இன்றைய நவீன யுகத்தில் சொகுசு வாழ்க்கையை விரும்பும் உலகில், தகுதி இருந்தும், எளிமையாக மற்றும் இளைஞர்களின் வழிகாட்டியாக திகிழ்கிறார் 85 வயது இளைஞர்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேயைச் சேர்ந்தவர் சம்பாஜி பைடே,85,. எம்.எஸ்., அணு அறிவியல் தங்கப்பதக்கம் பெற்றவர்.
தனியார் கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றினார். 100க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் தேசிய விருதுகளை பெற்றுள்ளார். 67 மாணவர்களின் ஆராய்ச்சி படிப்புக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். அமெரிக்க விண்வெளி மையமான நாசாவின் வழிகாட்டுதல் குழுவில் பணியாற்றிய ஒரே இந்தியர் என்ற பெருமைக்குரியவர்.விஞ்ஞானிகள், பிரபல அரசியல்வாதிகள், ஆய்வு மாணவர்கள் என பலரும் இவருக்கும் பழக்கம். இவ்வளவு சாதனைகளுக்கு சொந்தக்காரரான இவர், இதுவரை யாரிடம் எந்த உதவியும் கேட்டதில்லை. மேலும் இன்று சாதாரணமானவர்கள் கூட கார் வைத்துள்ளனர்.
ஆனால் இவர் சைக்கிளில் மட்டுமே வைத்திருக்கிறார். எங்கு சென்றாலும் காலில் செருப்பு கூட அணியாமல் நடந்தே செல்வார். கதர் துணியை மட்டும் அணிவார். மகாராஷ்டிர மக்களிடம் மிக பிரபலமானவர்.தற்போது ஒரு அமைப்பை தொடங்கி சமூக சேவையில் ஈடுபடுகிறார். குருஜி என அழைக்கப்படும் இவரை 10 லட்சம் இளைஞர்கள் பின்தொடர்கின்றனர். சாகும் வரை நாட்டுக்காக உழைப்பதே நோக்கமாகக் கொண்டுள்ளார்.
பிரதமர் மோடி, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்களாலும் வெகுவாக பாராட்டப்பட்டவர். லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, இவரை பிரதமர் மோடி சந்தித்துள்ளார்.