அக்டோபரில் விமானத்தில் பறந்த 1.04 கோடி பேர்
அக்டோபரில் விமானத்தில் பறந்த 1.04 கோடி பேர்

அக்டோபரில் விமானத்தில் பறந்த 1.04 கோடி பேர்

Updated : நவ 17, 2017 | Added : நவ 17, 2017 | கருத்துகள் (8) | |
Advertisement
புதுடில்லி: இந்தியாவில், கடந்த அக்டோபர் மாதம் 1.04 கோடி பேர் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்துள்ளனர். ஒரு மாதத்தில் அதிகம் பேர் விமான பயணம் செய்த பட்டியலில்இது இரண்டாவது முறையாக இடம் பிடித்துள்ளது. சாதனை அளவாக, இந்த வருடம் மே மாதம் 1 கோடியே 1 லட்சம் பேர் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்துள்ளனர். கடந்த 2016 அக்டோபர் மாதத்தில் 86.7 லட்சம் பேர் பயணம் செய்தனர். இது இந்த ஆண்டு 20.5
அக்டோபரில் விமானத்தில் பறந்த 1.04 கோடி பேர்

புதுடில்லி: இந்தியாவில், கடந்த அக்டோபர் மாதம் 1.04 கோடி பேர் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்துள்ளனர்.

ஒரு மாதத்தில் அதிகம் பேர் விமான பயணம் செய்த பட்டியலில்இது இரண்டாவது

முறையாக இடம் பிடித்துள்ளது. சாதனை அளவாக, இந்த வருடம் மே மாதம் 1 கோடியே 1 லட்சம் பேர் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்துள்ளனர்.

கடந்த 2016 அக்டோபர் மாதத்தில் 86.7 லட்சம் பேர் பயணம் செய்தனர். இது இந்த ஆண்டு 20.5 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே போல், கடந்த ஜனவரி முதல் அக்டோபர் வரை 9.5 கோடி பேர் விமானத்தில் பயணம் செய்துள்ளனர். கடந்த வருடம் இதே காலகட்டத்தில் 8.1 கோடி பேர் பயணம் செய்திருந்தனர்.



காரணம்:

இது குறித்து டிக்கெட் முன்பதிவு இணையதள நிர்வாகி கூறுகையில், பண்டிகை காலகட்டத்தில் விமானத்தில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கட்டண குறைப்பு, புதிய வழிகளில் விமானம் இயக்குதல் உள்ளிட்ட சில காரணங்களால் விமானத்தில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புது வருட பிறப்பு காலத்தில் விமான பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


அக்டோபரில் உள்நாட்டு விமானங்களில் 1.04 கோடி பேர் பயணம் செய்துள்ள நிலையில், இண்டிகோ விமானங்களில் 39.5 சதவீதம் பேரும், ஜெட் ஏர்வேஸ் விமானங்களில் 17.2 சதவீதம் பேரும், ஸ்பைஸ் ஜெட் மற்றும் ஏர் இந்தியாவில் 13.1 சதவீதம் பேரும், கோ ஏர் விமானங்களில் 8.8 சதவீதம் பேரும், டாடா ஜேவி ஏர்லைன்சில் 7.8 சதவீதம் பேரும் பயணம் செய்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (8)

Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
18-நவ-201708:21:10 IST Report Abuse
Kasimani Baskaran மந்தமான பொருளாதாரத்தால் வந்த லாபம்...
Rate this:
Cancel
skv - Bangalore,இந்தியா
18-நவ-201704:35:53 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> முக்கிய காரணம் நேரம் சேமிக்க விமானமலே பார்க்கிறோம் ரெண்டு ரயில் பயணமலே கொலை கொள்ளை அதிகமாயிட்டுது 3 நிம்மதியான பயணம் ஒரே குறை என்னான்னா விமான நிலையம் லெந்து வீடு போய் சேர சித்த நேரம் ஆறது , டாக்சிலே போனால் கூட டிராபிக் ஜாம் நாலா நொந்துப் போறோம் , டெல்லி டு சென்னை ரயில்லே வந்தால் சோத்து மூட்டை தூக்கவேண்டும் ரிசெர்வேஷன் வேறு தொல்லை flight உக்காந்து தான் போறோம்னாலும் சில மணில போயிடறோமே அதான் வசதியா இருக்கு கோவை டு சென்னை அல்லது பெங்களூர் என்றால் ஒரே மணி நேரம்தான்
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
17-நவ-201722:47:23 IST Report Abuse
g.s,rajan இந்தியாவுல இந்த ரோட்டையே பல இடங்களில் காணோம் ,தேட வேண்டி இருக்கு தேடினாலும் கிடைக்காது .மேலும் வழிப்பறிக் கொள்ளை மாதிரி எங்க பார்த்தாலும் டோல் கேட் வேறு ,சாலைக்கென ஒதுக்கப்பட்ட நிதி வசூலித்த பிறகும்சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையர்கள் மாதிரி மடக்கி மடக்கி தொடர்ந்து சுங்கம் வசூலிக்குறாங்க, அதைவிடக் கொடுமை இந்த ரயில்ல போறதுக்குள்ள எங்க பார்த்தாலும் மண்டபப் படி மாதிரி சிக்னலில் நின்னு நின்னு மணிக்கணக்கில் தேவுடு காத்து பொறுமையே போயிடுது ரொம்பவே சோடிக்கிறாங்க தட்கல் டிக்கெட் அப்படின்னு செயற்கையா தட்டுப் பாடு செஞ்சு மக்களிடம் அடாவடியாக பகல் கொள்ளை அடிக்கிறாங்க ,இரவு நேரங்களில் கேட்கவே வேண்டாம் பாக்கும் வசதி அப்படின்னு போட்டு தாறுமாறா வசூலிக்குறாங்க ,இந்த சைட் பர்த் பயணிகள் காலை நீட்ட முடியாம தூங்க முடியாம படும் அவதி ரொம்பவே கஷ்டம் ,உயரமா இருக்குறவங்க பாடு ரொம்பவே திண்டாட்டம் அப்படியே பாம்பு மாதிரி காலை மடக்கிகிட்டு சுருண்டு தான் படுக்கணும் ,அப்படி இப்படின்னு நெளியணும் . அப்புறம் அந்த ரயில்ல கிடைக்கிற கழுநீர் காப்பி ,தண்டமான தேநீர் ,வயிற்றை பதம் பார்க்கும் டிபன் மற்றும் சாப்பாடு ரொம்பக் கொடுமையோ கொடுமை பெரும்பாலும் பல ரயில்கள் தலை எழுத்து காலதாமதம் தான் ,இந்த ரயிலை நம்பி வேற ஒரு ரயிலைப் பிடிக்கும் பயணிக்கு ரத்த அழுத்தம் தான் எகிறும் கவலைப் பட்டு கவலைப் பட்டு சுகரும் நிச்சயம் ஏறிடும் மொத்தத்தில் டென்ஷனோ டென்ஷன் போதாக்குறைக்கு பல முக்கிய ரயில் நிலையங்களில் போதிய நடைமேடை இல்லாத காரணத்தினால் ஒரு ரயில் கிளம்பினால்தான் அடுத்த ரயில் நடைமேடைக்கு வரமுடியும் ,இதுபோல் நடைமேடையைக் காலி செய்யும் நோக்கத்தில் அந்த நேரத்தில் கிளம்பும் ரயிலை எப்படி மக்கள் பிடிக்க முடியும்??? ஏகப்பட்ட சிக்கல் எனவே இனி மக்கள் விமானப் பயணம்தான் போக முடிவு செய்வாங்க ,போடாத ரோட்டுக்கு வரி ,குண்டும் குழியுமான பல்லாங்குழிச் சாலைகளுக்கு வரி கட்டி மக்கள் கண்ட பலன்தான் என்ன??ஒன்றுமே இல்லை . ஜி.எஸ்.ராஜன் சென்னை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X