"கப்பம் கட்டுனா, கம்பம் நடும் ஆபீசு... "சேவல் கூவியும் விழிக்காத போலீசு...!| Dinamalar

"கப்பம்' கட்டுனா, கம்பம் நடும் ஆபீசு... "சேவல் கூவியும்' விழிக்காத போலீசு...!

Added : நவ 07, 2017 | |
""யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்னுன்ற பழமொழி, நம்ம ஆபீஸருங்களுக்கு ரொம்ப சரியா இருக்கும்,'' என்றவாறே, மழையில் நனைந்தபடி, மித்ரா பணிபுரியும் அலுவலக ஓய்வறைக்குள் சென்றாள் சித்ரா.""என்ன, ரொம்ப நனைஞ்சிட்டீங்க. மழை பலமா பெய்யுதா? அதுசரி, பழமொழி இருக்குன்னா, ஏதோ சேதியும் இருக்குமே,'' என்று கேட்டாள் மித்ரா.""யூனியன் ஆபீசருங்க பலரை, போன வாரம்
 "கப்பம்' கட்டுனா, கம்பம் நடும் ஆபீசு... "சேவல் கூவியும்' விழிக்காத போலீசு...!

""யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்னுன்ற பழமொழி, நம்ம ஆபீஸருங்களுக்கு ரொம்ப சரியா இருக்கும்,'' என்றவாறே, மழையில் நனைந்தபடி, மித்ரா பணிபுரியும் அலுவலக ஓய்வறைக்குள் சென்றாள் சித்ரா.""என்ன, ரொம்ப நனைஞ்சிட்டீங்க. மழை பலமா பெய்யுதா? அதுசரி, பழமொழி இருக்குன்னா, ஏதோ சேதியும் இருக்குமே,'' என்று கேட்டாள் மித்ரா.
""யூனியன் ஆபீசருங்க பலரை, போன வாரம் திடீர்னு டிரான்ஸ்பர் பண்ணிணாங்க. அதில், ஏராளமா வைட்டமின் "ப' விளையாடியிருக்காம். சபாநாயகர் தொகுதிக்காரர் ஒருத்தர், சொந்த ஊருல வேலை பார்க்க, டிரான்ஸ்பர் வாங்கிட்டாரு. அதே ஊர்ல, பசை போல ஒட்டியிருக்கற "அலட்டல்' ஆபீசர், டிரான்ஸ்பர் ஆகக்கூடாதுன்னு இருக்காராம். அதனால, ரெண்டு வகையிலும் வருமானம் தான்,'' என்றாள் சித்ரா.
""ஓஹோ,'' என்று சிரித்தாள் மித்ரா.""ஒன்பது மாசம் சம்பளம் போடாம, ஒன்றிய ஆபீசுல இழுத்தடிச்ச பெண் ஊழியருக்கு, உடனடியாக உத்தரவு போட்டாங்களே. அதே ஆபீசுல, பல ஊழியர்களுக்கு ரெண்டு வருசமா, சம்பள உயர்வு போடலையாம். நமக்கு எப்போ விடிவு காலம் பிறக்கும்னு, அவங்க எதிர்பார்த்திட்டிருக்காங்க,'' என்றாள் சித்ரா.""கலெக்டர் தடை போட்ட கட்டடப்பணி, இப்ப ஜரூராக நடக்குது தெரியுமா?'' என்று கேட்டாள் மித்ரா.""தெரியும், அவிநாசி யூனியன் ஆபீஸ்ல எந்த அனுமதியும் வாங்காம, திறந்த வெளி ரிசர்வ் இடத்துல, கமர்சியல் வணிக வளாக கட்டடம் பத்திதான சொல்றே. முன்னாள் கலெக்டர் தானே தடை போட்டாங்க; இப்ப இருக்கறவருக்கு என்ன தெரியும்னு, நிறுத்தி வெச்சிருந்த கட்டட வேலையை, மறுபடியும் ஆரம்பிச்சுட்டாங்க. இதுல, யாருக்கு என்ன லாபமுன்னு தெரியலை. கலெக்டர் ஆர்டருக்கு அவ்வளவுதான் வேல்யூ போலிருக்கு,'' என்று சித்ரா கூறியதும், அவளது மொபைல் போன், சிணுங்கியதும், ""சொல்லுங்க, முருகேஷ். எங்க போயிட்டீங்க. ஆளையே காணோம்,' என்று சில வினாடிகள் பேசினாள்.""