பதிவு செய்த நாள் :
ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை விட
ஜனாதிபதிக்கு சம்பளம் குறைவு

புதுடில்லி:மூத்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மற்றும் முப்படை தளபதிகளின் சம்பளத்தை விட, ஜனாதிபதி, துணை ஜனாதிபதியின் சம்பளம் குறைவாகவே உள்ளது. சம்பளத்தை உயர்த்தும் பரிந்துரை மீது இரண்டாண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

 ஐ.ஏ.எஸ்., IAS, ஜனாதிபதி, President,  சம்பளம், Salary,துணை ஜனாதிபதி,Vice President, 7-வது சம்பளகமிஷன்,7th Pay Commission,  மத்திய அமைச்சரவை,Union Cabinet, மத்திய அரசு , Central Government, கவர்னர், Governor,

நாட்டின் உயர் பதவியில் உள்ள ஜனாதிபதி, முப்படைகளின் தலைவராகவும் உள்ளார்.

மத்திய அரசின் அனைத்து அறிவிப்புகளும், ஜனாதி பதியின் பெயரிலேயே வெளியிடப் படுகின்றன. ஜனாதிபதியின் சம்பளம், 2008ல் உயர்த்தப்பட்டது. அதன்படி, ஜனாதிபதிக்கான தற்போதைய மாத சம்பளம், 1.50 லட்சம் ரூபாய். துணை ஜனாதி பதிக்கு, 1.25 லட்சம் ரூபாயும், மாநில கவர்னர் களுக்கு, 1.10 லட்சம் ரூபாயும் சம்பளமாக வழங்கப்படுகிறது.

7-வது சம்பளகமிஷன் பரிந்துரை, 2016 ஜனவரியில் இருந்து அமல்படுத்தப் பட்டது. அதன்படி, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளில் உயர் பதவியான, மத்திய அமைச்சரவை செயலருக்கான மாத சம்பளம், 2.50 லட்சம் ரூபாயாக உயர்த்தப் பட்டது. மத்திய அரசு செயலர்களுக்கான மாதச் சம்பளம், 2.25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.முப்படை தளபதி களுக்கு, மத்திய அமைச்சரவை செயலருக்கு

Advertisement

இணையான சம்பளம் வழங்கப் படுகிறது. முப்படைதளபதிகள், மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை விட, ஜனாதிபதி,துணை ஜனாதிபதி, கவர்னர் களுக்கான சம்பளம் குறைவாக உள்ளது.

இதையடுத்து, இவர்களது சம்பளத்தை உயர்த்தி, மத்திய உள்துறை அமைச்சகம் தன் பரிந்துரைகளை அனுப்பியுள்ளது. அது மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, ஒப்புதல் வழங்கப்படவேண்டும். அதன்பின், அதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும். ஆனால், இதுவரை மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறப் படவில்லை.

ஜனாதிபதிக்கான சம்பளத்தை, 5 லட்சம் ரூபா யாகவும், துணை ஜனாதிபதிக்கு, 3.5 லட்சம் ரூபாய், கவர்னர்களுக்கு, மூன்று லட்சம் ரூபாயாக உயர்த்த பரிந்துரைக்கப் பட்டுள்ளது. இதைத் தவிர, இவர்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தவும் பரிந்துரைக்கப் பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
20-நவ-201713:30:41 IST Report Abuse

Malick Rajaநாட்டிலிலுள்ள மக்கள்தொகையில் 40%. சதவீதத்தினர் மாற்றுக்கோவணம் இல்லாமலும் இருவேளை மட்டுமே உணவருந்திவரும் நிலையில் இப்படி சம்பளத்தை ஏற்றிக்கொண்டு சென்றால் விலைவாசியை குறைப்போம் என்று சொல்வது ஏமாற்றும் வேலை.. சம்பள உயர்வால் விலைவாசி கூடும் ...

Rate this:
rajasekar - later,யூ.எஸ்.ஏ
20-நவ-201712:08:10 IST Report Abuse

rajasekarசம்பளமே வேண்டாம்னு சொல்றவங்களுக்கு இந்த வேலையை தரலாம்..

Rate this:
vnatarajan - chennai,இந்தியா
20-நவ-201710:54:48 IST Report Abuse

vnatarajanஇந்த மும்மூர்த்திகளுக்கும் வெறும் உயர்ந்த பதவியை வைத்தோ அல்லது சம்பள கமிஷன் அடிப்படையிலோ சம்பளம் கூட்டி கொடுக்க கூடாது அதற்கு தகுந்த பொறுப்பும் வேலையும் இருக்கிறதா என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். ஜனாதிபதி முப்படை தளபதிகளுக்கும் தலைவர். உபஜனாதிபதியோ ராஜாய சபாவிற்கு தலைவர். இவர்களுக்கு சம்பளம் ஓரளவுக்கு கூடுதல் கொடுக்க வேண்டியதுதான். ஆனால் கவர்னர் போஸ்ட் வேஸ்ட் அவர் எந்த சபையையும் நடத்தி செல்வதில்லை. தற்போது மத்திய அரசின் ஏஜெண்டாக இருந்து வெறும் ஆய்வுதான் நடத்துகிறார்கள். மேலும் யூனிவர்சிட்டி அல்லது காலேஜிகளில் பட்டமளிப்பு விழாவிற்கு செல்கிறார்கள் ஒன்று அந்த போஸ்ட்டை எடுத்துவிடவேண்டும் அல்லது தற்போதைய சம்பளமே போதுமானது

Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X