதல், சென்னை சட்டமன்ற கட்டிடம் வரை பல ஆயிரம் கட்டிடங்களை இடிப்பார்களா??? மூளை உள்ளோரை, சிந்திப்போரை நிர்வாகத்தில் அமர வைத்தால் மக்கள் பிரச்னைகள் மற்றும் தேவைகளை கருத்தில் கொண்டு அதில் கவனம் செலுத்துவார்கள். நேற்றுவரை நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாமல் மதவெறி பிடித்த ஒரு அறிவிலியை நிர்வாகம் செய்ய சொன்னால் இதுதான் நடக்கும். ஆனால் அந்த மாநிலத்தின் கல்வி அறிவில்லாத, அரசியல் விழிப்புணர்வு இல்லாத மக்களின் ஏமாளித்தனத்தையும் குற்றம் சொல்ல வேண்டும். இல்லை என்றால் ராமன் மற்றும் சீதை வேடம் அணிந்த மனிதர்களை பல லட்சம் செலவு செய்து ஹெலிகாப்டரில் அழைத்துவந்து மாலை அணிவிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பார்களா??? கடவுள் நம்பிக்கை தவறில்லை. ஆனால் அதனை வைத்து இப்படி மத ரீதியான முட்டாள் செயல்களை செய்வது அதுவும் ஒரு முதல்வர் பொறுப்பில் இருந்துகொண்டு செய்வது மிக மிக அவமானம். இதை அந்த மாநில மக்கள் புரிந்துகொண்டு இதுபோன்ற கொடுமைகளை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும்.

Rate this:
விமர்சகன் - kovai,இந்தியா
27-அக்-201719:38:26 IST Report Abuse

விமர்சகன்நன்றாக கவனித்து பாருங்கள் இந்த நபரை அடுத்த பிரதமர் பதவிக்கு தயார் படுத்துகிறார்கள். இப்படித்தான் குஜராத்துல பாலாறு தேனாறு ஓட வச்சாருன்னு சொல்லி மோடியை கொண்டு வந்து உட்கார வச்சு படுத்தி எடுக்கிறார்கள். இனி மோடி முகத்தை வைத்து வாக்கு கேட்க முடியாது என்பதால் இவரை நல்லவர் போல் மீடியா பத்திரிகை காண்பிக்கிறது. ...

Rate this:
மேலும் 31 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X