சிறப்பு பகுதிகள்

பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி

பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி - 19

Added : நவ 20, 2017
Advertisement
 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி - 19, kalvipurachi

கல்வித் தரம் உயர வேண்டுமானால் கல்விச் சுதந்திரம் தேவை. இந்த சுதந்திரம் ஆசிரியர்களுக்கும் கல்வி நிறுவன நிர்வாகி களுக்கும் வழங்கப்பட வேண்டும். இதன் அடிப்படையில் தான் பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்த, தகுதியான பள்ளிகளுக்கு தன்னாட்சி தருவது அவசியமாகிறது.

இதை வலியுறுத்தும் வகையில் உருவாக்கி உள்ள கருத்துருவை, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன், பாடத்திட்ட, கலைத்திட்ட குழு தலைவரும், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தருமான அனந்தகிருஷ்ணன் ஆகியோரிடம் தினமலர் நாளிதழின் வெளியீட்டாளர் ஆர்.லட்சுமிபதி வழங்கியிருந்தார். இந்த கருத்துரு குறித்து, கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள், தங்கள் கருத்துகளை, தினமலர் வெளியீட்டாளர், ஆர்.லட்சுமிபதியுடன் பகிர்ந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் தினமலர் வாசகர்கள் சில கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அந்த கருத்துகளையும் அவை தொடர்பான தினமலர் விளக்கத்தையும் இங்கே அளித்திருக்கிறோம்.

26. ஆதி, இயக்குநர், மாஃபா கல்விச் சேவை மையம், சென்னை.
Greetings from Ma Foi !
I feel really happy to read and learn about your contribution in the interest of education and youth of our country. I have been following up that regularly and sincerely. You have been championing the cause more religiously through your newspaper also. That really motivated me also to share, some of my thoughts through this write up. I fully endorse your views on granting functional autonomy to schools on merit. Need of the hour also. Sure your efforts in this regard will be supported by many and realized.


இளமையெல்லாம் வெறும் கனவு மயம் . . . .. .


தினமலர் நாளிதழின் பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி தொடரை வாசிக்கும் எனக்கு, ஒரு பழைய திரைப்பாடல் நினைவுக்கு வருகிறது.
தெளிவும் அறியாது ,
முடிவும் தெரியாது,
மயங்குது எதிர் காலம் . . . .
திரைப்பாடலின் சூழலும், காட்சி அமைப்பும் வேறு தான். ஆனாலும் இன்றைய நம் கல்வி முறையையும், கல்விக் கொள்கையையும், இளைய தலைமுறையின் நிலையையும் நினைத்தால் மேலே உள்ள பாடல் வரிகள் எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது.

தெளிவும் அறியாது . . . . . பள்ளிக் கல்வி

எந்த வயதில் பள்ளிக்கு அனுப்புவது, எந்த வகைப் பள்ளிக்கு அனுப்புவது என்று பெற்றோருக்கு குழப்பம். நாம் கற்றுத் தருவது சரிதானா, முறைதானா என ஆசிரியருக்கு குழப்பம். என்ன கல்வி, என்ன கொள்கை என ஆட்சியாளர்கள் மற்றும் அனைவருக்கும் குழப்பம்....... பாவம், குழந்தைகள்! ஆரம்ப நிலையிலிருந்தே குழப்பமான, தெளிவற்ற சூழலே அனைத்து தரப்புகளிலும் நிலவுகிறது. இன்று வரை தொடக்கக் கல்வியின் முக்கியத்துவத்தை நாம் உணரவில்லை என்ற கல்வியாளர் ராஜகோபாலனின் கூற்று மிகவும் சத்தியமானது. மேலும் நிர்வாகியும்,ஆய்வாளரும் ஒரே ஆளாய் இருக்க முடியாது என்ற முன்னாள் கல்வித் துறை செயலர் கோபாலசாமியின் பார்வை, எத்தகைய தீர்க்கதரிசனமான பார்வை.

