அனைத்து அரசு பள்ளிகளிலும் முன்னாள் மாணவர் அமைப்பை துவங்க வேண்டும்: சி.இ.ஓ., உத்தரவு

Added : நவ 12, 2017 | |
Advertisement
திருவண்ணாமலை: ''திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும், முன்னாள் மாணவர் அமைப்பை, வரும், 14ல் துவங்க வேண்டும் என, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,'' என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் கூறினார். இதுகுறித்து, நிருபர்களிடம் அவர் கூறியதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும், கட்டடம், உள்

திருவண்ணாமலை: ''திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும், முன்னாள் மாணவர் அமைப்பை, வரும், 14ல் துவங்க வேண்டும் என, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,'' என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் கூறினார்.

இதுகுறித்து, நிருபர்களிடம் அவர் கூறியதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும், கட்டடம், உள் கட்டமைப்பு, மாணவர் சேர்க்கை, மாணவர்களுக்கு உயர் கல்வி ஆலோசனை வழங்குதல் ஆகியவற்றிற்கு, முன்னாள் மாணவர் அமைப்பு அவசியமாகும். அதேபோல், தற்போது படிக்கும் மாணவர்களையும், முன்னாள் மாணவர்களையும் ஒன்றிணைக்க, முன்னாள் மாணவர் அமைப்பு பயனுள்ளதாக அமையும். இதனால், அனைத்து பள்ளிகளிலும், வரும், 14 குழந்தைகள் தினத்தன்று, முன்னாள் மாணவர் அமைப்பு துவங்க வேண்டும் என, பள்ளி தலைமை ஆசியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. எனவே, தற்போது, உயர்கல்வி பயிலும் மாணவர்கள், பணியில் இருக்கும் மாணவர்கள் என, அனைவரும், தாங்கள் படித்த பள்ளியில் துவங்கப்பட உள்ள முன்னாள் மாணவர் அமைப்பில் உறுப்பினர்களாக இணைந்து, தாங்கள் படித்த பள்ளியின் வளர்ச்சியிலும், பயிலும் மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், இந்த முன்னாள் மாணவர் அமைப்பில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X