அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரூ.19 கோடி எங்கே: ஸ்டாலின் கேள்வி

Added : நவ 07, 2017 | கருத்துகள் (50)
Advertisement
அடையாறு,Adyar,  கால்வாய், Canal,தி.மு.க.,DMK,  ஸ்டாலின்,Stalin, ஆதனூர் ,Adanur, சென்னை, Chennai, காஞ்சிபுரம், Kanchipuram,

சென்னை: ஆதனூர் - அடையாறு கால்வாய் தூர் வாரும் பணி நடக்கவில்லை. அதற்கு ஒதுக்கிய 19 கோடி ரூபாய் எங்கே போனது என தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், வரதராஜபுரத்தில் அடையாறு கால்வாயை தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: முடிச்சூர், வரதராஜபுரம், கூடுவாஞ்சேரியில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஆதனூர் - அடையாறு கால்வாயை தூர் வார வேண்டும்; கால்வாயை ஆழப்படுத்தி, கரைகளை பலப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போதைய அரசால் இதற்கு , 19 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச், 23ம் தேதி பணிகள் துவங்கி உள்ளன. 45 சதவீத பணிகள் முடிவடைந்து இருப்பதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.


ரூ.19 கோடி எங்கே?



ஆனால், எந்த பணிகளும் நடக்கவில்லை. ஒதுக்கீடு செய்யப்பட்ட 19 கோடி ரூபாய் எங்கே போனது என தெரியவில்லை. தற்போதைய குதிரை பேர அரசு, வெறும் அறிவிப்புகளை தான் வெளியிடுகிறது. இந்த அரசு மக்கள் கவலைகளை கவனத்தில் கொள்ளவில்லை. வரும் கால கட்டத்தில், ஆட்சி மாற்றம் ஏற்படும் போது, மக்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
08-நவ-201702:57:34 IST Report Abuse
Panneerselvam Chinnasamy எதிர்க்கட்சி தலைவர் கேட்கிறார் ...பதில் சொல்லவேண்டியது ஆளுங்கட்சி மங்குணிகள்... அதையும் கேட்க கூடாது என்று சொல்பவர்கள் மங்குணிகளின் கைக்கூலிகளே...
Rate this:
Share this comment
Cancel
Mannai Radha Krishnan - ROSEVILL, CA, USA,யூ.எஸ்.ஏ
08-நவ-201702:55:45 IST Report Abuse
Mannai Radha Krishnan உங்க ஆட்சியில் மலையையே முழுங்கிட்டீங்க....ஆகையால் இந்த விவகாரம் உண்மை இருந்தாலும் நீங்கள் கேட்க தகுதி இல்லை. கார்பொரேஷன் மஸ்டர் ரோல் முதல்....வீராணம், பூச்சி மருந்து ....டு 2 ஜி etc etc வரை பதில் சொல்லிவிட்டு பேசவும். கை சுத்தமா இருக்கிறவங்க கேட்கட்டும்
Rate this:
Share this comment
Cancel
karthikeyan -  ( Posted via: Dinamalar Android App )
08-நவ-201700:39:15 IST Report Abuse
karthikeyan கோபாலபுரத்தில்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X