முடிவும் தெரியாது . . . . . . . உயர் கல்வி

'நான் என்னவாகப் போகிறேன் ', என்ன படித்தால் வேலை கிடைக்கும், 'என் எதிர் காலம் எப்படி இருக்கும்' என்ற கேள்விகளுக்கு விடை தெரியாமலேயே அடுத்த நிலைக்குத் தள்ளப்படுகின்றனர் மாணவர்கள். ஆயிரக்கணக்கான கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், பல்வேறு பட்டப்படிப்பு, மேல்படிப்பு என பல வேறு பாதைகள். எந்த பாதையில் செல்லலாம், எப்படி வெற்றி அடையலாம் என்ற அதீத கவலையோடு இளைய தலைமுறையினரும், பெற்றோரும் உள்ளனர். எது எனது இலக்கு அல்லது குறிக்கோள் என்பது அறியாது ஒரு தடுமாற்றம்.

மயங்குது எதிர் காலம் . . . இளமையெல்லாம் வெறும் கனவு மயம்


இன்றைய இளைய தலைமுறைக்கேற்ற சரியான, தேவையான கல்வி முறை இல்லாமை, வேலை வாய்ப்பு வசதிகள் இல்லாமை, சரியான வழி காட்டுதல் இல்லாமை போன்றவற்றால் தினசரி வாழ்க்கையில் நாம் காணும் சமூக அவலங்கள் ஏராளம். தேசிய மற்றும் சர்வதேச அளவில் உள்ள தேர்வுகளில் நம் மாணவர்களின் கற்றல் மற்றும் புரிதல் அளவு மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. அதே வேளையில் இந்திய கல்விச் சந்தையின் மதிப்பு மட்டும் ஏறக்குறைய ரூபாய் 6,67,200 கோடியாக உள்ளது. சராசரியாக ஆண்டுக்கு 16.5 என்ற சதவிகிதத்தில் வளர்ச்சி அடைகின்றது என்பதனையும் நாம் அறிய வேண்டும் .
சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும் ஒவ்வொரு காலகட்டத்திலும் இன்று வரை வேலையாட்களை உருவாக்கும் கல்வி முறை தான் உள்ளதே தவிர மாணவர்கள் சுதந்திரமாக, சுயமாக, புதுமையாக சிந்திக்கவும், செயலாற்றவும் செய்யும் கல்வி இல்லை. வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் உலகிலேயே மிகப் பழமையான நாகரிகத்தைக் கொண்ட நம் நாடு அதிகமான இளைஞர் சக்தி கொண்டது.

செயல்படும் நேரமிது !

அன்றைய கால கட்டத்தில் கல்வி மூலம், சமூக மாற்றம் ஏற்படுத்த முயற்சி உண்டானது. ஆனால் இன்று சமூகத்திலிருந்து தான் கல்வியில் மாற்றம் பற்றிய சிந்தனையும், செயலும் வர வேண்டும். ஏனென்றால் இன்று 'கல்வி 'என்பது யாருடைய குழந்தையும் இல்லை (உஞீதஞிச்tடிணிண டிண் ணணிஞணிஞீதூ'ண் ஞிடடிடூஞீ) என்ற நிலையே உள்ளது . பாமர மற்றும் நடுத்தர மக்களையும் அதிகம் கொண்ட நம் நாட்டில் சமூக சிந்தனையும், அக்கறையும் கொண்ட அனைவரும், ஊடகங்கள் உட்பட, ஊர் கூடி தேர் இழுக்க வேண்டிய நேரம் இது.

மனிதம், வளம், மேம்பாடு

புதிய கல்விக் கொள்கையானது சமூக முன்னேற்றத்தினையும், மேம்பாட்டினையும் அடிப்படையாக கொண்டு உருவாக வேண்டும். "மனிதம், வளம், மேம்பாடு என்பதனை” மனதிற்கொண்டு கல்விக் கொள்கை உருவாக ஒத்த சிந்தனையும், கருத்தும் கொண்டோர் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். இப்போது செயல்படவில்லையெனில் பின்னாளில் அது ஒரு வரலாற்றுப் பிழையாகக் கருதப்படும். தினமலர் நாளிதழின் இந்த முயற்சி பாராட்டுதலுக்கும், போற்றுதலுக்கும் உரியது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இனி அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய நேரமிது. அடுத்த தலைமுறையானது நல்ல தெளிவுடனும், தீர்க்கமான முடிவுடனும் ஒரு பிரகாசமான எதிர் காலத்தைப் பெற அனைவரும் ஒன்றிணைவோம் !

