கந்துவட்டி கொடுமையால் கருணை கொலைக்கு மனு

Added : நவ 07, 2017 | கருத்துகள் (1) | |
Advertisement
திருச்சி: கந்து வட்டி கொடுமை தாங்க முடியாததால், கருணை கொலை செய்யுமாறு, ஒரு குடும்பத்தினர் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. சுந்தரமூர்த்தி என்பவர், மனைவி, இரண்டு குழந்தைகளுடன் வந்து, கந்து வட்டி கொடுமையால் அவதிப்பட்டு வருவதால், கருணைக் கொலை செய்து விடுமாறு, டி.ஆர்.ஓ., பஷீரிடம் மனு

திருச்சி: கந்து வட்டி கொடுமை தாங்க முடியாததால், கருணை கொலை செய்யுமாறு, ஒரு குடும்பத்தினர் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. சுந்தரமூர்த்தி என்பவர், மனைவி, இரண்டு குழந்தைகளுடன் வந்து, கந்து வட்டி கொடுமையால் அவதிப்பட்டு வருவதால், கருணைக் கொலை செய்து விடுமாறு, டி.ஆர்.ஓ., பஷீரிடம் மனு கொடுத்தார்.


சுந்தரமூர்த்தி கூறியதாவது: உய்யக்கொண்டான் திருமலையைச் சேர்ந்த பெரியக்காள், அவரது மகள் இந்திராணி ஆகியோரிடம் இரண்டு ஆண்டுகளுக்கு முன், 20 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினோம். மாதந்தோறும், 3,000 ஆயிரம் வீதம், 54 ஆயிரம் ரூபாய் செலுத்தி விட்டோம். இருப்பினும், பணம் கேட்டு தொந்தரவு செய்த அவர்கள், 3ம் தேதி வீட்டுக்கு வந்து அசிங்கமாக பேசி, அடித்து துன்புறுத்தினர். இனியும் பணம் கொடுக்க முடியாத நிலையில் இருப்பதால், அவர்களிடம் இருந்து எங்களை காப்பாற்ற, கருணைக் கொலை செய்து விடுங்கள் என, மனு கொடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு, போலீசாருக்கு, டி.ஆர்.ஓ., உத்தரவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
10-நவ-201709:00:02 IST Report Abuse
Srinivasan Kannaiya பெரியக்காள், அவரது மகள் இந்திராணி ஆகியோரிடம் உள்ள சொத்து பதிதுகளை கைப்பற்றி அரசு உடைமையாக்குங்கள்... எவனும் கந்து வட்டி வாங்க பயப்படுவான்... ஒரே வழி இனி எல்லா வங்கிகளிலும் ஆதாரை வைத்து கொண்டு ஒரு குறிப்பிட்டதொகையை ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டும் கடனாக வழங்க அரசு ஆணைகள் போடலாம்... அதி திரும்ப செலுத்திய பிறகுதான் ..மறுக்கடன் கொடுக்கவேண்டும் ..இதில் அரசியல் வாதிகள் தவறாக பயன்படுத்த வாய்ப்புக்கள் அதி9கம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X