1941 நவம்பர் 21
ஆனந்திபென் மபட்பாய் படேல், குஜராத் மாநிலம், மெஹ்சானா மாவட்டம், கரோட் என்ற கிராமத்தில், ௧௯௪௧ நவ., ௨௧ல் பிறந்தார். 1970ல் ஆசிரியையாக மோனிபாபா வித்யாலயா பள்ளியில் சேர்ந்த அவர், தலைமை ஆசிரியரானார். அரசியலில் நுழைந்த அவர், பா.ஜ.,வில் ஐக்கியமானார். 1994ல் ராஜ்ய சபா, எம்.பி.,யானார். குஜராத் மாநிலத்தில், 2007 - 2014 வரை, வருவாய், சாலைகள் மற்றும் கட்டடங்கள், ஊரக வளர்ச்சி, பேரிடர் மேலாண்மை, மூலதனத் திட்டங்கள் துறைகளின் அமைச்சராக பதவி வகித்தவர். பிரதமர் மோடிக்கு, பள்ளி தோழியாக
இருந்தவர்.குஜராத் மாநில சட்டசபைக்கு, தொடர்ந்து நான்குமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே பெண்மணி. 2014௪ ல் நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட மோடி, குஜராத் முதல்வர் பதவியை விட்டு விலகினார். குஜராத் முதல்வராக, ஆனந்திபென் மபட்பாய் படேல் பொறுப்பேற்றார். அவர் பிறந்த தினம் இன்று.