‛கிச்சடி' தேசிய உணவல்ல: அமைச்சர் விளக்கம்

Added : நவ 02, 2017 | கருத்துகள் (23)
Advertisement
கிச்சடி,
Khichdi, தேசிய உணவு, National Food,   மத்திய அமைச்சர் ஹர்ஷிம்ரத் கவுர் பாதல்,Union Minister Harsimrat Kaur Badal,உலக சாதனை, World Record,  மத்திய உணவு பதப்படுத்துதல் அமைச்சகம் ,Ministry of Food Processing,  உலக இந்திய உணவு விழா, World Food Event,ஆரோக்கிய உணவு,Health Food,  இந்தியா,india, மத்திய அரசு,Central Government,

புதுடில்லி: ‛கிச்சடி' தேசிய உணவல்ல என விளக்கமளித்துள்ள மத்திய அமைச்சர் ஹர்ஷிம்ரத் கவுர் பாதல், சாதனை முயற்சியாக 800 கிலோ கிச்சடி தயாரிக்கப்பட உள்ளதாக கூறியுள்ளார்.


வதந்தி:

டில்லியில் வரும்நவம்பர் 4ம் தேதி உலக சாதனைக்காக 800 கிலோ கிச்சடி தயாரிக்கப்படுகிறது. 1000 லிட்டர் கொண்ட கடாயில் கிச்சடி தயாரிக்கப்படும். நிகழ்ச்சியை மத்திய உணவு பதப்படுத்துதல் அமைச்சகம் ஒருங்கிணைத்துள்ளது. இதனையடுத்து கிச்சடி தேசிய உணவு என ஒரு வதந்தி வேகமாக பரவியது.


விளக்கம்:

இது தொடர்பாக, உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்ஷிம்ரத் கவுர் பாதல் டுவிட்டர் பக்கத்தில் அளித்த விளக்கம்: கிச்சடி தேசிய உணவு என்ற வதந்தி போதும். கிச்சடி, ‛உலக இந்திய உணவு' விழாவில் சாதனைக்காக தயாரிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


ஆரோக்கிய உணவு:

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் கூறியதாவது: கிச்சடி இந்தியாவில் சிறந்த உணவு. ஆரோக்கியமான உணவாகவும் கருதப்படுகிறது. இந்தியா முழுதும் ஏழை மற்றும்பணக்கார மக்கள் விரும்பி இதனை சாப்பிடுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
B.Indira - thane,இந்தியா
03-நவ-201717:54:19 IST Report Abuse
B.Indira கிச்சடிபணக்கார உணவல்ல .நாம்செய்யும் பொங்கல் தான் சில பொருட்களை கூடுதலாக சேர்க்கிறார்கள் .சாதாரணமாகவும் செய்யலாம் .ரவை சேர்ப்பதில்லை.நாம்நோயாளிகளுக்கு கொடுப்பதில்லையா ?வேற்று நாட்டு தொழிலதிபர்கள் உணவுபதப்படுத்தும் தொழில் ஆரம்பிக்க செய்து காட்டுகிறார்கள்.விவசாயிகளும் பயன் பெறுவர் .800 கிலோ கிச்சடிசெய்துஏழை குழந்தைகளுக்கு கொடுக்க போகிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
03-நவ-201700:30:26 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> கிச்சடிதான் செய்ரதுக்கு சுலபம்னு நெனெச்சுண்டுருக்க ரொம்பவே வில்லங்கமான டிஷ் இது தண்ணீர் அதிகமானால் குலையும் குறைஞ்சாலோ நெஞ்சை அடைக்கும் என்பதுதான் உண்மை ஒருகப் ரவைக்கு ஒருகப் நெய்வேண்டும் தேந்தாளிக்க ஆயில் போட்டானாம் தேவையான அளவு நீர் வுடனும் நண்ணாதழைக்கும்போது உப்பு சேர்க்கவேண்டும் தாளிக்க கடு ஜீரகம் தேவை காரத்துக்கு பச்சைமிளகாய் தேவை பொடிச்சமிளகு ஜீரகம் அரைக்கப் தேவை தண்ணீர்தலைக்கும் உப்போ முளகுஜராகம் சேர்க்கணும் துளிமஞ்சள் துக்குள் சேர்த்து றையை நன்கு பொன்னிறமா வருத்துவச்சு சேர்க்கணும் நன்கு கைவிடாமல் கிளறி தட்டினால் மூடனும் அடுப்பாய் சூடு தண்ணிக்கனும் இல்லேன்னா தீஞ்சுடும் மேல கறிவேப்பிலை அண்ட் கொத்துமல்லி தலைகளை பொடியாக நறுக்கி துவனும் கூடவே இஞ்சியும் துருவி சேர்க்கலாம் மணமாயிருக்கும் போலவேரூண்று ஆனதும் தின்னவும் ஆஹா செம ருசியானடிஷ் , தொட்டுக்க கொத்துமல்லி சட்னிதான் பெஸ்ட்
Rate this:
Share this comment
Cancel
S.Ganesan - Hosur,இந்தியா
02-நவ-201723:47:46 IST Report Abuse
S.Ganesan நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும் போது , இவர்களுடைய புத்தி எங்கே போகிறது பாருங்கள். நாடு வெளங்கிடும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X