kalvipurachi | பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி - 16| Dinamalar

சிறப்பு பகுதிகள்

பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி

பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி - 16

Added : நவ 02, 2017
பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி - 16

கல்வித் தரம் உயர வேண்டுமானால் கல்விச் சுதந்திரம் தேவை. இந்த சுதந்திரம் ஆசிரியர் களுக்கும் கல்வி நிறுவன நிர்வாகிகளுக்கும் வழங்க பட வேண்டும். இதன் அடிப்படையில் தான் பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்த, தகுதியான பள்ளிகளுக்கு தன்னாட்சி தருவது அவசியமாகிறது.
இதை வலியுறுத்தும் வகையில் உருவாக்கி உள்ள கருத்துருவை, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன், பாடத்திட்ட கலைத் திட்டக் குழு தலைவரும், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தருமான அனந்தகிருஷ்ணன் ஆகியோரிடம் தினமலர் நாளிதழின் வெளியீட்டாளர் ஆர்.லட்சுமிபதி வழங்கியிருந்தார். இந்த கருத்துரு குறித்து, கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள், தங்கள் கருத்துக்களை, தினமலர் வெளியீட்டாளர், ஆர்.லட்சுமிபதியுடன் பகிர்ந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் தினமலர் வாசகர்கள் சில கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அந்த கருத்துக்களையும் அவை தொடர்பான தினமலர் விளக்கத்தையும் இங்கே அளித்திருக்கிறோம்.

21. Pollachi Siva Kumar., Engineer, Mangalore.

I would like to talk about below topic.
1. General Knowledge about courses list and courses against job profile.
2. General knowledge about best institute in India.
3. Awareness about Entrance Exam for Education and Job.
4. Exam pattern should be changed.
5. Government school +rural quota to be implemented.

*General Knowledge about courses list and courses against job profile.*

Many people not aware courses offered by institute and which use. For example &petroleum engineering and petrochemical engineering it is difference and people chose the courses without knowledge, out of medical and engineering people don't know much about other courses. If I ask how to study IAS people don't have answer but people say study hard take good mark in 10th and 12 th ,if I again ask If I get 1180 in 12th shall I get IAS then No answer .

*General knowledge about best institute in India*.
Medical aspiration people don't know about AIIMS/Jipmer /Pune &Armed Forces Medical College& Many particularly village student don't know about IIT /NIT/Central university /IIM/ IIST/IISR then how we produce abdul kalam/sunder pichai in future .

*Awareness about Entrance Exam for Education and Job.*
Many people thinks in Tamil nadu get more mark in subject we will get job ,even engineering student don't know about GATE Exam and Aptitude /Technical Exam -this why last five year engineering student not getting job In central government all job have Entrance exam /state Government have Group 1/2/3/4 and reputed private company having Aptitude exam.

*Exam pattern should be change*.
Now days every one score above 1000 in 12th std and many 100/100 in mathematics and finally fail in engineering 1st year mathematics. this prove quality of Exam pattern, exam pattern should be Mohamed Rifath Shaarook invented kalam satellite he scored 12th exam 700+ not above 1000 mark which indicate our exam mark not mean by our intelligent .
1. 40% easy questions for all pass
2. 40&70% for medium level question,
3. 70&100% should be tough and brainstorming (application type)
4. Avoid many Centum

*Government school +rural quota to be implemented.*
For avoiding political gaming against NEET and other Exam& within 69% quota allocate 10% for Government school student (6% city student and 4% village student). All above subject to booked and kept in library in all school teacher should teach all this in class room may be include one General knowledge subject for 8th to 12 th standard student about what is IAS how to get this and about ISRO offered courses (IIST)/IIT/IISR/NIT/AIIMS/Jipmer and what are all the Exam against Job .
தினமலர் விளக்கம்: தமிழ்நாட்டில் இன்று பள்ளிகளில் புதிய பாடத் திட்டத்தைச் செயல்படுத்த எடுக்கும் நல்ல முயற்சிக்கு சிறந்த வரவேற்பு உள்ளது. அது சரியானதும் கூட. ஒருவித விழிப்புணர்ச்சியைத் தோற்றுவித்துள்ளது. இந்தச் சூழல் மாணவர்களுடைய வருங்காலத்தைக் கவனத்தில் கொண்டுள்ளது என்பதை உணர்ந்து மனமார பாராட்ட, ஆசிரியர்கள், பெற்றோர்கள், பள்ளி நிர்வாகங்கள் முன் வந்துள்ளனர். தங்களுடைய கடிதமும் இந்த நல்ல சூழலைப் பயன்படுத்தி, கல்வியில், பாடத்திட்டத்தில் எந்தவிதமான மாற்றங்கள் அமைய வேண்டும் என்ற செய்தியை விரிவாகச் சொல்லுகிறது. தங்களைப்போல் பெரும்பாலோர் மிகுந்த அக்கறையுடன் தங்கள் கருத்துக்களைச் சொல்லியிருக்கிறார்கள். கருத்து கேட்கும் கூட்டங்கள் மூலமாக. அத்தனை நல்ல கருத்துக்களும் அரசின் கவனத்திற்குக் கொண்டு சொல்லப்பட்டிருக்கின்றன.
'பொது அறிவு' மாணவர்களுக்கு மிகவும் இன்றி <அமையாதது; அந்தப் பொது அறிவுப் பாடத்திட்டம் எப்படி இருக்க வேண்டும் என்று சுட்டிக் காட்டியுள்ளீர்கள். தங்களைப் போன்றவர்கள் இதுவரைச் சுட்டிக் காட்டியிருக்கும் புதிய பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டியவைகளின் எண்ணிக்கை மிகவும் பெரிது. அவ்வளவும் செயல்படுத்தும் வாய்ப்பு, நடைமுறையில் மிகவும் குறைவு எனலாம். என்றாலும், அவற்றிலும் தேர்வு செய்து, செயல்படுத்துவது தவிர்க்க முடியாதது. நல்ல தரமான கல்வியை மாணவர்களுக்குத் தந்தாக வேண்டும். இந்த முயற்சியில்தான், நாங்கள் வலியுறுத்திக் கொண்டிருக்கும் 'பள்ளிகளில் தன்னாட்சி' முறை மிகவும் அவசியமான, அவசரமான ஒன்றாகும். ஏனெனில், பல கடுமையான நிபந்தனைகளை நிறைவேற்றித்தான், ஒரு பள்ளி தன்னாட்சி பெற முடியும். உறுதியாக, அப்படி தன்னாட்சி பெற்ற பள்ளிகளில், மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும், தரம் நிலைத்திருக்கும். காலப் போக்கில் சிறிது சிறிதாக 'இந்த தன்னாட்சி பள்ளி' எண்ணிக்கை வளரும். தரமில்லாத பள்ளிகள் மாறியே ஆக வேண்டிய சூழல் ஏற்படும். விளைவு: நமது மாணவர்கள் தரமான கல்வி பெற்று, இந்திய அளவில், ஏன், உலக அளவில் எந்தப் போட்டித் தேர்வுகளிலும் சிறந்து விளங்குவர். இது கனவல்ல; நடந்தாக வேண்டிய நிஜம். பள்ளிகளில் தன்னாட்சி ஒரு உண்மையான தருணத்தில் அதன் பலனை உணர வேண்டுவோர் உணர்ந்து செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை நமக்கு உள்ளது, நடக்கும்.

தொடரும்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X