அரசியல் செய்தி

தமிழ்நாடு

மையம் விசில் ஹேஸ்டக் அறிமுகம் செய்தார் கமல் ; நேர்மையானவர்கள் என்னுடன் வாருங்கள் என்கிறார்

Updated : நவ 07, 2017 | Added : நவ 07, 2017 | கருத்துகள் (71)
Advertisement
மையம் விசில், ஹெஸ்டக், அறிமுகம், கமல்,  அரசியல், theditheerpomvaa, maiamwhistle,virtuouscycles

சென்னை: மக்களிடம் கருத்து கேட்கவும், மக்கள் மன நிலையை அறியவும் நடிகர் கமலஹாசன் இன்று மையம் விசில் ஹேஸ்டக்கை அறிமுகம் செய்தார். இது ஒரு பொது அரங்கம் என கமல் தெரிவித்தார். பிறந்த நாளான இன்று அவர் சென்னையில் நிருபர்களிடம் பேசியதாவது:
"நன்றாற்றுள் தவறுண்டு அவரவர் பண்பறிந்து ஆற்றான்கடை " என்பர் அதாவது நல்லது செய்வது பார்த்து செய்ய வேண்டும். நாம் செய்யும் பணி சரியாக செய்ய வேண்டும். இது தான் அரசியலில் சிம்பிள்.
உண்மை பேசினால் நல்லது தான் , ஆனால் பலரால் செய்ய முடியவில்லை. அசோகர் காட்டிய அசோக சக்கரம் தேசிய கொடியில் பதிந்தது. இது போல் நான் பிளாட்பார்மை உருவாக்கவுள்ளேன். ஒரு நல்லது படிப்படியாக மற்ற நல்லதுக்கான விதையாக, வேராக மீண்டும் மீண்டும் வளர்ந்து கொண்டேயிருக்கும். இது எல்லோர் மனதிலும் இருக்கிறது.
நாட்டில் தர்மம் , அற சக்கரம் போய், ஒரு விஷம் கலந்த சூழல் ஆகி விட்டது. வண்டிச்சக்கர மையில் மண் பதிந்து விட்டது. இதனால் வண்டி ஓட சிரமப்படும். இது போன்று இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பது எனது கனவு. நாம் எல்லோரும் முயன்றால் முடியாதது இல்லை. 30 ஆண்டுகளுக்கு முன்னர் என்ன செய்ய வேண்டும் என என்னிடம் நற்பணி மன்றத்தார் கேட்பார்கள். நாம் தேடி , தேடி போய் செய்ய வேண்டும்.


விசிலான் அடிச்ச குஞ்சுகள்


விவேகானந்தர், காந்தி அறிவுரைகள் கூறியதை நாம் பின்பற்ற வேண்டும். விசில் அடிச்சான்குஞ்சுகள் என்று பேசப்பட்ட எனது ரசிகர்கள் நற்பணியில் ஈடுபட்டபோது நல்ல மரியாதை கிடைத்தது.
விசில் அடிச்சான் குஞ்சுகள் என்ன செய்ய போகுது என கேட்ட நிலைக்காக தற்போது மையம் விசில் என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி இருக்கிறேன். #theditheerpomvaa #maiamwhistle #virtuouscycles . இது ஒரு பொது அரங்கம். நியாயத்திற்கு குரல் எழுப்பும் கருவியாக விசில் இருக்கும். விசில் என்பது தீமை நடக்கும் போது, நன்மை நடக்க யார் வேண்டுமானானாலும் அடிக்கலாம்.
இது பல்வேறு காரியங்களுக்குரியது. விசில் புதிது அல்ல. அக்கிரமம் நடக்கும் போது குரல் கொடுக்கப்பட வேண்டியது. இது குறைந்து விட்டதால் நியாயத்திற்கான குரல் வலுப்பெற வேண்டும் என நான் நம்புகிறேன். இந்த விசிலை எனது ஆதரவாளர்கள் அடிக்க வேண்டும். விசில் அடிப்பீர்களா ? என்று கேட்டார். ( சிலர் அந்நேரத்தில் விசில் அடித்தனர். )


