அரசியல் செய்தி

தமிழ்நாடு

அன்புமணி பிடிவாதம்: ராமதாஸ் மனமாற்றம் கருணாநிதியை சந்தித்ததால் தி.மு.க., உற்சாகம்

Added : நவ 04, 2017 | கருத்துகள் (22)
Advertisement
அன்புமணி,anbumani, ராமதாஸ்,Ramadoss, கருணாநிதி,Karunanidhi, தி.மு.க,
DMK,  சட்டசபை,  Assembly, பா.ம.க.,PMK,

'கிழக்கே உதிக்கும் சூரியன், மேற்கே உதித்தாலும், திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை' என, முழங்கிய, பா.ம.க., நிறுவனர், ராமதாஸ், தி.மு.க., தலைவர், கருணாநிதியை, சமீபத்தில் சந்தித்து, கூட்டணிக்கு அச்சாரம் போட்டுள்ளார்.
ராமதாசின் இந்த திடீர் மனமாற்றத்திற்கு, அவரது மகன், அன்புமணியின் பிடிவாதமே காரணம் என்ற தகவல் வெளியாகிஉள்ளது.கருணாநிதியின், 94வது பிறந்த நாள், சட்ட சபை வைர விழாவை ஒட்டி, ராமதாஸ் வாழ்த்து தெரிவித்தார். அப்போது, சமூக வலைதளங்களில், தி.மு.க.,வினர், 'அரசியல் கருத்து வேறுபாடுகளை மறந்து, கருணாநிதிக்கு வாழ்த்து கூறியதற்காக, ராமதாசுக்கு நன்றி' என, பதிவு செய்தனர்.தி.மு.க., முன்னாள் அமைச்சர், வீராசாமியின் முத்து விழா, சென்னை, அறிவாலயத்தில் உள்ள அரங்கில் நடந்தது. அதில், அன்புமணி பங்கேற்றார். பின், வீராசாமியின் வீட்டுக்கு, ராமதாஸ் சென்று, வாழ்த்து தெரிவித்தார். ஆழ்வார்பேட்டை, காவேரி மருத்துவமனையில், கருணாநிதி சிகிச்சை பெற்றபோது, ராமதாஸ் நேரில் நலம் விசாரித்தார்.இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம், 'காற்றுள்ளவரை, கடல் நீருள்ளவரை, பாருள்ளவரை, பைந்தமிழ் உள்ளவரை, திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை. 'கிழக்கே உதிக்கும் சூரியன், மேற்கே உதித்தாலும் கூட, இரு திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி என்ற பேச்சே இல்லை. அ.தி.மு.க., - தி.மு.க., அல்லாத அரசை, தமிழகத்தில் அமைப்போம்' என, பா.ம.க., மண்டல மாநாடுகளில், ராமதாஸ் பேசி வந்தார்.
இதனால், அக்கட்சியினர் குழம்பி போய் இருந்தனர். இனியும் தனித்து போட்டியிட்டால், கட்சி தேறாது என்பதால், தி.மு.க., வுடன் கூட்டணி வேண்டும் என, பா.ம.க., நிர்வாகிகள் விரும்புகின்றனர்.இது குறித்து, அவர்கள் கூறியதாவது:கடந்த, 1999, 2004 லோக்சபா தேர்தல்கள், 2006, 2011 சட்டசபை தேர்தல்களில், தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, பா.ம.க., வெற்றி பெற்றது. ஆனால், 2014 லோக்சபா தேர்தலில், பா.ஜ., அணியில் இணைந்து போட்டியிட்டது; அன்புமணி மட்டுமே, தர்மபுரியில் கரை சேர்ந்தார்.
கடந்த, 2016 சட்டசபை தேர்தலில், தனித்து போட்டியிட்ட, பா.ம.க., படுதோல்வி அடைந்தது. தி.மு.க.,வுடன், 2006ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி வைத்து, பா.ம.க.,வினர் பல பதவிகளை பெற்றனர். இது, கட்சி வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது.தற்போது, சட்டசபை, உள்ளாட்சி அமைப்புகளில், பா.ம.க.,வுக்கு பிரதிநிதித்துவம் இல்லை. மீண்டும், தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை, முன்னாள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், மாநில தலைவர், ஜி.கே.மணியிடம் வலியுறுத்தியுள்ளனர். 'தனித்து போட்டியிட்டால், நாங்கள் ஓடி விடுவோம்' என, மாவட்டச் செயலர்களும் மிரட்டியுள்ளனர்.அன்புமணிக்கு, 2004ல், ராஜ்யசபா, எம்.பி., பதவி கொடுத்து, மத்திய சுகாதார அமைச்சர் பதவியும், தி.மு.க., பெற்று தந்தது. அதேபோல், 2019 லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்டால், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமையும் நிலையில், பா.ம.க.,வுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என, மாநில நிர்வாகிகள் சிலர், அன்புமணியிடம் வலியுறுத்தியுள்ளனர்,

இந்நிலையில், 'கருணாநிதியின் உடல் நலம் முன்னேற்றம் அடைந்து வருவதால், அவரை சந்தித்து, அப்படியே, தி.மு.க.,வுடன் மீண்டும் நட்பை புதுப்பிக்க வேண்டும்' என, ராமதாசிடம், அன்புமணி வேண்டுகோள் விடுத்துஉள்ளார். முதலில், ராமதாஸ், தயக்கம் காட்டியுள்ளார். ஆனால், அன்புமணி தொடர்ந்து பிடிவாதம் பிடித்ததால், கருணாநிதியை, அவரது கோபாலபுரம் இல்லத்தில், ராமதாஸ் சந்தித்து, தி.மு.க., கூட்டணிக்கு, அச்சாரம் போட்டுள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
05-நவ-201719:29:42 IST Report Abuse
N.Kaliraj ஒரு பழமொழி.......குடிகாரன் பேச்சு பொழுது விடிந்தால் போச்சு.....அவனுக்கும் இவருக்கும் வித்தியாசம் இல்லை...
Rate this:
Share this comment
Cancel
srisubram - Chrompet,இந்தியா
05-நவ-201719:23:32 IST Report Abuse
srisubram சூரியன் மறையறதே இல்ல , பூமி தேன் சுத்துதுன்னு கூட சொல்லுங்க பரவாயில்லை , ஆனா இந்த மற்றம் மற்றம் , பச்சை நிற மசி அடங்கிய பேணா தரேன் இதெல்லாம் இன்னாங்கோ, இதுக்கும் கொஞ்சம் பதில் சொல்லுங்கன்னேன் ..
Rate this:
Share this comment
Cancel
Gopalakrishnan - Kuzhumani,இந்தியா
05-நவ-201718:26:38 IST Report Abuse
Gopalakrishnan மரம் வெட்டி கட்டி ஏற்படுத்துவோம் கட்டுமரம் என்று இருவரும் சபதம் எடுத்துஇருப்பார்களோ???
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X