சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கத்திமுனையில் பெண்களை கற்பழித்த காமுகன் கைது

Added : நவ 16, 2017 | கருத்துகள் (1)
Advertisement
கத்திமுனையில் பெண்களை  கற்பழித்த காமுகன் கைது

சென்னையில், 25க்கும் மேற்பட்ட பெண்களை, கத்தியை காட்டி மிரட்டி கற்பை சூறையாடிய, காமுகனை போலீசார் கைது செய்தனர். சென்னை, வேளச்சேரியைச் சேர்ந்தவர், வில்லியம்ஸ். இவர் நேற்று அதே பகுதியில் தனியாக நடந்து சென்றார். அப்போது, இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த வாலிபன், கத்தி முனையில், 8,500 ரூபாயை பறித்து தப்பினான். இதையடுத்து, கிண்டி, வேளச்சேரி, சைதாப்பேட்டை, குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில், போலீசார் வாகன சோதனையை கடுமையாக்கினர். அப்போது, குமரன் நகர் பகுதியில் போலீசாரை கண்டதும், மின்னல் வேகத்தில் பறந்த, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த, அறிவழகன், 29, என்பவனை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவனிடம், கத்தி மற்றும் மொபைல் போனில், விதவிதமான பெண்களின் புகைப்படங்கள், சில பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் வீடியோக்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின் அவனை, அடையாறு துணை போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள், கிண்டியில், ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று, கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது, கத்தியை காட்டி மிரட்டி, 25க்கும் மேற்பட்ட பெண்களின் கற்பை சூறையாடியதுடன், 300 சவரன் நகைகளை, அறிவழகன் பறித்துள்ளது தெரிய வந்தது. இதையடுத்து, குமரன் நகர் போலீசார், நேற்று அறிவழகனை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். அவனை தங்கள் காவலில் எடுத்தும் விசாரிக்க உள்ளனர்.

போலீசாரிடம் அறிவழகன் அளித்துள்ள வாக்குமூலம்: நான், எம்.சி.ஏ., படித்துள்ளேன்; எந்த வேலைக்கும் போனது இல்லை. 'பேஸ்புக்' வாயிலாக, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த, கல்லுாரி மாணவியர் இருவர் பழக்கமாகினர். அவர்களிடம் காதல் வலை வீசி, தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்துச்சென்று, கற்பை சூறையாடினேன். அவர்களின் செயினை வாங்கி, அடகு வைத்து செலவு செய்தேன்; அதை, திருப்பி கொடுக்காததால் பிரச்னை ஏற்பட்டது.
மூன்று ஆண்டுகளுக்கு முன், சென்னைக்கு வந்தேன். கிண்டி அம்மாள் நகர், நரசிங்கபுரம், அம்பத்துார், ஆவடி, வளசரவாக்கம், ராயலா நகர், மேற்கு மாம்பலம் என, பல இடங்களில் வாடகை வீட்டில் தங்கினேன். அப்போது, பக்கத்து வீடுகளில் வசிக்கும், திருமணமாகாத இளம் பெண்களை குறி வைப்பேன். அவர்களிடம் திருமண ஆசை காட்டி, தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்துச்சென்று, உல்லாசம் அனுபவிப்பேன். அவர்களுக்கு தெரியாமல், மொபைல் போனில் வீடியோ எடுப்பேன். அதை காட்டியே, நகை, பணம் பறிப்பேன். அந்த பெண்கள் வழியாக, அவர்களின் தோழிகளுக்கும் வலைவீசி கற்பை சூறையாடுவேன்.
அதேபோல, வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை நோட்டமிடுவேன். அவர்களிடம், குடிக்க தண்ணீர் கேட்பது போல் நடித்து, திடீரென வீட்டிற்குள் நுழைந்து, கத்தியை காட்டி மிரட்டி கற்பழிப்பேன்; அவர்களின் நகையை பறித்து தப்புவேன்.
சில வீடுகளின் வெளியே, குடிநீர் குழாய்கள் இருக்கும். இதை நோட்டமிட்டு, பெண்கள் வீட்டில் தனியாக இருக்கும் போது, குடிநீர் குழாயை திறந்து விடுவேன்.
அதை மூட, அவர்கள் கதவை திறக்கும் போது, வீட்டிற்குள் சென்று விடுவேன். பின், அவர்களை கத்தியை காட்டி மிரட்டி, உல்லாசம் அனுபவிப்பேன்.'பேஸ்புக், வாட்ஸ் ஆப், டுவிட்டர், வி சாட்' என, சமூக வலைதளங்கள் வாயிலாகவும், இளம் பெண்களிடம் காதல் வலை வீசி, கற்பை சூறையாடிய பின் கழற்றி விட்டு விடுவேன். சில குடும்ப பெண்களையும் சீரழித்து உள்ளேன். சில வீடுகளின் மாடியில் ஏறி குதித்து, பின் பக்க வாசல் வழியாக சென்றும், கற்பை சூறையாடி உள்ளேன்.இவ்வாறு அவன் கூறியுள்ளான்.

இதற்கு முன்... : சென்னையில், 1980ல், அகரம் நாராயணன் என்பவன், அறிவழகன் போன்று, வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை, கத்தியை காட்டி மிரட்டி கற்பழித்து, நகை பறிப்பில் ஈடுபட்டு கைதானான். பின், அவன் கொலை செய்யப்பட்டார் என, போலீசார் கூறினர்.

காமக்கொடூரன் : போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது: சில தினங்களுக்கு முன், கிண்டி பகுதியைச் சேர்ந்த, இளம் பெண் ஒருவர், வீட்டில் தனியாக இருந்த போது, வாலிபன் ஒருவன் கத்தியை காட்டி மிரட்டி கற்பழித்துவிட்டதாக புகார் அளித்து இருந்தார். அந்த வாலிபன், அறிவழகன் தான் என்பது தெரிய வந்துள்ளது. இதுவரை, 25க்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்வை சீரழித்து இருப்பதாக தெரிவித்துள்ளான். அந்த வீடுகளுக்கு சென்று விசாரித்து வருகிறோம். இந்த காமக்கொடூரனை காவலில் எடுத்து விசாரித்தால் தான், பல உண்மைகள் தெரிய வரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.P. Barucha - Pune,இந்தியா
20-நவ-201712:07:02 IST Report Abuse
S.P. Barucha சென்னையில், 1980ல், அகரம் நாராயணன் தற்போது அறிவழகன் , பெண்களை போற்றி புகழும் நாட்டில் நீதிபதிகள் தங்களுடைய வேலையை செய்வதின் லட்சணம் இதுதானா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X