ரூ.7 கோடி மதிப்பு சிலைகளை விற்க முயன்ற 3 பேர் கைது: ஈரோட்டில் ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் அதிரடி | Dinamalar

ரூ.7 கோடி மதிப்பு சிலைகளை விற்க முயன்ற 3 பேர் கைது: ஈரோட்டில் ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் அதிரடி

Added : நவ 06, 2017 | |
ஈரோடு: மரகதலிங்கம் மற்றும் நந்தி சிலையை விற்க முயன்ற மூவரை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், ஈரோட்டில் நேற்று கைது செய்தனர். ஈரோடு, மேட்டூர் சாலையில் உள்ள, ராஜராஜேஸ்வரி விடுதியில், பல கோடி மதிப்பிலான சிலை விற்பதற்கான பேரம் நடப்பதாக, தமிழக டி.ஜி.பி.,க்கு தகவல் சென்றது. இதையடுத்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார், விடுதியில்

ஈரோடு: மரகதலிங்கம் மற்றும் நந்தி சிலையை விற்க முயன்ற மூவரை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், ஈரோட்டில் நேற்று கைது செய்தனர்.

ஈரோடு, மேட்டூர் சாலையில் உள்ள, ராஜராஜேஸ்வரி விடுதியில், பல கோடி மதிப்பிலான சிலை விற்பதற்கான பேரம் நடப்பதாக, தமிழக டி.ஜி.பி.,க்கு தகவல் சென்றது. இதையடுத்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார், விடுதியில் ஒரு அறையில், நேற்று சோதனை நடத்தினர். அங்கு மூவர் இருந்தனர். அவர்களிடம் மரகதத்தினால் ஆன, மூன்று 'இன்ச்' சிவலிங்கம், ஒன்றரை 'இன்ச்' நந்தி சிலை இருந்தது. இரு சிலைகளையும், ஏழு கோடி ரூபாய்க்கு விற்க, பேரம் நடந்ததும் தெரிய வந்தது. சிலைகளுடன் அவர்களை கைது செய்தனர். பின், ரகசிய இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.


இதுகுறித்து, ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் கூறியதாவது: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியில், 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவிலில், ஐந்து ஆண்டுகளுக்கு முன், சிலைகள் திருடப்பட்டுள்ளன. இவைகளை விற்க முடியாமல், 10, 15 கைகள் மாறியுள்ளன. விடுதியில், ஈரோட்டை சேர்ந்த கஜேந்திரன், 40, சந்திரசேகரன், 43, திருச்செங்கோட்டை சேர்ந்த மணிராஜ், 46, ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மூவருமே ஏஜென்டுகள். சிலை மதிப்பு, எந்த உலோகத்தால் ஆனது என்பது, ஆய்வுக்கு பின் தெரியவரும். கைதான மூவரிடம் சிலை திருட்டு, கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து தொடர்ந்து விசாரிக்கிறோம். மேலும், மூவர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட சிலைகள், கும்பகோணத்தில் உள்ள கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும். புராதன, மதிப்புமிக்க சிலைகளை, தமிழகத்தில் இருந்து, இனி வெளிநாடுகளுக்கு கடத்த முடியாது. அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டு விட்டன. இதில் ஈடுபட்ட முக்கிய பிரமுகர்கள், ஏற்கனவே கைது செய்யப்பட்டு விட்டனர். இவ்வாறு அவர் கூறினார். ஈரோட்டில் சிக்கிய இரு சிலைகளும், ஏழு கோடி ரூபாய் மதிப்பு இருக்கலாம் என தெரிகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X