சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சொத்துக்காக ஜெ., கொலை?: விசாரணை கமிஷனில் தீபா மனு

Added : நவ 23, 2017 | கருத்துகள் (24)
Advertisement
சொத்து, Property, ஜெயலலிதா கொலை, Jayalalitha Killing, விசாரணை கமிஷன், Inquiry Commission, தீபா, Deepa,சசிகலா குடும்பம், Sasikala Family,  ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா, Jayalalitha brother daughter Deepa,  தீபா கணவர் மாதவன்,Deepa husband Madhavan, மருத்துவமனை, hospital,
ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன்,Jayalalitha assistant Poonkaran,  ராஜாம்மாள்,  Rajamal, ஆம்புலன்ஸ் டிரைவர், Ambulance Driver,

சென்னை: 'சசிகலா குடும்பத்தினர், சொத்துக்காக, ஜெயலலிதாவை கொலை செய்திருக்கலாம்' என, விசாரணை கமிஷனில், ஜெ., அண்ணன் மகள் தீபா, மனு கொடுத்துள்ளார்.

ஜெ., மரணம் குறித்து விசாரிக்கும், விசாரணைக் கமிஷனில், இரு தினங்களுக்கு முன், தீபாவின் கணவர், மாதவன், புகார் மனு அளித்தார். நேற்று மாலை, தீபா புகார் மனு அளித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது: ஜெ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து, உறவினர்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. தகவல் அறிந்து நான் சென்றபோது, என்னை உள்ளே விட மறுத்து விட்டனர். ஜெ., என்னை சந்திக்க விரும்புவதாக, அவரது உதவியாளர், பூங்குன்றன், பலமுறை என்னிடம் தெரிவித்துள்ளார். ஆனால், சசிகலாவும், தினகரனும் என்னை சந்திக்க அனுமதிக்கவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும், ரத்த சொந்தங்களுக்கு, தகவல் தெரிவிக்க வேண்டும்; ஆனால், தெரிவிக்கவில்லை.

ஜெ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்று அவரை, சசிகலா குடும்பத்தினர் தாக்கி உள்ளனர். சொத்துக்காக அவரை கொலை செய்திருக்கலாம் என, சந்தேகிக்கிறேன். இது தொடர்பாக, சசிகலா, பூங்குன்றன், ஜெ., வீட்டில் உள்ள ராஜாம்மாள், ஆம்புலன்ஸ் டிரைவர் என, அனைவரிடமும், விசாரணை நடத்த வேண்டும் என, விசாரணை கமிஷனில், மனு கொடுத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
elangovan - TN,இந்தியா
14-டிச-201719:24:51 IST Report Abuse
elangovan As per the humanity, if any serious conditions it should be informed to blood relation first, it is not happening in the Ammas death case. There is something happening for great CM of Tamilnadu. What about the z plus security and state police personal guard security in poes garden for AMMA . Central government to be also enquire the security guard during the period. The 2nd main criminal was appolo hospital, keep 72 days in hospital why dont take it to different treatment in out side india. The brain control of SASI and team control all the activities and not to allow Deepa mam also . The brian criminal Sasi and team to be punished in this case. If not happen by law, people to do force in future through voting who will take care for ammas death case. It is not just like that it is happening for the CM of tamilnadu.
Rate this:
Share this comment
Cancel
Paranthaman - kadappa,இந்தியா
08-டிச-201715:00:26 IST Report Abuse
Paranthaman ஜெ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து, உறவினர்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. தகவல் அறிந்து நான் சென்றபோது, என்னை உள்ளே விட மறுத்து விட்டனர். ஜெ., என்னை சந்திக்க விரும்புவதாக, அவரது உதவியாளர், பூங்குன்றன், பலமுறை என்னிடம் தெரிவித்துள்ளார். ஆனால், சசிகலாவும், தினகரனும் என்னை சந்திக்க அனுமதிக்கவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும், ரத்த சொந்தங்களுக்கு, தகவல் தெரிவிக்க வேண்டும் இப்பொழுது இப்படி சொல்லும் தீபா அப்போதே நீதி மன்றம் போயிருக்க வேண்டும். பத்திரிகை களுக்கு செய்தி கொடுத்திருக்கவேண்டும். காவல் துறையிடம் புகார் அளித்திருக்க வேண்டும். போயஸ்கார்டன் முன் சத்தியாக்கிரகம் செய்திருக்கவேண்டும். இதற்கான விடிவு அப்போதே வந்திருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
SALEEM BASHA - RAS AL KHAIMAH-UAE,ஐக்கிய அரபு நாடுகள்
23-நவ-201718:45:38 IST Report Abuse
SALEEM BASHA மன்னா உங்களுக்கு ஒரு செய்தி பக்கத்துக்கு நாட்டு அரசன் நம் நாட்டின் மீது படையெடுத்து வரப்போகிறான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X