மோடியை அரசியலுக்கு பயன்படுத்த மாட்டோம்: ஸ்டாலின் | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மோடியை அரசியலுக்கு பயன்படுத்த மாட்டோம்: ஸ்டாலின்

Updated : நவ 08, 2017 | Added : நவ 08, 2017 | கருத்துகள் (32)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

மதுரை: எந்தவித அச்சுறுத்தல் வந்தாலும் ரூபாய் நோட்டு வாபசிற்கு எதிராக போராட்டம் தொடரும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார்.

ரூபாய் நோட்டு வாபசிற்கு எதிராக மதுரையி்ல நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: பண நீக்க நடவடிக்கையை யாரும் எதிர்பாராத நிலையில், திடீரென்று இரவில் அறிவித்தார்கள். நள்ளிரவில்தான் சுதந்திரத்தை பெறறோம். ஆனால் , நவ., 8 ம் தேதி நள்ளிரவில் நம் சுதந்திரத்தை இழந்து நிற்கிறோம். ஒட்டுமொத்தமாக பணபுழக்கத்தை முடக்கிய ஆட்சி மோடி ஆட்சி என்பதை நாடு உணர்ந்துள்ளது.வங்கிகளில் ஏடிஎம் வாசலில் காத்திருந்த போது மக்கள் மயங்கி விழுந்தார்கள். 100க்கும் மேற்பட்டவர்கள் மாண்டு போனார்கள். இதற்கெல்லாம் யார் காரணம். இதற்கு வரும் காலத்தில் மோடி பதில் சொல்ல வேண்டும். அப்படி ஒரு நிலை உருவாக போகிறது.


திட்டமில்லை:

பணமதிப்பு நீக்கத்தை அறிவித்தார்கள். 50 நாட்களுக்குள் 74 முறை மாறி மாறி பல அறிவிப்புகள் வெளியிட்டார்கள். இதனை அறிவிப்பதற்கு முன்னர், ரிசர்வ் வங்கி மத்திய அரசு, மோடி திட்டமிட்டிருக்க வேண்டும். பொருளாதார நிபுணர்களுடன் கலந்து பேசியிருக்க வேண்டும். ஆனால், திட்டமிடவில்லை. ஆனால், எந்தவித திட்டமும் இல்லாமல் ரூபாய் நோட்டு வாபஸ் கொண்டு வரப்பட்டது.


எதிர்ப்பு

இதனை, யஷ்வந்த் சின்ஹா, சுப்ரமணியன்சாமி ஆகியோர் எதிர்க்கின்றனர். ஏழை, சிறு குறு தொழில்கள் பாதிக்கப்பட்டதால் நாங்கள் தொடர்ந்து எதிர்க்கிறோம்.சிறு குறு தொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. எத்தனை அச்சுறுத்தல் வந்தாலும் ரூபாய் நோட்டு வாபசிற்கு எதிராக போராடுவோம். மத்திய அரசுக்கு போராட்டத்தை நிறுத்திவிட்டதாக கூறினார்கள். மோடி கோபாலபுரம் வந்தார். ஸ்டாலினுடன் கை கோர்த்தார். கூட்டணி உருவாகிவிட்டதாக கற்பனைக்கு ஏற்ப செய்தி வெளியிட்டார்கள். கருணாநிதியை மோடி நேரில் நலம் விசாரித்தது மனிதாபிமான செயல். இந்த சந்திப்பை வைத்து ஆதாயம் தேடுபவர்கள் கனவு ஒரு போதும் பலிக்காது. மோடி கருணாநிதி சந்திப்பை அவரவர் வசதிக்கேற்ப திட்டமிட்டு பேசுகின்றனர். மோடியை நாங்கள் அரசியலுக்காக பயன்படுத்த மாட்டோம். எங்களை அவர் அரசியலுக்காக பயன்படுத்த மாட்டார்.


ஏற்பு

ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தை பொருளாதார நிபுணர்கள் எதிர்க்கின்றனர். ஜிஎஸ்டி அமல்படுத்துவதை 3 மாதத்திற்கு நிறுத்தி வைக்க வேண்டும் என கூறினோம். ஆனால் ஏற்கவில்லை. தற்போது ஜிஎஸ்டி வரி முற்றிலும் மாற்றியமைக்க வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது.ஜிஎஸ்டியால் ஏழைகள் பாதிக்கிறார்கள் என்ற எதிர்கட்சி வாதத்தை முன்பு ஏற்கவில்லை. தற்போது பிரதமர் ஏற்க முன் வந்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramamoorthy P - Chennai,இந்தியா
08-நவ-201723:03:14 IST Report Abuse
Ramamoorthy P 2ஜி வழக்கின் தீர்ப்பு கண்டு பயந்து ஓடாமல் இருந்தால் சரி.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
08-நவ-201722:45:02 IST Report Abuse
Pugazh V 2G கேஸில மோ__ வை பயன்படுத்தலாமாம் குவாட்டர் சொல்றார். அதாவது சுப்ரீம் கோர்ட் மோ_ வின் இஷ்டப்படிதான் செயல்படுகிறது என்கிறார். ஒத்துகிட்டதுக்கு நன்றி. அமித் ஷா மகன் கேஸ் அம்பேல்னும் ஒத்துக்கறோம்
Rate this:
Share this comment
Cancel
ManiS -  ( Posted via: Dinamalar Android App )
08-நவ-201720:34:01 IST Report Abuse
ManiS Congress and its allies like you and TMC and cine industry are drastically affected by this. So that you can speak.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X