அந்த பி.டி.ஓ.வுக்கு அவ்ளோ செல்வாக்கா? சரி, பார்ப்போம், எவ்ளோ நாள் என்று? இதைக்கேளு... மாஜி முதல்வர் பிறந்தநாள் நினைவா நட்ட மரங்களை கூட வெட்டி, ரோட்டுல வீசியிருக்காங்க. கலெக்டர் கேட்பாரா, ஆளுங்கட்சிக்காரங்க கேட்பாங்களான்னு தெரியலை,'' என மித்ரா கூறினாள்.""போன வாரம் திருப்பூர் கிளையில் இருந்து போன தொலைதூர அரசு பஸ் கண்டக்டர் ஒருத்தரு, 22 பேருக்கு, பணத்தை வாங்கிட்டு, டிக்கெட் கொடுக்கலையாம். நடவடிக்கை எடுத்த அதிகாரிங்க, நாலாவது நாளே, அவருக்கு திரும்பவும் வேலை கொடுத்துட்டாங்களாம். ஆனா, அதே கிளையில் தான், 2014ல், நடவடிக்கை எடுக்கப்பட்ட, தண்டபாணின்னு ஒரு கண்டக்டருக்கு, ஒன்பது மாசம் வேலை கொடுக்காம இழுத்தடிச்சிருக்காங்க,'' என்றாள் சித்ரா.""ஆமா. அது சம்பந்தமா, போன மாசம் சென்னையில் கூட விசாரணை நடந்துச்சே,'' என்று கேட்டாள் மித்ரா.""விசாரணைக்குன்னு போன கண்டக்டருக்கு, மூனு நாள் ஓ.டி., தரணும். ஆனா, விசாரணைக்கு கமிஷன் முன்னால் போய் ஆஜரான அதிகாரிகளுக்கு மட்டும் தான் ஓ.டி. போட்டாங்களாம்; கண்டக்டருக்கு, மூணு நாள் ஆப்சென்ட் போட்டு, சம்பளத்தை பிடிச்சுட்டாங்க. அதிகாரிங்க மீது புகார் சொல்லி, விசாரணை ஆணையம் வரை கொண்டு போனதால, இப்படி பழி வாங்கிட்டாங்களாம்,''என்றாள் சித்ரா.""பொதுமக்கள் மின் இணைப்பு கேட்டா, கம்பம் இல்லைன்னு சொல்ற மின் வாரிய அதிகாரிங்க, "கனமான' பார்ட்டிங்க கேட்டா, வேற இடத்தில் இருந்தாவது "லவட்டி' வந்து கொடுத்திடறாங்களாம்,'' என்று சித்ரா "ஷாக்'கடிக்கும் மேட்டருக்கு மாறினாள்.""எந்த இ.பி., ஆபீசில் இந்த கூத்தெல்லாம் நடக்கு?,'' என்று ஆச்சரியமாக கேட்டாள் மித்ரா.""வாவிபாளையம் மின் வாரிய பிரிவு அலுவலகத்துக்கு சொந்தமான மின் கம்பங்கள், நெரிப்பெரிச்சல் பகுதியில் இருக்காம். மின் கம்பம் உடைஞ்சு போச்சு; மாத்துங்கன்னு கேட்டா, புது கம்பம் இல்லை சொல்றாங்க. ஆனா, போயம்பாளையம் பிரிவு அலுவலகத்தில் "கனமான' பார்ட்டி, ஒன்று மின் இணைப்புக்கு விண்ணப்பிச்சு,அதிகாரிகளையும் கவனிச்சுதாம் அங்க புதிய கம்பம் இல்லாத நிலையில், நெரிப்பெரிச்சல் பகுதியில் இருந்த, ஏழு கம்பத்தை "சுட்டு'ட்டு போய், இணைப்பு கொடுத்துட்டாங்களாம்,'' என்று சித்ரா கூறி முடித்தாள்.""