சினிமா எடுப்பதற்கே 6 மாதம்

அஸ்திவாரம் பலமாக இருக்க வேண்டும். அறிஞர்கள் பலருடன் ஆய்வு செய்து தயார்படுத்திக் கொண்டிருக்கிறோம். கர்ப்பம் இருந்தால் புள்ளைக்கு பெயர் வைப்பது எப்போது என்று கேட்க கூடாது.
ஆணோ, பெண்ணோ என்று பார்த்து பெயர் வைப்பதும், இப்போது அவசரம் இல்லை. கட்சியை தனியாக அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. சினிமா எடுப்பதற்கே 6 மாத காலம் அவகாசம் எடுத்துக்கொள்வேன். அரசியல் என்பது பெரிய பணி ஆகும். பிறந்த காரணத்தை நிரூபிக்க வேண்டியதை செய்கிறேன். வேறு ஏதும் இல்லை என்றார்.
அரசியலுக்கு வருவீர்களா வர மாட்டீர்களா என்று நிருபர் ஒருவர் கேள்வி கேட்ட போது; கமல் அளித்த பதிலில்; நான் வந்துட்டேன் என்று கேள்வி இப்போது இல்லை , நான் வந்துட்டேன் என்ன என்ன செய்ய போகிறேன் என்று சொல்வது முக்கியம். நான் செய்வேனா என்பதற்கான பணியை துவக்கி விட்டேன் என்றார். சினிமா கதையை முன்னால் சொல்ல முடியாது. விசில் என்பதை யாரும் பயன்படுத்தலாம். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வேன். இவ்வாறு அவர் கமல் பேசினார்.
‛மையம்விசில்' ஆப் தயாராகி வருகிறது. அதில் நிறைய ஆய்வுகள் செய்கிறோம். அதில் என்னவெல்லாம் இருக்கும் என்று இப்போது கூற முடியாது என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAJVEL - Thiruvallur,இந்தியா
13-நவ-201708:34:36 IST Report Abuse
RAJVEL இப்போதைக்கு இருக்கும் அரசியல் தலைவர்கள் தமிழ் நாட்டை குழப்பி அதில் மீன்களை பிடித்து கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த தண்ணீரில் மக்களை மிதக்க விட்டு வேடிக்கை பார்கிறார்கள் ... கமல் சார் துணிந்து முன் வந்து நகரை துடைக்கிறேன் என்கிறார் . ஆனால் ரஜினி சார் எவன் எப்படி போனால் எனக்கு என என்று தானே இருக்கிறார் . நல்லவர்கள் முன் வரும் போதுஒரு வாய்ப்பு கொடுத்து பார்ப்போம் .. விமர்சனம் செய்யும் முன் ஒன்றை நினைவில் வையுங்கள் .. நாம் வீட்டில் இருப்பதை போல் பனி புரியும் இடத்தில இருப்பதில்லை அது போல தான் கமல் சார் அவரின் குடும்ப விவகாரங்கள் வேறு அரசியல் காரண கருத்துகள் வேறு . எல்லா வற்றையும் ஒன்றாக பார்க்க வேணடாம். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் மிக பெரிய அரசியல் வித்தகர் கலைஞர் டாக்டர் கருணாநிதி அவரின் மனைவி எண்ணிக்கை நினைவில் வருகிறதா ... அவரின் கீழ் தமிழ் நாடு நல்ல ஆட்சி பெறவில்லையா. ஏற்ற தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும் ஏற்று கொள்வோம் ஏமாற்றங்களை அல்ல, எல்லாம் நல்லது நடக்கும் என்ற நேர் மறை எண்ணங்களை.
Rate this:
Share this comment
Cancel
நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா
07-நவ-201723:24:55 IST Report Abuse
நந்தினி திவ்ய பாரதி என்ன சொல்லுத்தாக. ஒன்னும் புரியாம புரியாதா இர்க்குது.
Rate this:
Share this comment
Cancel
Mahendran TC - Lusaka,ஜாம்பியா
07-நவ-201723:10:41 IST Report Abuse
Mahendran TC நேர்மையானவர்களா ? அப்படி யாராவது இன்றைய இந்திய அரசியலில் இருக்கிறார்களா கமலு ? உன்னையும் சேர்த்து ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X