பொது செய்தி

தமிழ்நாடு

" நான் பொறுக்கி தான் "- கமல்

Updated : நவ 04, 2017 | Added : நவ 04, 2017 | கருத்துகள் (161)
Share
Advertisement
 கமல்,Kamal,  விவசாயிகள், farmers,நடிகர் கமல்ஹாசன்,  actor Kamal Haasan,ஜனநாயகம், democracy, தமிழகம்,Tamil Nadu,

சென்னை : நான் பொறுக்கி தான், அறிவு மொழி சார்ந்த ஞானத்தை நான் எங்கு வேண்டுமானாலும் பொறுக்குவேன். அதற்கு வெட்கப்பட மாட்டேன் என சென்னையில் விவசாயிகள் மத்தியில் பேசுகையில் குறிப்பட்டார்.
சென்னை, கிரீன்வேல்ஸ் சாலையில் உள்ள முத்தமிழ் அரங்கத்தில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது:
நான், உழவன் மகன் இல்லை என்றாலும், உழவனின் மருமகன். எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் தான் என்பதை மறந்துவிட்டோம். ஜனநாயகத்தில் விவசாயிகள் தான் எஜமானர்கள். இங்கு ஓட்டு சேகரிக்க வரவில்லை; சோறு சேகரிக்க வந்துள்ளேன். விவசாயிகளுக்கு ஊக்கியாகவும், அலாரமாகவும் இருப்பேன். குளங்கள், ஏரிகளை பராமரிப்பு செய்யும் பணியில் நிச்சயம் நாங்கள் உதவுவோம். கடந்த 50 ஆண்டுகளாக நாம் தூங்கி விட்டோம். இனியாவது விழித்து கொள்வோம். புராண காலங்களில் பாலம் கட்ட அணில் உதவியது போல் விவசாயிகளுக்கு உதவிட நான் ஒரு ஜந்துவாக இருப்பேன்.

நான் பொறுக்கிதான்: கமல்


ஆற்றை காணவில்லை


தமிழகமும், மராட்டியமும் தான் அதிக வரி கட்டும் மாநிலங்கள். மற்ற மாநிலங்களில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் அது நடக்கவில்லை. தமிழகத்தில் ஒரு ஆறையே காணவில்லை. இது குறித்து இன்னும் 3 நாட்களில் தெரிவிக்கிறேன். சினிமா இல்லாமல் வாழலாம், உணவு விவசாயத்தை தொழிலாக மாற்றினால் தான் நாம் வாழ முடியும்.

டில்லியில் ஒருவர் என்னை பொறுக்கி என்றார். ஆமாம், நான் பொறுக்கி தான், அறிவு மொழி சார்ந்த ஞானத்தை நான் எங்கு வேண்டுமானாலும் பொறுக்குவேன். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (161)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hindustani - Sugar land,TX,யூ.எஸ்.ஏ
07-நவ-201701:39:38 IST Report Abuse
Hindustani ரொம்ப தைரியம் தான்.. கமஹாசன் முன்னாடி பொம்பளை என்ற வார்த்தை சேர்த்து கொள்ளவும்..
Rate this:
NMuthuuselvann Muthuuselvann - tirunelveli,இந்தியா
10-நவ-201719:41:06 IST Report Abuse
NMuthuuselvann Muthuuselvannஇந்து மதத்தை கொச்சை செய்பவர்கள் 1 மனைவி, துணைவியார்...
Rate this:
Cancel
Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா
05-நவ-201713:50:58 IST Report Abuse
Tamizhan kanchi இவரு மனிதன்தானா ? அல்லது வேற்று கிரகவாசியா ?
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
05-நவ-201702:19:23 IST Report Abuse
Aarkay சூரியன் கிழக்கே உதிப்பதை மேடை போட்டு சொல்ல வேண்டிய அவசியமில்லையே எல்லோருக்கும் தெரிந்த உண்மைதான் அது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X