உயிருக்கு போராடிய குழந்தை: 516 கி.மீ.,ஐ 6 மணி நேரத்தில் கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்

Updated : நவ 17, 2017 | Added : நவ 17, 2017 | கருத்துகள் (78) | |
Advertisement
திருவனந்தபுரம் : உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பச்சிளம் குழந்தையின் அறுவை சிகிச்சைக்காக, ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர், 516 கிமீ தூரத்தை 6 மணி 45 நிமிடத்தில் கடந்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவம் பலரையும் நெகிழச் செய்துள்ளது. ஆம்புலன்ஸ் டிரைவரான தமீமிற்கு நவம்பர் 15 ம் தேதியன்று இரவு கண்ணூரில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள
உயிருக்கு போராடிய குழந்தை: 516 கி.மீ.,ஐ 6 மணி நேரத்தில் கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்

திருவனந்தபுரம் : உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பச்சிளம் குழந்தையின் அறுவை சிகிச்சைக்காக, ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர், 516 கிமீ தூரத்தை 6 மணி 45 நிமிடத்தில் கடந்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவம் பலரையும் நெகிழச் செய்துள்ளது.


ஆம்புலன்ஸ் டிரைவரான தமீமிற்கு நவம்பர் 15 ம் தேதியன்று இரவு கண்ணூரில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என அவசர அழைப்பு வந்துள்ளது. மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டிருந்த பிறந்து 31 நாட்களே ஆன பாத்திமா என்ற குழந்தைக்கு அவசரமாக இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது.ஆம்புலன்ஸ் செல்வதற்காக இடையூறு ஏற்படாமல் இருக்கும் வகையில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது. ஆம்புலன்சிற்கு வழிவிடும் வகையில் போக்குவரத்தை சரி செய்யம் பணியில் கேரளா போலீஸ் மட்டுமின்றி குழந்தைகள் நல அமைப்பினரும், சமூக ஆர்வலர்களும் ஒன்றிணைந்து செயல்பட்டனர். இரவு 8.23 மணிக்கு ஆம்புலன்சை இயக்க துவங்கிய தமீம், மணிக்கு 76.4 கி.மீ., வேகத்தில் 516 கி.மீ., தூரத்தை 6.45 மணி நேரத்தில் கடந்து சென்றுள்ளார்.கண்ணூரில் துவங்கி, வழியில் கோழிக்கோடு பெட்ரோல் பங்க்கில் மட்டுமே ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டுள்ளது. புயல் வேகத்தில் ஆம்புலன்சை இயக்கி, குழந்தையின் உயிரை காப்பாற்றிய தமீமிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. ஆம்புலன்ஸ் சென்ற வீடியோ, போட்டோக்கள் மற்றும் இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கு போலீசாரும் சிறப்புக் குழு அமைத்து, போக்குவரத்தை சரி செய்து கொடுத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (78)

pollachipodiyan - pollachi,COIMBATORE.,இந்தியா
18-நவ-201708:09:49 IST Report Abuse
pollachipodiyan எவ்வகையிலாவது கேரளாவை பிறர் பார்வைக்கு கொண்டு வரவேண்டும் எனும் மனக்கணக்கே வெளுச்சத்திட்கு வருகிறது.
Rate this:
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
21-நவ-201707:11:38 IST Report Abuse
என்னுயிர்தமிழகமேஉண்மை தான் சார்,...
Rate this:
Cancel
pollachipodiyan - pollachi,COIMBATORE.,இந்தியா
18-நவ-201708:06:57 IST Report Abuse
pollachipodiyan தமீமுக்கு நன்றி. குழந்தை நலம் பெற வாழ்த்துக்கள். ஓகேய், உயிரை காப்பாற்ற இவர்கள் எடுத்த முயட்சியில், இவர்கள் உயிர் போய் இருந்தால்? கேரளா செய்யும் எதையும் ஒரு முன்னுதாரணமாக எடுப்பது ஒரு விதத்தில் முட்டாள்தனமே. இதே கேரளாவில், குழந்தையை எடுத்து சென்ற அம்புலன்ஸுக்கு வழி விடாமல் இடைச்சல் செய்த வாலிபரை கைது செய்தார்கள்.தமிழருக்கு மருத்துவ வசதி மறுப்பு. இப்பொழுது ஐயப்ப சாமி தரிசனம் செய்ய செல்லும் தமிழர்களுக்கு ஏதாவது ஓன்று எனில் மருத்துவ வசதி யார் செய்வார்கள்? . இத்தகைய சூழலில் சாமி தரிசனத்துக்கு செல்வது சரியா?,எனும் கேள்விகள் மனதில் எழுகின்றன. 51 கிலோமீட்டரில் ஆஸ்பத்திரி இருக்க 550 கிலோமீட்டர் அட்வெஞ்சர் பயணம் இத்தனை அதிவேகத்துடன் செல்ல அவசியத்துக்கு சொல்லும் ஒரே காரணம், குழந்தையின் உடல் நலம், ஆனால் அனைவரும் ஏதாவது ஒரு ஆபத்தில் சிக்கி இருந்தால், அஞ்சு உயிரும் போய் இருக்குமா? இதே போல் வேறு மாநிலங்களில் இதே காரணம் கொண்டு மிக வேகத்தில் சென்றால், காவல்த்துறை சும்மா இருக்குமா? சுப்ரீம் கோர்ட் தான் சும்மா இருக்குமா? இப்படி செல்லும்பொழுது விபத்து ஏட்பட்டு வேறு நபர்களுக்கு ஆபத்து , அச்சிசிடெண்ட் ஆகி இருந்தால் அதற்க்கு யார் பொறுப்பு? கேரளாவில் நடக்கும் சில முட்டாள்தனமான செயல்களையெல்லாம் கண்மூடிக்கொண்டு பாராட்டக்கூடாது. இன்றும் தமிழருக்கு மருத்துவ வசதி மறுப்பு எனும் செய்தி கண்டேன். இது உண்மை எனில், கேரளத்தவர் எந்தனை சாகசம் செய்தலும் அங்கு மனித நேயம் இல்லை என்பது தெரிய வரும்பொழுது மனம் வலிக்கிறது.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
18-நவ-201706:56:49 IST Report Abuse
D.Ambujavalli டிரைவரின் அர்ப்பணிப்புணர்ச்சிக்கு பாராட்டுக்கள் இவரின் சேவைக்காகவாவது குழந்தையைக் கடவுள் காப்பார். உங்கள் குடும்பம் ஆசீர்வதிக்கப்பதாக நன்கு விளங்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X