‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்| Dinamalar

‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்

Updated : நவ 24, 2017 | Added : நவ 24, 2017 | கருத்துகள் (337)
 தேசியவாத சக்தி,Nationalist power,  குஜராத் தேர்தல்,Gujarat election,  ஆர்க்பிஷப் ஆப் ஆர்க்டயோசிஸ் சர்ச்,Archbishop of  Archdiocese Church,  பாதிரியார், father, மதசார்பின்மை,secularism,  ஜனநாயகம்,  democracy,இந்திய அரசியலமைப்பு,Indian Constitution,   சர்ச் ,Church, சர்ச்சை, controversy,

காந்திநகர்: ‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்' என பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்க வேண்டாம் என்று மறைமுகமாக குஜராத் மாநில சர்ச் தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள ‛ஆர்க்பிஷப் ஆப் ஆர்க்டயோசிஸ்' சர்ச் பாதிரியார், சர்ச்சில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடித்தத்தில் தெரிவித்துள்ளதாவது: தேசியவாத சக்திகள் நம் நாட்டை ஆக்கிரமிக்க துடிக்கின்றன. சிறுபான்மையினர் மத்தியில் பாதுகாப்பின்மை அதிகரித்து வருகிறது. நாட்டில் மதசார்பின்மையும், ஜனநாயகமும் ஆபத்தில் உள்ளதை உணர்கிறோம். மனித உரிமைகள் மீறப்படுகின்றன. அடிப்படை உரிமைகள் காலால் நசுக்கப்படுகின்றன. ஒவ்வொரு நாளை கடப்பதும் பெரும் யுகமாக உள்ளது.

நடைபெறவுள்ள குஜராத் தேர்தல் நம்நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடியது. எல்லா உயிர்களையும் பாகுபாடின்றி மதிப்பவர்களுக்கு ஓட்டு போடுங்கள். இதன்மூலம் இந்திய அரசியலமைப்புக்கு உண்மையாக உள்ள நபரை நாம் தேர்ந்தெடுக்க முடியும். தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றும் கடமையை செய்யுங்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் பா.ஜ.,வுக்கு வாக்களிக்காதீர்கள் என மறைமுகமாக சர்ச் உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X