தினமலர் விளக்கம்: தங்களுடைய கடிதம் எங்களுக்கு பெரும் புத்துணர்ச்சித் தந்துள்ளது. 'பள்ளிகளில் தன்னாட்சி' என்ற கொள்கையில் நாம் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு மிகுந்த வலு சேர்க்கிறது. மனப்பூர்வமாக நன்றி தெரிவிப்பது தவிர்க்க முடியாத ஒன்றாக நாம் உணர்ந்தோம்.
மாணவர்களின் எதிர்காலத்தில் தாங்கள் வெளிப்படுத்தியிருக்கும் தீவிர அக்கறையும், கவலையும் தங்களுடைய உன்னதமான சமூகப் பொறுப்புணர்ச்சியை நன்கு வெளிப்படுத்துகிறது. நாம் இருவரும் ஒரே தளத்தில் ஒரே குறிக்கோளுடன் இயங்குகிறோம் என்ற உண்மை நம்மை ஊக்குவிக்கிறது. இன்றைய கல்வியின் குழப்பத்தையும், நாளைய கல்வியில் மிகச் சரியான பாதையையும் தாங்கள் அழகான சொற்றொடர்களில் குறிப்பிட்டுள்ளீர்கள். அவற்றை இங்கே தருவதில மகிழ்ச்சி அடைகிறோம்.
எந்த பாதையில் செல்லலாம், எப்படி வெற்றி அடையலாம் என்ற அதீத கவலையோடு இளைய தலைமுறையினரும், பெற்றோரும் உள்ளனர். எது எனது இலக்கு அல்லது குறிக்கோள் என்பது அறியாது ஒரு தடுமாற்றம்.

'மனிதம், வளம், மேம்பாடு' என்பதனை மனதில் கொண்டு கல்விக் கொள்கை உருவாக ஒத்த சிந்தனையும், கருத்தும் கொண்டோர் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்.'
தடுமாற்றத்திற்கும் சரியான தீர்வுதான் தாங்கள் சுட்டிக் காட்டியுள்ள புதிய கல்விக் கொள்கை. இது மிகவும் ஆழமானது, விரிவானது; செறிவு நிறைந்தது. இந்தப் புதிய கொள்கை என்ற விடிவெள்ளியை அடைய நாம் எடுத்திருக்கும் முதல் அடி தான் 'பள்ளிகளில் தன்னாட்சி'. இங்கேயும் நாம் உறுதியாக நம்பும் மற்றுமொரு செய்தியை ஆணித்தரமான சொற்களில் அடக்கியுள்ளீர்கள். அதுதான், பள்ளிகளில் தன்னாட்சி மலர, இது தான் சரியான நேரம் என்பது. "இப்போது செயல்படவில்லையெனில் பின்னாளில் அது ஒரு வரலாற்றுப் பிழையாகக் கருதப்படும்'.

இப்போது எப்படி செயல்பட வேண்டும்? "சமூக சிந்தனையும், அக்கறையும் கொண்ட அனைவரும், ஊடகங்கள் உட்பட, ஊர் கூடி தேர் இழுக்க வேண்டிய நேரம் இது.' நாம் உறுதியாக நம்புவது 'பள்ளிகளில் தன்னாட்சி' என்ற தேர் இழுக்க, ஊர் கூடத் தொடங்கும், தொடங்கியிருக்கிறது; இது மேலும் தொடரும். இவ்வகை கருத்து பரிமாற்றங்களால் தடுமாற்றம் மாறும், குறிக்கோள் தெளிவு நிகழும்; சமூக உயர்வு உறுதிப்படுத்தப்படும்.
மறுபடியும் சொல்லி முடிக்கிறோம்: தேர் இழுக்கும் எங்கள் முயற்சியில் வடமிழுக்க தங்களுடைய வலிமை யான கரத்தை, தந்ததற்கு நன்றி! வணக்கம்.

-தொடரும்

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X