தமிழ் எழுத்து சீர்திருத்த வழக்கு : தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

Added : அக் 28, 2017 | |
Advertisement
மதுரை: தமிழ் எழுத்துக்களில் சீர்திருத்தம் கொண்டு வர உயர்நிலைக்குழு அமைக்கக்கோரி தாக்கலான வழக்கை, உயர் நீதிமன்ற மதுரை கிளை முடித்து வைத்தது. மதுரை எல்லீஸ் நகர், அபிமானி தாக்கல் செய்த பொதுநல மனு:தமிழில் 12 உயிர் எழுத்துக்கள், 18 மெய் எழுத்துக்கள் சேர்ந்து, 216 உயிர்மெய் எழுத்துக்கள் உருவாகின்றன.இவற்றில் 180 எழுத்துக்கள், எளிதில் கற்கும் வகையில் உள்ளன. 'உ' மற்றும், 'ஊ'

மதுரை: தமிழ் எழுத்துக்களில் சீர்திருத்தம் கொண்டு வர உயர்நிலைக்குழு அமைக்கக்கோரி தாக்கலான வழக்கை, உயர் நீதிமன்ற மதுரை கிளை முடித்து வைத்தது. மதுரை எல்லீஸ் நகர், அபிமானி தாக்கல் செய்த பொதுநல மனு:
தமிழில் 12 உயிர் எழுத்துக்கள், 18 மெய் எழுத்துக்கள் சேர்ந்து, 216 உயிர்மெய் எழுத்துக்கள் உருவாகின்றன.
இவற்றில் 180 எழுத்துக்கள், எளிதில் கற்கும் வகையில் உள்ளன. 'உ' மற்றும், 'ஊ' சேர்வதால் உண்டாகும், உயிர்மெய் எழுத்துக்கள், கற்பதற்கு கடினமாக உள்ளன.
பல்வேறு கால கட்டங்களில், தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டது. பிறமொழிகளைச் சேர்ந்தவர்கள், தமிழை எளிதில் கற்கும் வகையில், எழுத்துக்களில் சீர்திருத்தம் கொண்டு வர உயர்நிலைக்குழு அமைக்கக்கோரி, தமிழக அரசின், தமிழ் வளர்ச்சித் துறை செயலர், இயக்குனருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி, நீதிபதி, ஜெ.நிஷாபானு அமர்வு பிறப்பித்த உத்தரவு:
தமிழ், பாரம்பரியமிக்க பழமையான மொழி. வெளிநாடுகளில், குறிப்பாக சிங்கப்பூரில், தேசிய மொழியாக உள்ள, ஒரே இந்திய மொழி தமிழ். அத்தகைய மொழியில் மாற்றம் கொண்டு வர, உத்தரவிட முடியாது. மனுதாரரின் கோரிக்கை ஏற்புடையதல்ல.
நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் வகையில், மனுதாரர், தேவையின்றி மனு செய்துள்ளார். அவருக்கு அபராதம் விதிக்கலாம். ஆனால் விதிக்கவில்லை. எதிர்காலத்தில் இதுபோன்ற வழக்கு எதையும் தாக்கல் செய்யக்கூடாது.
இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X