நளினியை விடுதலை செய்ய மகளிர் இயக்கம்: வக்கீல் தகவல்

Added : நவ 12, 2017 | |
Advertisement
வேலூர்: ''நளினியை, முன் கூட்டியே விடுதலை செய்ய, தேசிய அளவில், 'ரிலீஸ் நளினி மூமென்ட்' என்ற பெயரில், புதிய மகளிர் இயக்கம் துவக்கப்பட உள்ளது,'' என, வேலூரில், அவரது வக்கீல் புகழேந்தி கூறினார்.முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, வேலூர் பெண்கள் சிறையிலும், அவரது கணவர் முருகன், வேலூர் ஆண்கள் சிறையிலும் உள்ளனர். அவர்களை, வக்கீல்

வேலூர்: ''நளினியை, முன் கூட்டியே விடுதலை செய்ய, தேசிய அளவில், 'ரிலீஸ் நளினி மூமென்ட்' என்ற பெயரில், புதிய மகளிர் இயக்கம் துவக்கப்பட உள்ளது,'' என, வேலூரில், அவரது வக்கீல் புகழேந்தி கூறினார்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, வேலூர் பெண்கள் சிறையிலும், அவரது கணவர் முருகன், வேலூர் ஆண்கள் சிறையிலும் உள்ளனர். அவர்களை, வக்கீல் புகழேந்தி நேற்று சந்தித்துப் பேசினார். பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த, 27 ஆண்டுகளாக சிறையில் உள்ள நளினியை, விடுதலை செய்ய வேண்டும் என, சர்வதேச மகளிர் ஆணையத்தில் நளினி ஏற்கனவே மனு கொடுத்திருந்தார். அந்த மனு மீது, நேற்று வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், தேசிய அளவில், 'ரிலீஸ் நளினி மூமென்ட்' என்ற, புதிய மகளிர் இயக்கம், டிச., 10ல், மனித உரிமைகள் தினத்தன்று துவக்கப்பட உள்ளது. இந்த இயக்கம், இந்தியா மற்றும் சர்வதேச அளவில் செயல்படும் மகளிர் அமைப்புக்களுடன் இணைந்து, நளினியை முன் கூட்டியே விடுதலை செய்ய, மத்திய அரசையும், தமிழக அரசையும் வலியுறுத்தும். மகள் அரித்திரா திருமண ஏற்பாட்டிற்காக, ஆறு மாதம் பரோல் கேட்டு நளினி தாக்கல் செய்த வழக்கு, வரும், 15 ல் விசாரணைக்கு வருகிறது. அதேபோல், தன்னை விடுதலை செய்ய வேண்டும் என, உயர்நீதிமன்றத்தில், நளினி தாக்கல் செய்துள்ள, மூன்று வழக்குகள், அடுத்த வாரம், இறுதி விசாரணைக்கு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X