7 மாநிலங்களில் வசிக்கும் இந்துக்களை சிறுபான்மையினராக அறிவிக்க மனு

Added : நவ 01, 2017 | கருத்துகள் (62)
Advertisement
இந்து,Hindu, யூனியன் பிரதேசம், Union Territory, உச்ச நீதிமன்றம்,Supreme Court, அஷ்வினி உபாத்யாயா,Ashwini Upadhyay, மத்திய சட்ட அமைச்சகம்,Union Law Ministry, ஜம்மு - காஷ்மீர்,Jammu and Kashmir, மிசோரம்,Mizoram, நாகாலாந்து, Nagaland, மேகாலயா,Meghalaya, அருணாச்சல பிரதேசம், Arunachal Pradesh, மணிப்பூர்,Manipur, பஞ்சாப் , லட்சத்தீவு, Lakshadweep, மத்திய அரசு, Central Government, புதுடில்லி,New Delhi,பா.ஜ,bjp

புதுடில்லி: ஏழு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் வசிக்கும் இந்துக்களை சிறுபான்மையினராக அறிவிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பா.ஜ., வைச் சேர்ந்த, அஷ்வினி உபாத்யாயா, உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த, 2011ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஜம்மு - காஷ்மீர், மிசோரம், நாகாலாந்து, மேகாலயா, அருணாச்சல பிரதேசம், மணிப்பூர்.பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும், யூனியன் பிரதேசமான லட்சத்தீவிலும், ஹிந்து மதத்தினர் சிறுபான்மையினராக வசிக்கின்றனர்.

இதுவரை, ஹிந்து மாநிலங்களில், ஹிந்துக்களை சிறுபான்மையினராக பதிவு செய்யவில்லை. எனவே, இந்த ஏழு மாநிலங்கள் மற்றும் லட்சத்தீவில் வசிக்கும் இந்துக்களை சிறுபான்மையினராக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். அப்போது தான், அவர்களால், சிறுபான்மையினருக்குரிய சலுகைகளை பெற முடியும்.

மேலும், 1993ல், மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். இந்த வழக்கில், மத்திய சட்ட அமைச்சகத்தை பிரதிவாதியாக சேர்க்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (62)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
01-நவ-201717:22:50 IST Report Abuse
தமிழர்நீதி மை லார்ட் ஜம்மு - காஷ்மீர், மிசோரம், நாகாலாந்து, மேகாலயா, அருணாச்சல பிரதேசம், மணிப்பூர். பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும், யூனியன் பிரதேசமான லட்சத்தீவிலும், ஹிந்து மதத்தினர் சிறுபான்மையினராக வசிக்கின்றனர். ஆனால் இவை இந்தியாவில் தான் இருக்கு . தனி நாடுகள் அல்ல . இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மையினர் . இதுதான் சிறுபான்மையினர் டெபினிஷன் மை லார்ட் . தேசத்தை வம்புக்கிழுக்கும் பிஜேபி அஷ்வினி உபாத்யாயா விற்கு கனம் கோர்ட்டார் நேரத்தை வீணடித்ததுக்கு ஒரு பெரும் தொகை அபராதம் போடுங்கள் மை லார்ட்.
Rate this:
Share this comment
Cancel
Bharatha Nesan - Chennai,இந்தியா
01-நவ-201717:20:57 IST Report Abuse
Bharatha Nesan மிகவும் காலம் கடந்த சரியான வழக்கு, அந்த புண்ணியவான் நல்ல இருக்கணும். அதுபோல், ஜாதிகள் SC,ST,MBC,BC,OBC,OC என்றுமுறையை முற்றிலும் ஓழிக்கவேண்டும். சதவிகித ஒதுக்கீடு அடிப்படையில் பணியில் சேருவோரால் நாட்டில் எந்த வளர்ச்சியும் கிடைக்காது, தகுதி உள்ளவர் அந்த அந்த தேர்வில் வெற்றிபெற்று வரட்டுமே, அப்படி வந்தால் முதல் தரமான மனிதவளம் நாட்டுக்கு கிடைத்து நாடு வளரும். முதல் தரம் உள்ளவர்கள் வெளிநாட்டுக்கு போகமாட்டார்கள். என்னதான் நம் பிள்ளை நல்லா படித்தாலும் , நல்லா படிக்காத பிள்ளை அந்த இடத்தை இட ஒதுக்கீடு என்ற முறையில் அபகரிக்கிறது, அது முற்றிலும் தடுக்கப்படவேண்டும். இட ஒதுக்கீட்டை முறையை நிராகரிக்க ஒழித்திட வழக்கு போடவேண்டும் , எந்த புண்ணியவானாவது அதை செய்வாரா?
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
01-நவ-201716:27:37 IST Report Abuse
Endrum Indian 1947 ல் 1 (34 கோடி மற்றவர்கள்) கோடி முஸ்லிம்கள் இன்று 22 கோடி (106 .4 கோடி மற்றவர்கள்) என்று வத வத என்று பல்கிப்பெருகியுள்ளனர். அப்பொழுது வெறும் 3 சதவிகிதம் ஆகவே மைனாரிட்டி இன்று 22 % இன்றுமா மைனாரிட்டி அது தான் கேள்வி. ஆகவே தான் இந்த வழக்கு.
Rate this:
Share this comment
Rahim - Riyadh,சவுதி அரேபியா
01-நவ-201716:56:26 IST Report Abuse
Rahimஏன்பா நீங்கலாம் பெத்துக்கலியா ? அட முட்டாளே பல ஆண்டுகளுக்கு முன்னாள் எல்லா மதத்திலும் உள்ள குடும்பங்களில் வத வத என்று பெற்றுக்கொண்டுதான் இருந்தார்கள் ஆனால் இந்த நவ நாகரீக காலத்தில் யாரும் அதிகம் பெற்று கொள்வது இல்லை எனவே வழக்கம் போல வன்மத்தை கொட்டாதே....
Rate this:
Share this comment
Raman - kottambatti,இந்தியா
01-நவ-201717:15:26 IST Report Abuse
Ramanஉன்னாலே முடியலையா? அல்லது தெரியலையா? உனக்கு வக்கு இல்லையென்றால் மற்றவர் பெற்றுக்கொள்ள கூடாதா?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X