கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், முன்னாள் ராணுவத்தினர், 53வது ஆண்டாக ஒன்று கூடி சந்திக்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பலர், 1964 நவம்பரில் நடந்த ராணுவ தேர்வில் பங்கேற்றனர். மதராஸ் இன்ஜினியரிங் குரூப்பில், ஏராளமானோர் தேர்வு செய்யப்பட்டனர். பின், ஒவ்வொருவரும் பிரிந்து, ராணுவத்தில் சேர்ந்து, பல்வேறு இடங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றனர். இந்நிலையில் இவர்கள், 53வது ஆண்டாக, நேற்று கிருஷ்ணகிரி டான்சி வளாகத்தில் சந்தித்து, தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு, முன்னாள் சுபேதார் முனிசாமி தலைமை வகித்தார். பெங்களூருவை சேர்ந்த கேப்டன் மைக்கேல் வரவேற்றார். முன்னாள் ராணுவ வீரர்கள் சுபேதார் ஜான்கென்னடி, ராமலிங்கம், சீனிவாசன், அவில்தார் குணசேகரன், நடராஜன், கணேசன், ஏழுமலை, வேலாயுதம், பாலகிருஷ்ணன், கேப்டன் தங்கராஜ், சுபேதார் சையத்பீர் ஆகியோர், பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து, ஒருவருக்கொருவர் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர். ஏற்பாடுகளை, முன்னாள் கேப்டன் தேவராஜ் செய்திருந்தார். முன்னாள் கேப்டன் சின்னப்பன், நன்றி கூறினார்.