வாவிபாளையம் அதிகாரிங்க, கம்பம் காணாம போனதை கண்டுக்கலையா?'' என்று மித்ரா கேட்டாள்.""அவங்க, உயர் அதிகாரிகள் கிட்ட புகார் கொடுத்திருக்காங்க. ஓ.கே.,மா., மாநகராட்சி மேட்டர் எதுவும் இருக்கா?'', என்றாள் சித்ரா.""திருப்பூருக்கு வந்த, வருவாய் நிர்வாக ஆணையர், டோஸ் விட்ட பின், மாநகராட்சி கமிஷனர், தினமும் வார்டுக்கு விசிட் போறாராம். அதில்லாம, "நீங்க வேலை செய்யாததால, நான் திட்டு வாங்கினேன்,' என்று, கடிஞ்சுக்கறாராம். ஆட்கள் பற்றாக்குறை இருக்கிற நிலைமையில், நேரம் காலம் பார்க்காம வேலை பார்த்தா கூட இவர் இப்படி திட்டுறாரே. இது தேவையான்னு, ஊழியருங்க புலம்பறாங்களாம்,'' என்றாள் மித்ரா.""ஆனா, பத்திரப்பதிவு ஆபீசில், சிலர் கொண்டாட்டமா இருக்காங்க,'' என்று சித்ரா கூறினாள்.""கொஞ்சம் விவரமாத்தான் சொல்லுங்க,'' என்று மித்ரா கேட்டாள்.""பத்திரப்பதிவு அ<லுவலகங்களில், "ஆன்லைன்' நடைமுறை முழுமையாகாததால, வேலைகள் "லேட்' ஆகுது. இதை வெச்சு, அதிகாரிகள் சிலர், கூடுதலாக "வாங்கி' பதிவு வேலையை முடிச்சு தர்றாங்களாம் வில்லங்க சர்டிபிகேட்டுக்கு, 10 நாள் ஆகுதாம். "அர்ஜென்ட்' அப்படீன்னா, "ரூபாய் நோட்டு' காட்டினா, வேலை சுலபமாயிடுதாம்,'' என்றாள் சித்ரா.""ஓ... கதை அப்படி போகுதா? இந்த இன்ட்ரஸ்டிங் மேட்டரை கேளுங்க. பாண்டியன் நகர் பகுதியில், சேவல் சத்தம் அதிகமாயிடுச்சாம்,'' என்று மித்ரா, அடுத்த விஷயத்துக்கு வந்தாள்.""சேவல் அதிகமானா என்ன?'' என்று அப்பாவியாக கேட்டாள், சித்ரா.""ஊருக்கு ஒதுக்குபுறமா தோட்டம் பக்கத்தில், சேவல் சூதாட்டம் நடக்குது; பல லட்சம் புழங்குதாம். குறிப்பாக, ஞாயித்துக்கிழமைகளில், அந்த இடமே திருவிழா போல் ஆயிடுது. ஆனா, போலீஸ் கண்ணுக்கு மட்டும் இதெல்லாம் தெரியறதில்லை. பப்ளிக் புகார் கொடுத்தாலும், சும்மா, பேருக்கு சோதனை செஞ்சுட்டு, சத்தமில்லாம போலீஸ்காரங்க திரும்பி வந்திடறாங்க,'' என்று மித்ரா கூறி முடிக்கவும், சூடான டீ வரவும் சரியாக இருந்தது.ஒரே மூச்சில், டீயை குடித்த சித்ரா, ""மழை நின்னுடுச்சு. அடுத்த மழை வர்றதுக்குள்ளே நான் கௌம்பறேன்,'' என்றவாறு, ஹெல்மெட்டை மாட்டி கொண்டு, வண்டியை ஸ்டார்ட் செய்தாள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X