பரமக்குடி, பரமக்குடி பகுதிகளில் போதிய மழை இன்றி பல ஆயிரம் ஏக்கர் நெல் காயும்
தருவாயில் உள்ளது. இதனால் விவசாயிகள் கண்ணீர் விடும் சூழலில் வைகையில்
தண்ணீர் திறக்கப்படு
மா என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் வானம் பார்த்த பூமியாகவே இன்றளவும் தவித்து வருகிறது.
இந்நிலையில் பரமக்குடி தாலுகாவில் பரமக்குடியில் சுமார் 14 ஆயிரம் ஏக்கர்,
போகலுாரில் 11 ஆயிரம் ஏக்கர், நயினார்
கோவிலில் 21 ஏக்கர் என நெல்
விதைக்கப்பட்டுள்ளது. இதன் படி தொடர்ந்து விவசாயிகள் நிலத்தை
பன்படுத்தியது துவங்கி, விதைப்பு, களை எடுப்பு, உரம், பூச்சிக்கொல்லி
மருந்துகள் என பல ஆயிரம் செலவு செய்துள்ளனர்.
ஆனால் இப்பகுதியில் பருவமழை என்பது வழக்கம் போல் கானல்நீராகவே
ஆகி விட்டது. கடந்த மாதம் சில நாட்கள் பெய்த அடை மழையை நம்பி
விவசாயிகள் உற்சாகமாக நெல் விவசாயத்தில் ஈடுபட்டனர். தற்போது
25 முதல் 50 நாள் இளம் பயிராக பச்சை பசேல் என வயல் காட்சியளிக்கின்றன. இந்நிலையில் சுமார் 20 நாட்களுக்குள் கதிர் விடும் தருவாயில்
மற்றொரு மழையை எதிர்நோக்கி விவசாயிகள் காத்துள்ளனர். ஆனால்
பருவகால மாற்றத்தில் இரவு நேரங்களில் பனி இறங்கி, காலையில் வெயில்
சுட்டெரிக்கிறது.
இதனால் மகசூல் கிடைக்குமா என்ற ஏக்கத்தில் விவசாயிகள் கண்ணீர் விடும்
சூழல் நீடிக்கிறது. மேலும் ஆரம்பத்தில் பெய்த சிறு மழையால் சில கண்மாய்களில்
குட்டை போல் தண்ணீர் தேங்கி அதுவும் காய்ந்து வருகிறது.
விவசாயிகள் கோரிக்கை:
மேலுார் பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கடந்த வாரம் தொடர்ந்து 5 மணி
நேரத்திற்கும் மேலாக ரோடு மறியலில் ஈடுபட்டதின் காரணமாக அப்பகுதியில்
அரசு இயந்திரம் துரிதமாக செயல்பட்டு, மறுநாளே வைகையில்
தண்ணீர் திறக்க ஏற்பாடு
செய்யப்பட்டது.
இந்நிலையில் பரமக்குடியில் உள்ள அனைத்து மக்கள்,
இயக்கம், விவசாயிகள் சார்பில் கலெக்டர் நடராஜன், அமைச்சர் மணிகண்டன்
ஆகியோரை சந்தித்து தண்ணீர் திறக்க மனு கொடுத்துள்ளனர். இதனையடுத்து
வைகையில் தண்ணீர் திறந்து விடும் பட்சத்தில் வைகை பாசனத்தை நம்பியுள்ள
பரமக்குடி, நயினார்
கோவில், போகலுார் உள்ளிட்ட பகுதியில் நெல் நல்ல
மகசூலை கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இல்லையென்றால்
வழக்கம் போல் விவசாயிகள் தங்களது விதை நெல்லை இழந்ததுடன்,
பல ஆயிரம் செலவு, நேர விரயம் என மீண்டும்
நஷ்டமடையும் சூழல் உருவாகும்.
ஆகவே மாவட்ட நிர்வாகம் விவசாயிகளின் துயர் துடைக்கும் நோக்கிலும்,
உணவு பஞ்சத்தை தவிர்க்கவும் உடனடியாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு
தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.