விஜயகாந்த் பேச்சு இனி புரியும்; பயிற்சிக்கு பிரேமலதா ஏற்பாடு | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

விஜயகாந்த் பேச்சு இனி புரியும்; பயிற்சிக்கு பிரேமலதா ஏற்பாடு

Added : அக் 29, 2017 | கருத்துகள் (40)
Advertisement
D.M.D.K,DMDK,Vijayakanth,தே.மு.தி.க,விஜயகாந்த்

கட்சி பணிகளில் மீண்டும் கவனம் செலுத்தி வரும் விஜயகாந்திற்கு, தங்கு தடையின்றிபேசுவதற்கு, பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

2005ல் துவங்கப்பட்ட, தே.மு.தி.க., குறுகிய காலத்தில் எழுச்சிப் பெற்றதற்கு, அக்கட்சி தலைவர், விஜயகாந்த் பிரதான காரணம்.க ட்சியினரிடமும், பொதுமக்களிடமும், மிக எளிமையாக, எழுதி வைக்காமலேயே அவர் பேசுவது வழக்கம். இது, தே.மு.தி.க.,வினரை மட்டுமின்றி, எதிர்க்கட்சியினரையும் கவர்ந்தது.

தற்போது, அவரது குரல் வளம் பாதிக்கப்பட்டு உள்ளது; சரிவர பேச முடிவது இல்லை; பேச வந்த விஷயங்களையும் மறந்து தடுமாறுகிறார்.அவரது பிரசாரத்தில் ஏற்பட்ட தடுமாற்றங்கள், கட்சியின் வளர்ச்சியையும் பெரிதாக பாதித்துள்ளது. 2016 சட்டசபை தேர்தலுக்கு பின், தே.மு.தி.க., தொடர் வீழ்ச்சிகளை சந்தித்து வருகிறது.

ஜெ., மறைவிற்கு பின், தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அதை பயன்படுத்தி, அரசியல் ஆதாயம் தேட, ரஜினி, கமல் உள்ளிட்ட மூத்த நடிகர்கள் விரும்புகின்றனர். அரசியல் களம் புகவும், அவர்கள் தயாராகி வருகின்றனர்.

இவர்களுக்கு இடையில், இழந்த செல்வாக்கை மீண்டும் பெறும் முயற்சிகளில், விஜயகாந்தும் இறங்கியுள்ளார்.இதற்காக, புதிய நிர்வாகிகளை நியமித்து, கட்சியை கட்டமைத்து உள்ளார். மக்கள் பிரச்னைகளுக்காக, போராட்ட களம் புகுந்துள்ளார்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், 'டெங்கு'வால் பாதிக்கப்பட்டோரை, மருத்துவமனைக்கு சென்று, விஜயகாந்த் நலம் விசாரித்தார்.விவசாயிகளின் கரும்பு நிலுவை பிரச்னைக்காக, விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். இதில், ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர். ஆனால், விஜயகாந்தின் பேச்சில் இருந்த தடுமாற்றம், அவர்களை குழப்பம் அடைய செய்தது.

இது குறித்து, விஜயகாந்தின் மனைவி, பிரேமலதாவிடம், மூத்த நிர்வாகிகள் பேசியுள்ளனர். அதனால், தங்கு தடையின்றி பேசுவதற்காக, விஜயகாந்திற்கு, 'ஸ்பீச் தெரபி' என்ற, சிறப்பு பயிற்சி அளிக்க, பிரேமலதா ஏற்பாடு செய்துள்ளார்.
- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-அக்-201720:55:18 IST Report Abuse
kulandhaiKannan யாருக்கு ??
Rate this:
Share this comment
Cancel
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
29-அக்-201719:10:18 IST Report Abuse
Vasudevan Srinivasan Ups and Downs are common for all political parties.. So Captain Vijayakanth Will Regain With "WILL" and Win.. Just Search and See The Election Manifesto of DMDK It Didn't Announced Any Freebies Like Any Party..
Rate this:
Share this comment
Cancel
Bava Husain - riyad,சவுதி அரேபியா
29-அக்-201718:57:44 IST Report Abuse
Bava Husain எல்லா வளமும் பெற்று, நலமுடன் வாழ வாழ்துக்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X